சேதத்தின் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட போலித் தண்டுகளின் இலைகள் மஞ்சளாக மாறி காய்ந்துவிடுகின்றன.
- புழுக்கள் போலித்தண்டுகளை குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளியிருக்கும். மையக் குருத்து இலைகள் வாடியும், மஞ்சளாக மாறி இருக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: இளஞ்சிவப்பு, தட்டையான நீள்வட்ட வடிவில் தனியாகவோ அல்லது குவியலாகவோ இளம் தளிர்களின் மீது இடும்.
- புழு: இளஞ்சிவப்பு உடலையும், தலை மற்றும் முன் மார்புக்கவசப் பகுதியும் பழுப்பு நிறத்திலும், உடலில் சிறு மெல்லிய உரோமங்களையும் கொண்டிருக்கும்.
- கூட்டுப்புழு: பட்டுக்கூட்டில் தண்டில் உள்ள இலைகளில் இருக்கும்.
- பூச்சி: அந்துப்பூச்சி சிறியதாக இருக்கும்.
- மஞ்சள் நிற இறக்கையில் கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- மாலத்தியான் 0.1 சதவிகிதம் 30 நாட்கள் இடைவெளியில் ஜீலையிலிருந்து அக்டோபர் வரை தெளிக்கவேண்டும்.
|
|