பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

சௌதர்ன் கருகல் நோய் : ஸ்கிலீரோசியம் ரால்ப்சி

தாக்குதலின் அறிகுறிகள்
  • அதிக வெப்பநிலையில் பாதிப்பு ஏற்படுத்தும்.
  • முதிர்ந்த தாவரங்களில் தாவரத்தின் அடிப்பகுதியில் மண்ணின் மேற்பரப்பில் அதிகமாக தாக்கப்படுகிறது மற்றம் முபமையாக பட்டை வளையமிட்ட தோற்றம் காணப்படுகிறது.
  • தாவரத்தின் மேல்பகுதி வாடி, விரைவில் இறந்து விடுகிறது.
  • பூஞ்சை இழை, நோயுற்ற திசு மீது வளர்ந்து, பின் மண்ணின் மேற்பரப்பில் பூஞ்சை நு}ல்கள் ஒர் வெண்ணிற பாய் போல பரவுகிறது.
  • பின் வேர் மண்டலத்தினுள் நுழைந்து தாவரத்தை அழித்து விடுகிறது.

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்

  • பூஞ்சை - பழங்களில் குழி ஏற்பட்டு, மஞ்சள் நிறப்புள்ளிகள் வளர்ந்து, பழம் அழுகி, பின் வெள்ளை நிற பூஞ்சாண்கள் பழம் முழுவதும் பரவிவிடுகிறது.
  • மண் வழிப்பரவுதல் , இயந்திரங்கள் மூலம் (அ) நீர்ப்பாசனங்கள் மூலம், களைகள் மற்றும் மற்றப் பயிர்கள் மூலம் பரவுகிறது.
Gridled surface Mycelium growth Infected plant
சாதகமான சூழ்நிலை
  • ஈரமான சு{ழ்நிலையில் அதிகமான வெப்பநிலையில் 185-95°C F

பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :

  • பூஞ்சை மண்ணில் படும் இலைகள் பழங்கள் போன்ற எல்லாவற்றையும் அழித்து விடுகிறது.
  • பழங்களில் குழி ஏற்பட்டு மஞ்சள் நிறப்புள்ளிகள் வளர்ந்து, பழம் அழுகி, பின் வெள்ளைநிற பூஞ்சாண்களால் பழம் முழுவதும் பரவி விடுகிறது.
  • மண் வழிப்பரவுதல், இயந்திரங்கள் மூலம் (அ) நீர்ப்பாசனங்கள் மூலம், களைகள் மற்றும் மற்றப் பயிர்கள் மூலம் பரவுகிறது.
மேலாண்மை :
  • குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு மாற்றுப் பயிர்கள் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்
  • தாவரங்களுக்கிடையில் குறைந்த இடைவெளி மற்றும் அதிகபட்ச நீர்ப்பாசனம் போன்றவை நோய் வளர்ச்சி பெறுகிறது.

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016