பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

போமா அழுகல் :  போமா டெஸ்ட்ரக்டிவா

தாக்குதலின் அறிகுறிகள்
  • கருநிறப் புள்ளிகள் காணப்படுவது போமா அழுகல் நோயின் தனித்துவம்
  • சிறியது, கருநிறமுடையது, பரு போன்ற வெடிப்புகள் கொண்டது.
  • சிறுறபுள்ளிகள் யாவும் கரு இல்லா விதை குடவையாகும் (பிக்னீடியா)
  • மிதமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம்

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்

  • பூஞ்சை பூஞ்சையிழை, தடுப்புள்ள கிளையுடையது மற்றும் நிறமற்றது. 
  • பின் கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
  • கரு இல்லத விதைக்குடவை – பட்டையூட்டு வெடிப்பு, இருண்ட கோள வடிவம்.
  • பிக்னிடிய வித்துக்கள் - நிறமற்றது, கோள வடிவம்
சாதகமான சூழ்நிலை
  • மிதமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம்
  • தக்காளி பழம், 23°C ல் வேகமாக பழுப்பதனால் இந்நோயின் பாதிப்பு மிக விரைவாக ஏற்படுகிறது.

பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :

  • விதை வழி பரவக்கூடியது
  • பாதிக்கப்பட்ட நாற்றக்கள் மூலம் (அ) பாதிக்கப்பட்ட பயிர் குப்பைகளிலிருந்து மழைச்சிதறல்களால் பரவுகிறது
  • பழங்களில் - காயங்கள் மூலமாக, தண்டு வடுக்கல் மூலமாக
  • நோய்த் தாக்குதல், காய்களை விட கனிகளில் அதிகமாக ஏற்படுகிறது.
மேலாண்மை :
  • சொpசான் டஸ்ட்யைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்
  • சுத்தமான விதையை பயன்படுத்தவும்
  • தாவரங்கள் ஈரமான நிலையில், அறுவடையை தவிர்க்கவும்
  • பழங்களை மூட்டைக் கட்டும்போது ஏற்படும் கலப்படத்தை கட்டுப்படுத்த, 0.5% திரவ தார் சோப்பு கொண்ட 5%  வெண்கரக் கரைசலை, சலவை ஊரகமாக பயன்படுத்தவும்.
பிம்பிள் போன்றகருப்பு வெடிப்புகள்
பூஞ்சை வித்துக்கள்
குறுக்கு பிரிவில் பாதிக்கப்பட்ட தக்காளி

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016