பயிர் பாதுகாப்பு :: தர்பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

கோண வடிவ இலைப்புள்ளி

அறிகுறிகள்:

  • சிறிய, கோண வடிவ, நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள் இலைகளில் காணப்படும்
  • ஈரப்பதம் இருக்கும்போது, பாக்டீரியா கிராம் இந்தப் புள்ளியிலிருந்து துளிதுளியாக வெளிவரும். இது வறண்டு வெள்ளை நிற படிவை இலையின் மீது ஏற்படுத்தும்
  • சாம்பல் (அ) துருநிற நீரில் அமிழ்ந்த புள்ளிகள் தோன்றி, ஒழுங்கற்ற துளைகளை விட்டுச் செல்லும். பழங்களிலும் நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள் தோன்றும். இவை அடிக்கடி மென்மை அழுகல் பாக்டீரியாவுடன் தொடர்ந்து காணப்படும்.

கட்டுப்பாடு:

  • நோயற்ற விதையை பயிரிட வேண்டும்
  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும்
  • ஸ்ட்ரப்டோமைசின் சல்பேட் 400 பி.பி.எம் தெளிக்க வேண்டும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015