கிழங்கு செதில் பூச்சி : ஆஸ்பிடியோட்டஸ் ஹார்ட்டியை
சேதத்தின் அறிகுறிகள்:
- செடி வாடும்
- வெண்ணிற செதில் பூச்சிகளில் குருத்துகளிலும், கிழங்குகளிலும் காணப்படும்.
- கிழங்குகள் சுருங்கி விடும்.
பூச்சியின் விபரம்:
- பெண் செதில்பூச்சி சிறிய வட்ட வடிவ, இளம் பழுப்பு நிற ஆமை ஆண் செதில் பூச்சி அமைப்புடையவை.
- ஆண் செதில்பூச்சி ஆரஞ்சு கலரில் இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கையுடையது. தலை மார்பு மற்றம் வயிறு எனத் தனித்தனிப் பாகங்கள் தெளிவாகக் காணலாம்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- செதில் பூச்சிகள் தாக்கப்பட்ட கிழங்குகளை சேமிக்கக்கூடாது.
- பூச்சித் தாக்கிய இலைகளைச் சேகரித்து அழிக்கவேண்டும்.
- தரமான, பூச்சிகளற்ற கிழங்குகளை தேர்வு செய்து நடவேண்டும்.
- விதைக்கு பயன்படுத்தும் கிழங்குகளை 0.075 சதவிகிதம் குவினால்ஃபாஸ் கரைசலில் 20-30 நிமிடம் ஊறவைத்து பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.
- எக்டருக்கு 10 டன் நன்கு மக்கிய செம்மறி ஆடு எரு அல்லது கோழி எருவை இரு முறைப்பிரித்து மண்ணில் கலக்கவேண்டும். இதைத் தொடர்ந்து டைமீதோயேட் மண்ணில் கலக்கவேண்டும்.
|
|