காற்று வெளி மாசுபாடு
|
|
|
தொழிற்சாலை மாசுபாடு |
மின் உற்பத்தி |
கட்டிடத் தகர்ப்பு |
காற்று வெளி மாசுபாடு என்பது வளிமண்டல பகுதியில் ஏற்படும் சீர் குலைவின் அறிகுறியாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு
- வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள்
- வேதிப் பொருட்களின் செறிவு நிலை
- பல்வேறு / வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் சிதறும் / வீணாகும் தன்மையானது உட்கொள்ளும் தன்மையை விட குறைவாகவே உள்ளது (கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சி)
- புதிய வேதி வினையின் எதிர் செயல் மற்றும் உயிர் சிதைவற்ற பிரிவின் தோற்றம்
- உலக வெப்பமயமாதல் அமில் மழை, புகை மூட்டப்பனி, ஓசோன் செறிதளர்வு போன்றவை காற்று வெளி மாசுபாட்டின் தாக்கமாகும்.
|
|
|
சிமெண்ட் தொழிற்சாலை மாசுபாடு |
வாகன மாசுபாடு |
கார் / கரி எண்ணெயின் வெப்பம் |
நம் தினசரி வாழ்க்கையுடன் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியானது தொடர்புடையதாகும். இந்த இரண்டு சுழற்சியும் மிக முக்கியமானதாகும். இவை நம் பூமியில் கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் தொகுப்பினை ஒழுங்குபடுத்துகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள்
முக்கிய ஆதாரங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் வாகனத்தின் புகை
- வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்
- தொழிற்சாலை இயக்கமுறை
- வாகன தயாரிப்பு
- உரங்களின் தொகுதி
- கட்டிடத் தகர்ப்பு
- திடக் கழிவு மாசுபாடு
- திரவத்தின் நீராவி
- எரிமலை குழம்பு
- எரி பொருள் உற்பத்தி
- சாலை கட்டமைப்பு
- மின்சார உறுப்பு உற்பத்தி
- உலோகம் பிரித்தெடுத்தல்
- காட்டுத் தீ
- வேளாண்மை
காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு
- இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது
- நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்
- கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்
- ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்
- இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்
காற்று வெளி மாசுபாடு
- சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்
- செயற்திறனின் அளவினை குறைத்தல்
- தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
- அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்
- நரம்பு நடத்தையில் பாதிப்பு
- இரத்த நாடியில் பாதிப்பு
- புற்றுநோய்
- முதிர்ச்சியற்ற இறப்பு
காற்று வளி மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு
- ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றது.
- காற்று மாசுபாட்டினால் வளிமண்டல ஒஓசோன் படலத்தின் மேல் படலத்தில் தாக்கம் ஏற்படும் அதிகப்படியான புறஊதாக்கதிர்கள் சூரியனிடமிருந்து புவிக்கு வருவதால் உலகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது
- ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது
காற்று மாசுபடுதலினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்
அமில மழையினால் அழியும் மரங்கள்
- அமில மழையினால் மரங்கள் அழிந்து தாவரங்களின் இலைகள் அழிந்து மற்றும் மண்ணினை உரங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்தற்றதாக மாற்றுகிறது
- ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டையினால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துவிடுகின்றது
- ஓசோனின் கீழ் படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை தாக்குதலால், தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் இவை தாவரங்களின் திசுக்களை நேரடியாக அழிக்கிறது
காற்று மாசுக்கள்
காற்று மாசுபட காரணமான வாயுக்கள்
காற்று மாசுபட காரணமான முக்கியமான வாயுக்களின் வகைகள் பின்வருமாறு:
- சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2)
- நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (NOX = NO + NO2)
- ஓசோன் (O3)
சல்பர் - டை - ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு போன்றவை முதன்மை நிலை காற்று மாசுபடுத்திகளாகும். ஓசோன் இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.
SO2 - ன் ஆதாரங்கள்
- மின் உற்பத்தி
- பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
- மற்ற எரியக்கூடிய பொருட்கள்
- வாணிகம் மற்றும் குடியிருப்பு பயன்பாடு
- தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
- உற்பத்தி இயக்குமுறை
- தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
- போக்குவரத்து
- சாலை போக்குவரத்து
- மற்ற போக்குவரத்து (விமானம், கப்பல், இரயில்கள்)
எரிபொருள் மட்டும் கொஞ்ச நைட்ரஜனை உற்பத்தி செய்கிறது. (எடுத்துக்காட்டாக, எண்ணெய் மற்றும் நிலக்கரியில் - 0.5 - 1.5% நைட்ரஜன் உள்ளது) எரிவாயுவில் நைட்ரஜனின் தன்மை எரிபொருளை விட குறைவாகவே உள்ளது. வளிமண்டல நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்கள் எரிக்கும் அறையில் வினைபுரிந்து பெரும்பாலான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
- நைட்ரிக் ஆக்ஸைடு (NO) அல்லது நைட்ரஜன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) போன்ற இரண்டு முக்கிய நைட்ரஜன் ஆக்ஸைடுகளில் மொத்தம் NO க்கு சமமாகம்
- நைட்ரிக் ஆக்ஸைடு (NO) ஒரு நிறமற்ற வாயுவாகும். நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) ஒரு பழுப்பு சிகப்பு கலந்த நிறத்தினை கொண்டும் அதிக நெடியுடனும், நாற்றத்துடனும் கொண்ட வாயுவாகும்.
ஆதாரங்கள்
1. எரிபொருட்களை எரிக்கும் போது NO2 மற்றும் NO ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 90 சதவிகித NOx எரிப்பு பொருளானது NO ஆக இருக்கும். இவை காற்றில் ஆக்ஸிஜனேற்றமடைந்து நைட்ரஜன் - டை - ஆக்ஸைடாக NO2 மாறுகிறது. ஆகையால் வளிமண்டலத்தில் NO2 - ன் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இவை நேரடியாக வெளியேற்றப்படுகிறது. எஞ்சியிருப்பவை வளிமண்டலத்திலே வேதி வினையில் செயல்படுகிறது.
2. சாலை போக்குவரத்தானது பாதி நைட்ரஜன் வெளியேற்றத்தில் பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி 20% நைட்ரஜனை வெளியேற்றுகிறது.
- சாலை போக்குவரத்து
- மற்ற போக்குவரத்து
3. ஆற்றல் உற்பத்தி
- மின் உற்பத்தி
- பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
- மற்ற எரியக்கூடிய பொருட்கள்
4. தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
5. உற்பத்தி இயக்குமுறை
6. தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெதுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றத்தின் இயற்கை ஆதாரங்கள்
மண்ணிலிருந்தும் நைட்ரிக் ஆக்ஸைடு் (NO) வெளியேற்றுகிறது.
அமோனியா வெளியேற்றத்தின் ஆதாரங்கள்
அமோனியா வெளியேற்றத்திற்கு வேளாண்மை ஒரு முக்கிய ஆதாரமாகும். கால்நடை வளர்ப்பு பண்ணை மற்றும் இவற்றின் தேவையற்ற கழிவுகளிலிருந்து அதிக அளவு அமோனியா வெளியேற்றப்படுகிறது. அதிக கால்நடை கழிவுகளில் மட்கும் யூரியா மற்றும் கோழிக் கழிவுகளின் யூரிக் அமிலம் போன்றவற்றினால் அதிக அமோனியா வெளியேற்றப்படுகிறது.
முக்கியமான ஆதாரங்கள்
- கால்நடை - 50 சதவிகித வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது
- உரமிடுதல்
- கடல்கள்
- தாவரங்கள்
- அங்கக உயிரிப் பொருட்களின் எரிப்பு
கார்பன் மோனாக்ஸைடு (CO)
- கார்பன் சம்பந்தப்பட்ட எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்- டை - ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாகிறது
- ஆனால் அனைத்து முழுமையாக எரிக்கப்படுதில்லை. அந்த தருணத்தில் கார்பன் மோனாக்ஸைடு (CO) உற்பத்தியாகிறது
- மனிதர்களின் பயன்பாடான மோட்டர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கார்பன் மோனாக்ஸைடு வெளியேற்றத்திற்கு ஆதாரமாகும்
ஆவியாகும் கரிமச் சேர்வை (VOCs)
ஆவியாகும் கரிமச் சேர்வை என்பது கரிமச்சேர்வை ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடியதாகும். மேலும் இவை சுத்தமான ஹைட்ரோகார்பனிலிருந்து வரும் கரிம காற்று வளி மாசுக்களையும் உள்ளடக்கியது. இவை பகுதியாக ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரைன், சல்பர் அல்லது நைட்ரஜன் போன்றவற்றை உள்ளடக்கிய கரிமச் சேர்வையாகும்.
முக்கிய ஆதாரங்கள்:
- ஓவியம் (ஆவியாகும் திரவம்)
- எண்ணெய் உற்பத்தி (வாயு தீச்சுடர் மற்றும் வெளியேற்றம்)
- எண்ணெய் துரிதம் (தீச்சுடம் மற்றும் நிலையற்ற வெளியேற்றம்)
- எண்ணெய் அல்லது துரிதப்படுத்தப்படும் பொருட்களின் விநியோகம் (சேமிப்பிப்பிலிருந்து ஆவியாக்கம், வெளியேற்றப்படும் கொள்கலினால் இடப்பெயர்ச்சியில் ஏற்படும் இழப்பு)
- உலர்ந்த சுத்தம் (துணிகள் ஈரமில்லா தன்மை)
- மது உற்பத்தி (வடிப்பாலை மற்றும் எரிச்சாராயம்)
- சாகுபடி பண்ணை (பயிர் வளர்ச்சி, பதப்படுத்திய பசும்புல் உற்பத்தி கழிவுநீர் படர்வு)
ஆவியாகும் கரிமச் சேர்வைக்கு (VOC) இயற்கை ஆதாரங்கள்
VOC யின் வெளியேற்றத்திற்கு வனவியல் ஒரு முதன்மை இயற்கை ஆதாரமாகும். வெப்ப மண்டல காடுகளானது பொதுவாக பாதிக்கும் மேற்பட்ட மீத்தேனிலிருந்து VOC வெளியேற்றப்படுகிறது. தாவர தொகுப்பில் அதிக கரிம மூலக்கூறு இருக்கும். இவை வளிமண்டலத்தில் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுகிறது.
ஓசோன் (O3)
ஓசோன் என்பது;
- படை மண்டலம் (stratosphere), இது இயற்கையாக அமைந்த வளிமண்டலத்தின் மேல் படலமாகும்.
- அடிவளிமண்டலம் (troposphere), இயற்கையாக மற்றும் மனித இனத்தின் வெளியீட்டால் வளிமண்டலத்தில் ஏற்படும் கீழ் படலமாகும்.
- படை மண்டலம் (stratosphere), சூரியனிடமிருந்து புவிக்கு வரும் அதிகப்படியான புறஊதாக்கதிர்களை தடுத்து இயற்கைக்கு நன்மைதரும் வகையிலுள்ளது
- ட்ரோபோஸ்பியர் (அ) அடிவளிமண்டல், மனிதர்களிடமிருந்து வரும் முதன்மை மாசுக்களால் உருவாக்கப்பட்டதாகும். இதனடிப்படையில் இது ஒரு காற்று வளி மாசாகும்
- இந்த அடிவளிமண்டலத்தின் முதன்மை மாசுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களிடம் வினைபுரிந்து இரண்டாம் நிலை மாசுக்கள் உருவாகிறது.
- ட்ரோபோஸ்பியர் படலம், ஒளிவேதியியல் மூடுபனியின் முக்கிய பகுதியாகும்
நிலையான கரிம வாயுககள் (POPs)
- நிலையான கரிம வாயுக்கள் சூழ்நிலைமண்டலத்தில் சிதைவடையாமல் நிலையாக இருக்கும் வாயுக்களாகும். இவை மண் தரத்தினை பாதியாக குறைக்கிறது
- இதன் பகுதியுடன் டை ஆக்ஸின், ஃப்யூரான், பாலிகுளோரினேட் பைஃபினைல்ஸ் (PCB3) மற்றும் ஆர்கனோகுளோரின் பூச்சிகள் (DDT) போன்றவையும் அடங்கும்.
- இவைகள் உணவு சங்கிலியின் வழியாக மனிதன் மற்றும் விலங்குகளின் திசுக்களில் நுழைகிறது. மேலும் இவை காற்றுத் துகளுடன் நீண்ட போக்குவரத்து தன்மையை உடையது
நிலையான கரிம மாசுக்களின் ஆதாரங்கள்
சில POPs க்கள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. மற்ற POPs க்கள் தொழிற்சாலை இயக்கங்களான உற்பத்தியில் கரைப்பான், பாலிவினைல் குளோரைடாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
காற்று மாசுபாடு மேலாண்மை
ஒருபார்வை
தொழில்நுட்பம், சரியான நேர்த்தி முறையில் முன்னேற்றம் மற்றும் தொழிற்சாலை பகுதியில் மாசு கட்டுப்பாடு, மாசுபாட்டின் அளவினை தடுப்பது மற்றும் தேவையற்ற பொருட்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவது போன்றவையாகும். இவை மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலின் அடிப்படையில் தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக அமையும். வகைபாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.
மாற்று தொழில்நுட்பம்
- நேர்த்தின் தற்போதைய முறையில் வெவ்வேறு சாத்தியமான செயற்கூறுகளை அளித்தல் மற்றும் மாசு கட்டுப்பாடு
- தற்போது இருக்கும் மாற்று நுட்பங்கள்
- மண் ஆவியை பிரித்தெடுத்தல்
- உயிரி வெளியேற்றம்
- உயிரி அடுக்குகள்
- விளை நில பண்ணை
- குறைந்த தட்பவெப்ப நிலையில் வெப்பமடைந்து ஆவியாகுதல்
- காற்று வளி தெளிப்பான்
- உயிரியல் தெளிப்பான்
- இயற்கை தளர்ச்சி
- தரைநீரில் உயிர்வழி நிவர்த்தி
- இருமுனை கட்டம் பிரித்தெடுப்பு
- கடல் நீரில் உப்பு பிரித்தெடுப்பு முறை
- சில அறிவியலறிஞர்கள் அணு சக்தியை உருவாக்கத்தின் அடுத்த நிலையை அடைவதற்கு அணுக்களை பிளவுப்படுத்துகின்றன.
தூய்மையான தொழில்நுட்பங்கள்
- புதுப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் பல தடவை உதவுகிறது. குறைந்தபட்ச விலை இதனுள் அடங்கும். ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களின் அதிக பயன்பாட்டை தடுத்தல்
- தற்போது நிலவரத்திலுள்ள தூய்மையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு
- நீர் ஆற்றல்
- சூரிய சக்தி
- காற்றுச் சக்தி
- புவி வெப்ப சக்தி
- அங்கக உயிரிப்பொருட்கள் ஆற்றல்
- பண்படுத்துதல்
- தாவர வளர்ப்பு
- மட்குக் குப்பை
புதுமையான / ஆக்கத்திறமையான தொழில்நுட்பங்கள்
- புதுமையான தொழில்நுட்பத்தினால், மாசுக்களை கட்டுப்படுத்தும் திறமானது முன்னேற்றமடைதல்
- தற்போதுள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:
- நீர்மம் வாயுக்களை உறிஞ்சும் கருவி
- காற்று தூய்மைபடுத்துதல்
- ஆக்ஸ்ஜனேற்றமடைதல்
- நல்ல காற்றோட்டம்
- மறுவளர்த்தி
- திண்மமாக்குதல்
- மண்ணை தூய்மையாக்குதல்
- உயிரியல் பொருள்
- சிதறச் செய்யும் பொருள்
- ஆற்றல் துகள்கள்
- குளிர்விக்கும் கோபுரங்கள்
காற்று மாசு கட்டுப்பாடு
காற்றுத் திறன்
- காற்றிலுள்ள இயக்க ஆற்றலை விட காற்றுத்திறனின் மின்சாரத்தின் தன்மை குறைவாகும்
- இயக்க ஆற்றலின் தன்மை, வேகம் 3 உடன் நேரடியான சமவிகிதமாகும்
காற்று ஆற்றல் உற்பத்தி
நீர் எரிபொருள் பகுதி
- நீர் என்பது ஆற்றலின் ஆதாரமாகும். நீரானது 12~ மின் கலத்தின் அதிக இயக்க ஆற்றல், அதிகப்படியான மின்காந்த கதிர் வீச்சின்போது ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கிறது
- வாயு வெளியேற்றம் என்பது காற்றும் மற்றும் நீராவியின் கலவையால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுவாகும்.
- எரிபொருள் அட்டைகள், வண்டிகள், பேருந்துகள், விமானம், கப்பல்கள், மற்றும் ஆற்றல் நிலையம் போன்றவற்றின் பயன்பாடு. இதுமட்டுமல்லாமல் நிலக்கரி எண்ணெய் (அ) வாயுக்களின் ஆற்றலில் பயன்படுத்தும் கருவிகளும் அடங்கும்
இயற்கை வாயு எரிபொருள் பயன்படுத்தும் பள்ளிபேருந்து
வினையூக்கி மின்மாற்றி
- தானியங்கு ஊர்த்தியில் பொருத்துதல் மற்றும் தொழிற்துறைகளில் பல்வேறு வகையான வடிப்பான்கள் மற்றும் உறைப்பான்களை பொருத்துதல்
- சிறுமணியாலான உலோகத்திற்குள் ஆவியாகும் வாயுக்கள் வினைபுரிந்து தீங்குவிளைவிக்கும் வாயுக்களை தீங்கற்றதாக மாற்றப்படுகிறது.
போக்குவரத்தின் மாற்று
மலேசியா அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மற்றும் ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கார்பன் - டை - ஆக்ஸைடு (CO2), கார்பன் மோனாக்ஸைடு (CO), நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (NO2), சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2), போன்றவற்றிக்காக தனிப்பட்ட நபர்களுக்கு இடையே போக்குவரத்து பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.
பாதாள இரயில் அல்லது ஒருமித்த இரயிலை பயன்படுத்தும்போது சுற்றுப்புறச்சூழலுடன் விரோதமற்றும் பசுமை கூடக வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற போக்குவரத்தினை அதிகப்படுத்துதல்
மிதிவண்டி ஒரு மாற்று வழி
இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு
- சிறப்பான ஆற்றல்மிக்க பயன்பாட்டிற்கு தவறாமல் சோதனை செய்வது மற்றும் உதிரி பாகங்களை மாற்றுவது
- போக்குவரத்திற்கு இயந்திரத்தில் தரம் மிக முக்கியமானதாகும் தீங்குவிளைவிக்க கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது
எளிமையான முறையில் காற்று மாசுக்கட்டுப்பாடு
அ. தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல்
ஆ. வளிமண்டலத்தில் வாயுக்கள் வருதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், புயல் காற்று சேகரிப்பில், தற்போது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மாசுக்களை மாற்றுகிறது
இ. நிலக்கரியானது நிலைமாற்றம் அல்லது தெரிவிலிருந்து வாயு எரிபொருளாக மாற்றம்
ஈ. கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு (ஒரு வகை கொடி, கேரட்) நைட்ரஜன் ஆக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு மற்றும் பிற வாயுக்கள்.
ஆதாரம்: www.studentguide.in/biology/pollution.environment/control-of-air-pollution.htm
|