பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

ப்யூசேரியம் வாடல்

அறிகுறிகள்

  • நாற்றமுகல் நோயுள்ள நாற்றுகளிலும் இந்த பூஞ்சாண் காணப்படும். வயலில் உள்ள இளம் செடிகளைத்தாக்கும்,
  • பருவத்தின் ஆரம்பத்திலேயே தாக்கப்பட்ட செடிகளிலிருந்து சந்தைப்படுத்தும் பழங்களை உற்பத்தி செய்ய முடியாது
  • மிகச் சிறிய (அ) தரம் குறைந்த பழங்களை உற்பத்தி செய்யும்,
  • வாடல் மற்றும் முதிர்ந்த இலைகளில் பசுஞ்சோகை காணப்படும், பகல் நேரத்தில் வாடல் நோய் தோன்றும்
  • காலையில் புத்துணர்ச்சி, பெற்று, திரும்பவும் பகல்நேரங்களில் வாடும்
  • தண்டுகளில் பிளவுகள் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் அடிக்கடி செடியின் நுனிப்பகுதி அருகே தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிற திரவம் வடியும்
  • இதனால் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமடையும்

கட்டுப்பாடு:

  • நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களைப் பயிரிடவேண்டும்
  • மண்ணில் இதைக்கட்டுபடுத்தும் முறைகளை கையாள வேண்டும்


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015