|
1927 ஆம் ஆண்டில், இந்தியாவில் தனியார் வானொலி குழுக்களினால், ஒளிபரப்பு ஆரம்பமானது. 1936ல் அனைத்திந்திய வானொலி நிகழ்ச்சியானது, அரசு நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டு பொது மக்களுக்கு, கல்வி கற்கவும், பொழுது போக்குவதற்காகவும், நடப்பு நிகழ்ச்சியை அறியவும் வழிவகைச் செய்யப்பட்டது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்தபோது அனைத்திந்திய வானொலியானது 6 நிலையம் மற்றம் 18 அனுப்பும் கருவியோடு சேர்ந்து ஒரு பின்னலாக செயல்பட்டு வந்தது, இது 25 சதவீத பரப்பையும், 11 சதவீத மக்களையும் சென்றடையும் வண்ணம் இருந்தது. அதன்பின் விரைவாக முன்னேறியது.
தற்சமயம் அனைத்திந்திய வானொலியானது, 232 ஒளிப்பரப்பு மையத்தின் மூலம் 149 மத்திய அலைவரிசையிலும் 54 விரைவு அலைவரிசையிலும் மற்றும் 171 எப்.எம் அனுப்பு கருவியிலும் ஒலிபரப்பப்பட்டது. இது 91.97 சதவீத பரப்பையும் 99.14 சதவீத மக்களையும் அடையும்படி முன்னேறி உள்ளது. இதன் மூலம் 24 மொழிகளிலும், 146 வட்டார வழங்கிலும், உள்நாட்டு நிகழ்ச்சிகள் வழங்கப்படுகிறது. இது 27 மொழிகளிலும், 17 நாடுகளில் 10 வெளிநாட்டு மொழிகள் முதலியவற்றில்,வெளிநாட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில், வேளாண் நிகழ்ச்சியானது, கீழ்வரும் வானொலி அலைவரிசை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. |