தவேப வேளாண் இணைய தளம் :: TNAU சமுதாய வானொலி
e-Radio_TNAU
த.வே.ப.க - சமுதாய வானொலி நிகழ்ச்சிகள்
மற்ற சமுதாய வானொலி நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சமுதாய இ-வானொலி ஒலிபரப்பு நிலையம், இந்திய அரசின் அனுமதியுடன் புதுடில்லி உலக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மீடியா லேப் ஏசியா கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
சமுதாய வானொலியின் முக்கியக் குறிக்கோள், அந்தந்தப் பகுதியிலுள்ள சமுதாய மக்களை ஒருங்கிணைத்து செயல்படுவதேயாகும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சமுதாய இ-வானொலி சுமார் 15-20 கிலோ மீட்டர் வரையில் பயன்படும். இதன் சிறப்பு அம்சம் இணையதள வானொலியில் கேட்கும் வாய்ப்பும் பெற்றுள்ளது. எனவே இந்த நிலையத்தில் தயாரிக்கப்படுகின்ற முக்கியமான நிகழ்ச்சிகளை, உலகம் முழுவதும் கேட்கும் சிறப்பு பெற்றது.

நோக்கங்கள்

  • தொழில்நுட்ப உரைகளை விவசாயிகள், பண்ணை மகளிர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு சமுதாய மக்களுக்கும் ஏற்புடைய வண்ணம் வடிவமைத்துத் தருவது.
  • கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருத்துக்களை புதிய புதிய வடிவங்களில் எழுதி, பேசி, பதிவு செய்து ஒலிபரப்புதல்.
  • தொலைபேசியில் நேரடி நிகழ்ச்சிகளை வடிவமைத்தல்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இ-விரிவாக்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து உலகெங்கும் கேட்பதற்கு வழிவகை செய்தல்.
  • பல்வேறு ஊடக வடிவத்தில் அமைத்து விவசாயிகள், சமுதாய மக்கள் மற்றும் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பது.
  • பல்கலைக்கழகத்தின் மற்ற ஊடகப் பிரிவுகளுக்கு தொழில்நுட்பக் கருத்துக்களை சிறப்பாக வடிவமைத்துக் கொடுக்கும் மையமாக செயல்படுதல்.
  • சமுதாய வானொலி வல்லுநர்களுக்கு செயல்முறை பயிற்சிக் கூடமாக செயல்படுதல்.
  • சமுதாயத்தின் பங்களிப்பினை மேம்படுத்தி, அனைத்துத் தரப் பயனாளிகள் வெற்றி அனுபவங்களைத் தொகுத்து சிறப்பாக ஒலிபரப்பு ஏற்பாடு செய்தல்.
   


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு