இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி
தாக்குதலின் அறிகுறிகள்:
- லைகளின் மேற்பரப்பில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்
- மலர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக விழுந்துவிடும்
- குருத்து காய்ந்துவிடும்
- புள்ளி வாடல் வைரஸ் நோயை பரப்புகிறது
பூச்சியின் விபரம்:
- இளம் குஞ்சு: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
- முதிர் பூச்சி: கருமையான, மயிரிழைகளால் ஆன இறகு காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- புள்ளி வாடல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்கவும்
- மஞ்சள் ஒட்டு பொறியை ஹெக்டேருக்கு 15 அமைக்கவும்
- கிரைசோப்பெர்லா கார்ணியா என்னும் இரை விழுங்கி பூச்சியை ஹெக்டேருக்கு 10,000 புழுக்களை விடவேண்டும்.
- மீத்தைல் டெமட்டான் 25 EC ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் அல்லது டைமெத்தோயேட் 30 EC ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும்
|
|
|
இளம் குஞ்சு |
முதிர்பூச்சி |
|