பயிர் பாதுகாப்பு :: விளாம்பழம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி: பாபிலியோ டெமோலியஸ்

தாக்குதலின் விபரம்

  • புழுக்கள் இலைகளை சுரண்டி உண்ணும்
  • இலை உதிர்ந்துவிடும்

பூச்சியின் விபரம்
நுண் புழுக்கள்

  • புழு: இலைகளின் மீது இளம் புழுக்கள் பறவைகளின் எச்சம் போல காணப்படும். முழு வளர்ச்சியடைந்த புழு பச்சையாக இருக்கும்.
  • வண்ணத்துப்பூச்சி: அழகான அடர்ந்த பழுப்பு நிற இறக்கையில் மஞ்சளும் கருமையுமான புள்ளிகளுடன் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்

  • புழுக்களை எடுத்து அழிக்க வேண்டும
  • ஆரம்ப கட்டத்தில் - ஒரு லிட்டர் தண்ணீரில் மிதைல்ஃபரத்தியான் 2 மில் கலந்து தெளிக்க வேண்டும்
  • ஒட்டுண்ணிகளான  டிரைக்கோகிராம்மா யியெனெசென்ஸ், டெலினோமஸ் வகை -களை முட்டையின் மீதும், ப்ரஸிமெரியஸ்ப் வகை புழுக்களிலும் , ப்டெரொலஸ் வகை கூட்டுபுழுக்களிலும் விடவேண்டும்

 

புழு

பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015