பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

புசோரியம் அழுகல்  :  புசோரியம் ஆக்ஸிஸ்போரம்

தாக்குதலின் அறிகுறிகள்

  • வளர்ச்சி குன்றி, இலை உதிர்தல், மற்றும் கீழ்நோக்கி வளைந்து, பின் தாவரம் வாடி இறத்தல்
  • பாதிக்கப்பட்ட தாவரத்தின் கடத்துத் திசுக்கள், அடர் பழுப்பு நிறத்தில் மாறிவிடும்.
  • பழங்களில் குறைவான நோய்த்தொற்ற ஏற்படுகிறது.  இதனை கடத்துத்திசுக்களில் ஏற்படும் நிற மாற்றத்தின் மூலம் கண்டறியலாம்.

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்

  • பூஞ்சை - பூஞ்சை இழை – தடுப்புள்ள, நிறமற்றது பின் க்ரிம் நிறத்திற்கு மாறிவிடும்
  • நுண் சிதலகம் - ஒரு செல்லுடையது, நி[றமற்றது, முட்டை வடிவம் முதல் நீள்வட்டம் போன்றிருக்கும்.
சாதகமான சூழ்நிலை
  • குறைந்த மற்றும் உயர் மண் வெப்பநிலையின் மாற்றம் மற்றும் அதிக ஈரப்பதம்
  • உகந்த வெப்பநிலை 28°C
  • இதர சாதகமான காரணிகள் :  மணல் மண் வகை, குறைந்த மண் ஈரப்பதம் மற்றும் கார அமிலத்தன்மை
Fusarium Rot

பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :

  • மண் வழி மற்றும் விதை வழி பரவுதல்
  • பூஞ்சையிழைச் சிதலாக மண்ணிலும் அல்லது மட்குண்ணிப் பூஞ்சை  இழையாக பயிர்க்குப்பைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழும்
  • பாதிக்கப்பட்ட மண்ணில் வளர்ந்த நாற்றுகள் மூலம் பரவும்
  • வித்துக்கள் காற்று வழி, பாசன நீர் மற்றும் இயந்திரங்கள் மூலம் ஒரு நிலத்திலிருந்து மற்றெரின்றுக்கு மாறும்
மேலாண்மை :
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அழிக்கவும்
  • 2 கி , கிலோ  கார்பென்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யுவும்

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016