தாக்குதலின் அறிகுறிகள்
- பழங்களில் தொற்றரினது புல்லி இதழ் (அ) தண்டு இணைப்பு அல்லது பச்சை (அ) பழுத்த நிலையில் ஏற்படுகிறது. பழத்தின் மேற்பரப்பில் பொதுமைய வளையம் காணப்படும்
- பூஞ்சை, தோல் போன்று மற்றும் வெல்வெட் திரள் கொண்டு மூடப்பட்டது போன்ற கருப்பு வித்துக்கள் காணப்படும்
- பாதிக்கப்பட்ட பழம் விரைவில் விழுந்து விடும் மற்றும் 50 சதவீத இழப்புகள் முதிராத பழங்களால் ஏற்படுகிறது
நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
- ூஞ்சை பூஞ்சை - இழை தடுப்புள்ள, கிளையுடன், இளம் பழுப்புடன், பிறகு கருநிறத்துடன் காணப்படும்.
- சிதழ் தாங்கியிழை – 50-90 rm நீளம் மற்றம் கருநிறமுடையது.
- சிதலகம் - கூர்முனை, மியூரிபார்ம், கருநிறமுடையது மற்றும் தனித்தனியாக பரவும் தன்மை கொண்டது.
சாதகமான சூழ்நிலை
- சிதலகம் காலை 9.00 முதல் நண்பகல் 12.00 வரை மிக விரைவாக பரவும் தன்மை கொண்டது.
- நீர் தகைவு கொண்ட தாவரங்கள் அதிகமாக பாதிக்கப்படும்.
பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :
- காற்று மற்றும் மழை துளி சிதறல்களால் பரவுகிறது.
- உலர்ந்த நிலையில் மண்ணில் உள்ள இலைக் குப்பைகளில் 3 ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.
- விதை வழி பரவுக் கூடியது.
மேலாண்மை :
- நோயற்ற விதைகளை பயன்படுத்தவும்.
- நிலத்தை தூய்மையாக பராமாpக்கவும்.
- சோலனேசியே அல்லாத பியர் வகைகளை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தவும்.
- தகைவு நிலையைத் தவிர்க்க அளவான பாசன முறையை பயன்படுத்தவும்.
- திரம் 2 கிராம் , கிலோவை கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
- டைபோலோடான் 0.2% இரண்டு வார இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
|
|
முன்பருவ கருகல் |
|
கருப்பு வித்துக்கள் |
|
பாதிக்கப்பட்ட பழங்கள் |
|