பழ துளைப்பான்: டியோடோரிக்ஸ் ஐசோக்ரேட்ஸ்
தாக்குதலின் விபரம்
- புழுக்கள் இளம் பழங்களை துளைத்துக் கொண்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணகிறது
- பழம் அழுகி கீழே விழுந்து விடும்
பூச்சியின் விபரம்
- புழு: சிறிய தடித்த, அடர் பழுப்பு நிற புழுக்கள் சிறிய மயிர் இலைகளைக் கொண்டிருக்கும்
- பூச்சி: நீலம் கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி, முன் இறக்கைகள் “V” வடிவ புள்ளிகளை பெண் பூச்சி கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பொருளாதார சேதநிலை: 5 முட்டைகள்/செடி
- சேதமடைந்த பழங்களை சேகரித்து அழித்தல்
- சாகுபடியை சுத்தமாக மேற்கொள்ளுதல்
- நோய் தாங்கிக் கொள்ளக் கூடிய இரகங்களை பயிரிடுதல்
- பழங்களை பாலித்தீன் பைகளில் கட்டி மூடிவிடவேண்டும்
- விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைக்கலாம்
- மாலத்தியான் 50 EC 0.1% (அ) டைமெத்தோயேட் 30 EC 0.06% பூக்கள் உருவாகும் போது, பழங்கள் உருவாகும் போதும் தெளிக்க வேண்டும்
- பூக்கள் நிலையில், வேப்பங்கொட்டை சாறு 5% (அ) வேம்பு கலந்த கரைசல் 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
- டைமெத்தோயேட் 30 EC 1.5 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
- டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் 1 லட்சம்/ஏக்கர் என்ற அளவில் வயலில் வெளிவிடுதல்
|
|
பூச்சி |
|