பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள் |
ஆல்டர்னேரியா கருகல்
அறிகுறிகள்:
- பயிர் பருவத்தின் நடுவில் இலைபரப்பில் அறிகுறிகள் தோன்றும்
- சிறிய, மஞ்சள் நிறப்புள்ளிகள் தோன்றும். இலையின் மேற்பரப்பில் இந்த புள்ளிகள் பெரிதாகி, அடர் வளையங்களுடன் காணப்படும்
- முலாம்பழங்கள் அதிகமாக நோய் தாங்கக் கூடியவை
- பழச்சேதத்தின் மூலமும் இந்த நோய்க்காரணி உள்ளே செல்லும்,
- ஆல்டர்னேரியா குக்குமெரினா விதை வழியே பரவும். நோயுற்ற பயிர்க் குப்பைகளின் மூலமும் பரவும்
- காற்று, மழை, மக்கள், கருவிகள் மூலமும் வித்துக்கள் பரவும்
- செடிகள் பலவீனமடையும்
- சூடான, ஈர வானிலை இந்த நோய் பரவுவதற்குச் சாதகமாகும்
கட்டுப்பாடு:
- நோயற்ற விதைகளை வளமான, நீர் வடியமண் பகுதிகளில் நடவேண்டும்
- பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்
- களைகளை அழிக்க வேண்டும்
- மேன்கோசெப் 2 கிராம் /லிட்டர் தெளிக்க வேண்டும்
|
|
|