பரிமாணம்
நான்கு மில்லியன் வருடங்களாக ஏற்படும் பரிமான வளர்ச்சியே இன்று பூமியில் உள்ள உயிரியல் பல்வகைமைக்கு காரணமாகும். உயிரினங்களின் தோற்றம் அறிவியல் கூற்றுப்படி நிரூபிக்கப்படவில்லை எனினும் பூமி தோன்றிய பின் சில நூறு மில்லியன் ஆண்டுகளில் உயிர் தோன்றிவிட்டது என சில ஆதாரங்கள் கூறுகின்றன. 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் உயிரினங்கள் அனைத்தும் ஆர்க்கியா, பாக்டீரியா, ப்ரோடோசோன் மற்றும் ஒரு செல் உயிரினங்களாகவே இருந்தன.
பல்வகைமையின் சரித்திரத்தை நோக்கினால் பெனரோசோயிக் (இறுதி 540 மில்லியன் வருடங்கள்) காலகட்டத்தின் கேம்பிரியன் காலத்தில் - அனைத்து பல செய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. அதன் பின்னர் 400 மில்லியன் ஆண்டுகளில் உலக பல்வகைமை சிறிதளவு மாற்றங்களுடன் ஒவ்வோர் காலகாட்டத்திலும் அதிகமாக பல்வகைமை இழப்புகளுடன் தோன்றியுள்ளது.
பெனரோசோயி காலகட்டத்தின் கடல் வாழ் தொல்லுயிர் எச்சத்தின் பல்வகைமை |
இங்கு படத்தில் கானும் பலவகைமை பற்றிய தொல்லுயிர் எச்சத்தின் பதிவின்படி தற்போதுள்ள சில மில்லியன் வருடங்கள் தான் உலக சரித்திரத்தின் அதிக பட்ச பல்வகைமையை தெரிவிக்கின்றது. ஆயினும் அனைத்து வல்லுநர்களும் இக்கருத்தினை ஆமோதிப்பதில்லை ஏனெனில் தற்போதைய நிலவியல் பாகங்களினால் தொல்லுயிர் எச்சங்கள் அதிகளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது. சிலர் விவாதிப்பது என்னெவெனில் நவீன பல்வகைமைக்கும் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உள்ள பல்வகைமைக்கும் அதிகமாக வேறுபாடு இல்லை (அல்ராய் மற்றும் குழு 2001). தற்போதைய உலக பேரினங்களின் பல்வகைமை 2 மில்லியன் முதல் 100 மில்லியன் சிற்றினங்களாக வேறுபடுகின்றது. அதனில் சிறந்ததாக 13-14 மில்லியன் ஆகும்.
பல உயிரியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்வது என்னவெனில் மனிதர்கள் தோன்றிய காலமே அதிகமாக அழிவுகள் தொடங்கியது எனவும் ஹோலோசீன் அழிவு நிகழ்வுகள் போன்றவை மனிதர்கள் சுற்றுப்புறத்தினை தாக்கியதால் உண்டாவது எனவும் கூறுகின்றனர். தற்போதுள்ள அழிவுகளின் அளவின்படி இன்னும் 100 வருடங்களில் பூமியில் உள்ள அதிகமமான உயிரினங்கள் அழிந்துவிடும்.
புதிய சிற்றனங்களும் அடிக்கடி கண்டுபிடித்த வண்ணம் உள்ளது (சராசரியாக ஒரு வருடத்தில் 5-10,000 புதிய சிற்றினங்கள் அதிகமாக பூச்சிகள்) இவை கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் பாகுபாடு செய்யப்படவில்லை (90 சதவிகிதம் ஆர்த்ரோபோடுகள் பாகுபாடு செய்யப்படவில்லை). நிலத்தின் பல்வகைமை வெப்ப மண்டல காடுகளில்தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. |