பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்

அறிகுறிகள்:

  • முலாம்பழம், ஸ்வாள், வெள்ளரி, கொடி வகைகள், பூசணிகளைத் தாக்கும்.
  • தெள்ளத்தெளிவான, பொடி போன்ற சாம்பல் கலந்த வெள்ளை நிற வளர்ச்சி இலையின் மேற்புறம், இலைக் காம்புகள், தண்டுகளையும் தாக்கும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் மஞ்சள் நிறமாக  மாறி பின் பழுப்பு நிறமாகி, மடிந்து விடும்.
  • வறண்ட சூழ்நிலையில், இலைகள் முதிர்ச்சி அடையும் முன் உதிர்ந்து விடும். பழங்கள் முதிர்ச்சி அடையாமலேயே பழுத்துவிடும்.
  • சூடான, வறண்ட வானிலை இந்த நோய் பரவுதற்கு சாதகமாகும்

கட்டுப்பாடு:

  • நனையும் கந்தகம் 0.2% தெளிக்க வேண்டும்




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015