பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள் |
அந்தராக் நோஸ்
அறிகுறிகள்:
- ஒம்புயிரியுடன் இதன் அறிகுறிகள் வேறுபடும், அமிழ்ந்த, நீளமான தண்டுச் சொறிகள் முலாம்பழத்தின் மீது தெளிவாகத் தோன்றும். இலைகளிலும், பழங்களிலும் புள்ளிகள் தோன்றும்
- தண்டுகளில் பெரிய புள்ளிகள் தோன்றும், கொடிகளைத் தாக்கி வாடச் செய்யும். தண்டுச் சொறிகள் வெள்ளிரியன் மீது குறைவாகத் தான் தெரியம், ஆனால் இலைப் புள்ளிகள் தெளிவாகத் தெரியம்
- இலைப்பரப்பு ஆந்தராக்நோஸ் நோய் பாதிக்கப்பட்டது. போல் எரிந்தது போன்று, அமிழ்ந்த புள்ளிகள் பழங்களின் மீது தோன்றும்
- நோயுற்ற பயிர்க் குப்பையுடன் ஆந்தராக்நோஸ் பூஞ்சாண் கலந்து காணப்படும்
- ஈரநிலைகளில் காற்று மூலம் பரவும்
கட்டுப்பாடு:
- கார்பண்டசிம் 2 கிராம் /கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- மேன்கோசெப் 2 கிராம் (அ) கார்பண்டசிம் 0.5 கிராம் /லிட்டர் தெளிக்க வேண்டும்
|
|
|