பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

பாக்டீரியா கருகல்

அறிகுறிகள்:

  • பக்க மற்றும் தனி இலைகள் கொடி போன்று காணப்படும்
  • இலைகள் மங்கிய பச்சை நிறத்துடன் காணப்படும
  • வண்டுகள் உண்ணுவதால், சில சமயங்களில் இலைகள் வாடும். ஆனால் இது தெளிவாகத் தெரியாது
  • வாடிய இலைகளுக்கு பக்கத்தில் உள்ள இலைகளும் வாடும் இந்த பாக்டீரியா தண்டில் வாங்குலர் திசுக்கள் வரை பரவும்
  • இதனால் முழுச்செடியும் வாடி, மடியும், தண்டுப் பகுதியை வெட்டினால், வெள்ளை, நிற, ஒட்டும் திராம் வடியும்
  • தண்டின் வாஸ்குலர் அமைப்பு முழுவதும் திராம் சூழ்ந்திருக்கம்
  • வண்டுகள் இந்த பாக்டீரியா வசந்த காலத்தின் போது எடுத்துச் செல்லும். பாக்டீரியா வண்டுகளின் எச்சங்கள் மூலம் பரவும்
  • வண்டுகள் இளம் இலைகள் (அ) வித்திலைகளை உண்ணும். இதுதான் நோய்க்காரணி நுழைவதற்கான வழியும் ஆகும்
  • பாக்டீரியா செடியின் உள்ளே சென்று விட்டால், வேகமாக வாஸ்குலர் அமைப்பை சென்றடைந்து அடைப்பு ஏற்படுத்துவதால் இலைகள் வாடும்
  • செடிக்கு செடி இந்தநோய் வண்டுகள் மூலம் பரவும்

கட்டுப்பாடு:

  • பொதுவாக, பாக்டீரியா வாடல் நோய் வயலின் ஒரங்களில் உள்ள செடிகளில் தோன்றும். அதிக பரப்பளவு உடைய நிலங்களை பூச்சிக் கொல்லி கொண்டு தெளிக்க வேண்டும்
  • கார்டைரில், மாரத்தியான், (அ) ரோட்டினோன் பூச்சிக்கொல்லிகள் தெளிக்க வேண்டும்
  • வசந்த காலத்தில் வண்டுகள் தோன்ற ஆரம்பித்தவுடனேயே அழித்து விட வேண்டும்
  • செடிகள் முளைக்க ஆரம்பிக்கும் போதே கட்டுபடுத்த வேண்டும்
  • வண்டுகளைக் கட்டுபடுத்தாவிட்டால், ஒன்றிலிருந்து நான்கு தலைமுறை வண்டுகள் கூட தோன்றும், இதனால் வாராவாரம் பூச்சிக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்
  • செடி முழுவதும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்





முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015