உழவுக் கருவிகள்

உளிக்கலப்பை


சிறப்பம்சங்கள் :
  • ஆழமாக உழுவதால் கடினப்படுகை தகர்க்கப்பட்டு மண்ணின் நீர் சேமிப்புத் தன்மை அதிகமாகிறது. இதனால் பயிரின் வேர் அதிக ஆழம் வரை ஊடுவருவ முடிகிறது

  • 35 – 45 குதிரைத் திறன் கொண்ட டிராக்டராலும் எளிதில் இயக்கக் கூடியது.

விபரங்கள்
  • வகை                            :   டிராக்டரில் இணைக்கக்கூடியது

  • மொத்த அளவு              :   450 X 940 X 1250 மி.மீ

  • எடை                           :   42 கிலோ.

  • திறன்                           :   1ஒரு நாளில் 1.4 எக்டர் உழவு செய்யலாம் 1 மீ இடைவெளியில்)

  • விலை                          :  ரூ.8500/-

உளிக்கலப்பை

உளிக்கலப்பை

பொதுவான தகவல்கள் :

இக்கலப்பை குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல்திறன் கொண்டது. இதன் கொழு 20 கோணமும் 25 மி.மீ அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது. இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள்சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம், கொழு, கொழுதாங்கி என மூன்று பாகங்கள் மட்டும் உண்டு. இக்கலப்பை எதிர்பாராத அதிகப்படி விசையினால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பு அமைப்பை தன்னக்த்தே கொண்டது.  

மேலே செல்க

சட்டிக் கலப்பை


சிறப்பம்சங்கள்:
  • நிலத்தை முதலில் பண்படுத்தவதற்கும், முக்கியமாக கடினமாக மற்றும் உலர்ந்த, சருகு, கற்கள் அல்லது மரத்தின் குச்சிகள் உடைய நிலத்தில் பயன்படுத்த உதவும்.

சட்டிக் கலப்பை

சட்டிக் கலப்பை

விபரங்கள்:
  • வகை                                           : டிராக்டரில் பொருத்தி இயக்கக் கூடியது

  • ஆற்றல் தேவை                            : 25-50 குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்

  • எடை                                           : 236-376 கிலோ

  • பாத்திகளின் எண்ணிக்கை            : 2

  • வட்டின் அளவு                             : 600-800 மி.மீ

  • உழும் ஆழம்                                : 300 மி.மீ வரை

மேலே செல்க

கொத்துக் கலப்பை

சிறப்பம்சங்கள்:
  • இக்கலப்பை உழுவதற்கும் விதைப்படுக்கை அமைத்தல், கிடை உழவு மற்றும் சேற்றுழவு போன்ற செயல்களை செய்ய பயன்படுகின்றது

  • இது டிராக்டரில் இணைக்கப்பட்டு, அதன் நீர் விசையியல் அழுத்தத்தால் இயங்கக் கூடியது.

கொத்துக் கலப்பை

கொத்துக் கலப்பை

பண்புகள்:
  • வகை                                                         : டிராக்டரில் இணைத்து இயங்கக் கூடியது.

  • மின்ஆற்றல்                                               : 35 குதிரைத் திறன் மோட்டார்.

  • உழவுக் கொத்துகளின் எண்ணிக்கை (டன்) : 9-13.

  • உழும் ஆழம்                                              : 140-170 மி.

  • செயல் ஆற்றல்                                          : 0.35-0.5 எக்டர்/மணி.

  • எடை                                                         : 120-130 கிலோ

மேலே செல்க

சுழல் கலப்பை

சிறப்பம்சங்கள்
  • நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை உழுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

சுழல் கலப்பை

சுழல் கலப்பை

பண்புகள் :
  • வகை                                     : டிராக்டரால் இயக்கக் கூடியது.

  • மின்ஆற்றல்                           : 35 அல்லது அதற்கு அதிகமான குதிரைத்திறன் கொண்ட டிராக்டர்

  • உழும் ஆழம்                          : 1000-2000 மி.மீ

  • எடை                                     : 280-415 கி.கி

  • சுழல் அச்சின் சுழற்சி வேகம்   : 210-237 சுற்றுகள் / நிமிடம்

  • கூர்முளைத் தகடின் வடிவம்    : 'ட' வடிவம்

  • கூர்முளைத் தகடின் தடிமன்    : 7-10

  • சுழல் அச்சின் குறுக்களவு       : 70-90 மி.மீ.

மேலே செல்க

லேசர் மூலம் சமப்படுத்தும் கருவி

செயல்பாடு :
  • மண்ணின் மேற்பரப்பை சமப்படுத்தி, பண்படுத்துகிறது.

லேசர் மூலம் சமப்படுத்தும் கருவி

விபரங்கள் :
  • கருவி வேலை செய்யும் அகலம்            :  7 அடி வாளி அளவு

  • உயரம                                                : 23"x 27"

  • கருவியின் அளவு                               : 8 மி.மீ, 2 மி.மீ, தகடு, 6 – 6 கனமான குவிமையத்துடன் கூடிய வகை

  • இரண்டு சக்கர உயர ஒருங்கிணைப்பு :  9 அடி

  • ஒட்டுமொத்த அளவு                            :  9x7x12 அடி

  • நீரால் இயங்குகிற உருளை கலன       :  1'4"

  • செயல்படும் மின்னழுத்தம்                   :  12 வோல்ட்

  • லேசர் எல்லை                                     :  900 மீட்டர் (விட்டம்)

  • விலை                                                 : ரூ.3,65,000/-.

சிறப்பியல்புகள் :
  • 50 சதவீத அளவிற்கு நீரை சேமிக்கின்றது.

  • 50 சதவீத அளவிற்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

  • எளிதாக உழவு செய்யும் வசதி

  • டீசல் மற்றும் பயன்பாட்டு செலவு குறைகிறது.

  • விளைச்சலை அதிகப்படுத்துகிறது.

மேலே செல்க

நடவு இயந்திரங்கள்

விதை ஊன்றும் கருவி


செயல்பாடு :
  • வாழைக் கன்றுகளை நடுவதற்கான குழிகளை தோண்ட பயன்படுகிறது.

விபரங்கள் :
  • வகை                      : திருகும் துளைக் கருவி

  • ஆற்றல் தேவை       : 8-10 குதிரைத் திறன் கொண்ட விசைக் கலப்பை

  • மொத்த அளவு         : 400 X 635 X 1655 மி.மீ

  • எடை                      : 50 கிலோ

  • செயலாற்றல்           : மணிக்கு 25-30 துளைகள்

விதை ஊன்றும் கருவி

விதை ஊன்றும் கருவி

பொதுவான தகவல்கள்:

இதில் 225 மி.மீ விட்டமும், 100 மி.மீ புரியுடை அளவுடன் கூடிய அடுக்குச் சட்டம் மற்றும் மரசக்கர அமைப்புகள் உள்ளன. இவ்வமைப்பின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் கைச்சக்கரத்தின் மூலம் குழியின் ஆழத்தை நிர்ணயிக்கலாம். பெரிய அளவுடைய குழிகள் வேண்டுமெனில் அதற்கேற்ப 250-275 மற்றும் 300 மி.மீ அளவுகள் கொண்ட துளையிடும் கருவிகளை மாற்றிப் பொருத்திக் கொள்ளலாம். பின்புறத்தில் நிலையான உள்ளுறைச் சட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் அமைந்துள்ள தாங்கும் சக்கரத்தின் மூலம் எளிதாகத் தோண்டவும், குறைந்த விசையில் அதிக அழுத்தமும் கிடைக்கிறது.

ஒரு கருவியின் விலை                  : ரூ.20,0000/-
ஆக்கம் மற்றும் விற்பனையாளர்  : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.

மேலே செல்க

இடை உழவுக் கருவிகள்

சுழலும் களை எடுக்கும் கருவி


செயல்பாடு:
  • பழத்தோட்டங்களில் களை நீக்குதல்.

சுழலும் களை எடுக்கும் கருவி

சுழலும் களை எடுக்கும் கருவி

 

விபரங்கள்:
  • வகை                        :   தானியங்கிக் கருவி.

  • ஆற்றல் தேவை         :   8-387 குதிரைத் திறன் டீசல் என்ஜின்.

  • மொத்த அளவுகள்     :   2400 X 1750 X 1100 மி.மீ

  • எடை                        :   200 கிலோ

  • செயலாற்றல்             :    நாளொன்றுக்கு 1-1.2 எக்டர்

கருவியின் விலை : ரூ.65,000/-
சிறப்பம்சங்கள்: :

45 செ.மீக்கும் குறைவான இடைவெளி உள்ள வரிசைகளிலும் களை எடுக்க உதவுகிறது. இதில் கூர்முனைத் தகடுகள், இழுவை வண்டி மற்றும் சால் அமைக்கும் கருவிகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.

மேலே செல்க

மிகச் சிறிய வகைக் கலப்பை


செயல்பாடு :
  • களையெடுப்பதற்கும், இடைஉழவு செய்யவும் பயன்படுகிறது.

மிகச் சிறிய வகைக் கலப்பை

விவரங்கள் :
  • வகை                                    :  விசையாற்றலால் இயங்கக் கூடியது.

  • தேவைப்படும் விசையாற்றல :  5.5 செ.பி. டீசல் என்ஜின்.

  • வடிவமைப்பு அளவுகள்         : தகட்டின் அகலம் – 250 (அ) 300 (அ) 350 மி.மீ தரைச்சக்கரங்கள் –                                                 300 மி.மீ.விட்டம்.

  • எடை                                    : 70 கிலோ

  • திறன்                                   : ஒரு நாளைக்கு ஒரு எக்டர்      

  • விலை                                  : ரூ.35,000/-

பொதுவான தகவல்கள் :

இந்தக் கருவியானது மூன்ற விதமான களையெடுக்கும் பகுதிகளான வீச்சுத் தகடு, சிறிய களைக்கொத்து மற்றும் சுற்றும் தகடுகளைக் கொண்டது. இந்தக் கருவியுடன் மற்ற இணைப்புக்களை இணைத்துப் பயன்படுத்தலாம். தனியான அடி பார்களானது தோட்ட நிலங்களில் விதைப்பதற்காக பார் மற்றும் சால்களை அமைக்கப் பயன்படுகிறது.

மேலே செல்க

பயிர்ப் பாதுகாப்புக் கருவிகள்

டிராக்டரில் ஏற்றப்பட்ட தெளிப்பான்கள்


செயல்பாடு :   
  • களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள், நீர்ம உரங்களை தெளிப்பதற்குப் பயன்படுகிறது.

விவரங்கள்:
  1. வகை                                    : டிராக்டரில் ஏற்றப்பட்டது

  2. தேவைப்படும் விசையாற்றல் : 5.5 எச்.பி, டீசல் என்ஜின்

  3. சுற்றும் வேகம்                       : 1200 ஆர்.பி.எச்

  4. எடை                                    : 120 கிலோ

  5. கொள்ளளவு                          : 600,1000,1200, 1500 லிட்டர்

டிராக்டரில் ஏற்றப்பட்ட தெளிப்பான்கள்

சிறப்பியல்புகள்:
  • 1000, 1200, 1500 லிட்டர் கொள்ளளவுடைய தொட்டிகளையும் 24 மீட்டருக்கு தெளிக்கும் திறனுடையது

  • இதனுடைய அடக்கமான அமைப்பில் டிராக்டரில் ஏற்ற முடிகிறது. 

மேலே செல்க

விசைத் தெளிப்பான்

நுண்துளித் தெளிப்பான்


சிறப்பம்சங்கள் :          

நுண் துளித் தெளிப்பான்

  • பழத்தோட்டங்கள், வாழை, தேயிலை, காப்பி போன்ற அனைத்து வகைப் பயிர் வயல்களிலும் நீர்ம நிலையிலுள்ள பூச்சிக் கொல்லிகளை எளிதில் தெளிக்கலாம்.

  • ஆற்றல் வாய்ந்த சமநிலையுடைய அலுமினிய மோட்டார்.

  • தோளில் கட்ட உதவும் பட்டைகள், பின்புற தலையனை அமைப்புகள்.

  • காற்றுத் திசை வேகம் : 249 அடி / வினாடிக்கு

  • 1.2 குதிதைத் திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின்.

  • 35 குதிரைத்திறன் கொண்ட அதிகளவு ஆற்றலிலும் பயன்படுத்தலாம்.

மேலே செல்க

காற்றழுத்தத் தெளிப்பான்


காற்றழுத்தத் தெளிப்பான்

  • இத்தெளிப்பான் பழத்தோட்டங்கள், காய்கறிகள், வாழை போன்றவற்றிற்கு தெளிக்கப் பயன்படுகிறது.

  • அதிக செயலாற்றல் கொண்ட இது, பெரும்பாலும் வணிகப் பயிர்களுக்கு உபயோகிக்கப்படுகிறது.

  • இதன் சீரான இயக்கத்தினால் தெளிப்பும் ஒரே சீராகக் கிடைக்கிறது.

  • 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியானது அதிக அடர்த்தியான பாலி எத்திலினால் போர்த்தப்பட்டுள்ளது          

  • அடித்தொட்டி மற்றும் பித்தளை அழுத்தக்கலம் உள்ளது .

  • வலிமையான கட்டுமானம் கொண்ட இதனைச் செயல்படுத்துவது எளிது.

  • இடது அல்லது வலது கை என எந்தக் கையினாலும் இயக்கலாம்.

  • தேவையான அளவு ஆற்றலை தொடர்ச்சியாக அளிக்கிறது.

  • இரசாயன மருந்துகளைக் கலக்குவதற்கு இயந்திர குலுக்கி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே செல்க

அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் பயன்படுத்தும் கருவிகள்

வாழை சீப்பு வெட்டும் கருவி


வாழை சீப்பு வெட்டும் கருவி

வாழை சீப்பு வெட்டும் கருவி

  • சிபெட் (CIPHET) வாழை சீப்பு வெட்டியானது குலையிலிருந்து சீப்புகளைப் பிசிறின்றி சரியாக வெட்ட உதவுகின்றது. இக்கருவியில் சீப்புகளிலுள்ள காய்களுக்கோ வெட்டும் மனிதர்களுக்கோ காயம் (சாதாரண அரிவாள் / கத்தி கொண்டு வெட்டும் போது ஏற்படுவது போல்) ஏற்படாமல் சீராக வெட்டப் பயன்படுகின்றது.

  • இக்கருவி மூலம் அனைத்து அளவுள்ள கிளைகளிலிருந்து சீப்புகளைப் பிரிக்கலாம்.

  • கருவியை குலையின் மீது வைத்து, இலேசாக அழுத்தினால் சீப்பு தனியாக வந்துவிடும்.

  • ஒரே நபர் குலையைப் பிடித்து சீப்புகளை வெட்டிவிட முடியும்.

  • இந்த சிபெட் வாழை வெட்டும் கருவியின் மூலம் ஒரு குலையில் 10-15 வாழைக் காய்கள் வீணாகாமல் (அதாவது 2 முதல் 8 சதவிகித காய்கள் இழப்பீடு) தடுக்கப்படுகின்றன.

  • இக்கருவியின் விலை கட்டுமானம் மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ.200.

மேலே செல்க

வாழை பழுக்கும் கூடம்



செயல்பாடு :
  • வாழைப் பழங்களை பழுக்க செய்யப் பயன்படுத்தப்படுகிறது

வாழை பழுக்கும் கூடம்

சிறப்பியல்புகள்:
  • 5 நாள் சுழற்சி காலத்தில் பழங்கள் பழுக்கின்றன.

  • இதனுள்ளே வாயுக்கள் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்ட அறையும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் அமைப்பும், கார்பன்டை ஆக்ஸைடு, எத்திலீன் வாயுக்களின் அடர்த்தியை ஒழுங்குப்படுத்தவும் ஏற்றவாறு இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாழைப் பழங்களை பின்வரும் முறைகளால் பழுக்கச் செய்யலாம்:
  • எத்திலின் உற்பத்தியைக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.

  • எத்திலின் வாயு கொள்கலன் கொண்டு முழுதும் தானியிங்கக் கூடிய ஒருங்கிணைந்த பழுக்கும் அமைப்புக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.

  • எத்திலின் வாயு கொள்கலன் கொண்ட பகுதி தானியங்கும் ஒருங்கிணைந்த பழுக்கும் அமைப்புக் கொண்டு பழுக்கச் செய்யலாம்.

மேலே செல்க

வாழை வெற்றிடச் சிப்பமிடுதல்


சிறப்பம்சங்கள்
  • வாழைக் காய்கள் பழுப்பதை குலைகளை மூட்டை கட்டுவதன் (சிப்பமிடல்) மூலம் தாமதப்படுத்தலாம்

  • இவ்வாறு வெற்றிடத்தில் மூட்டை கட்டப்பட்ட வாழைக் காயகள் 21 நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

  • இம்முறையில் ஒரு இரசாயனமும் கலப்பதில்லை.

  • அதோடு காய்களின் தரமும் பாதிக்கப்படுவதில்லை.

வாழை வெற்றிடச் சிப்பமிடுதல

வாழை வெற்றிடச் சிப்பமிடுதல

 

விபரங்கள் :
  • தேவைப்படும் ஆற்றல்                          : 0.5 குதிரைத் திறன்.

  • கருவியின் விலை (தோராயமாக)        : ரூ.1,50,000/-

  • செயல்படுத்த ஆகும் செலவு                 : ரூ.15/ மணி

பொதுவான தகவல் 

வாழை அறுவடை செய்த 3 முதல் 5 நாட்களில் காய்கள் பழுத்துவிடும். இதனால் அதிக தூரம் எடுத்துச் செல்லும் போதும், ஏற்றுமதியின் போதும் அதிகளவு காய்கள் பழுத்து வீணாகின்றன. இதனைத் தடுக்க முதிர்ந்த வாழைக் காய்களை வெற்றிடத்தில் மூட்டைக் கட்டி வைத்தால் அவை காற்றுடன்/ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளாமல் தடுக்கப்படுகிறது. பின்பு மூட்டையை பிரித்தபின் ஒரே வாரத்தில் பழுத்துவிடும்.

மேலே செல்க

வாழைக் குலை வெட்டும் கருவி


வாழைக் குலை வெட்டும் கருவி

வாழைக் குலை வெட்டும் கருவி

  • இயந்திர அறுவடைமுறை வாழைக்குலைகள் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும் பகுதிகளில் பின்பற்றப்படுகிறது         

  • இவ்வியந்திரம் மைய விசையைப் பற்றிச் சுழலும் முறையில் செயல்படுகிறது.           

  • இவ்வியந்திரம் வாழை மரத்தினைச் சேதப்படுத்தாமல் குலையினை அறுவடை செய்கின்றது. மேலும் விவசாயிகளுக்கு உப வருமானம் தரும் நாரும் அதன் கொண்ணையிலிருந்து பிரித்தெடுக்கவும் இவ்வியந்திரம் பயன்படுகிறது.

மேலே செல்க

வாழைக் கொத்து அகற்றும் கருவி


   
செயல்பாடு :
  • வாழைக் கொத்துக்களை அகற்றுதல்

வாழைக் கொத்து அகற்றும் கருவி

வாழைக் கொத்து அகற்றும் கருவி

விபரங்கள் :
  • வகை                                                      : டிராக்டரால் இயங்கக் கூடியது

  • செயலாற்றல்                                          : 4 எக்டர் நாளொன்றுக்கு

  • கருவியின் விலை                                   : (தோராயமாக) : ரூ.10,000/-

  • ஒரு முறை பயன்படுத்த ஆகும் செலவு    : Rs.500 / ha

  • சிறப்பம்சங்கள்                                      : டிராக்டரால் செயல்படும் வாழைக் கொத்து நீக்கும் கருவி.

  • வேலையாள் தேவை                              : 2 (1 ஓட்டுநர் + 1 உதவியாளர்).

  • நேரச் சேமிப்பு                                       : 85%

  • ஆட்கூலி சேமிப்பு                                  : 90%

மேலே செல்க

பதப்படுத்தும் கருவிகள்

வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம்


    வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம்

  • இவ்வியந்திரத்தின் உதவியுடன் எளிதாகவும், திறம்படவும் வாழைத் தண்டிலிருந்து நாரினைப் பிரித்தெடுக்க உதவுகிறது. வெறும் 30 நிமிட பயிற்சியின் மூலம் எவரும் இவ்வியந்திரத்தை எளிதில் இயக்கலாம்

  • இவ்வியந்திரம் கையினால் வாழைநார் பிரித்தெடு்ப்பதில் உள்ள சிரமத்தைக் குறைப்பதுடன், ஒரு சுத்தமான சூழ்நிலையை அளிக்கிறது. இது அதிக அளவில் நாரினைப் பிரித்தெடுக்க உதவுவதால் நல்ல இலாபம் பெற முடிகிறது.

  • இயந்திரத்தில் இரும்பாலான விறைப்பான அமைப்பு ஒன்று உள்ளது. இதில் பிளம்மர் அடைப்புத் தாங்கிக்குள் வாழை நார் பிரித்தெடுக்கும் ரோட்டார் பொருத்தப்பட்டுள்ளன.

  • அனைத்து வகையான வாழை வெளித்தண்டு, இலைக்குருத்து மற்றும் பூக்குருத்துகளிலிருந்தும் நார் பிரித்தெடுக்கலாம்

  • நார் பிரித்தெடுக்கும் போது, அதை சுத்தம் செய்யவும், உமியினை நீக்கவும் இரு நிலைகளில் பிரஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரஷ்களை எளிதில் அகற்றி சுத்தம் செய்து கொள்ளலாம்  

  • நாளொன்றுக்கு 8 மணிநேர வேலையில் 50 கி.கி நாரினைப் பரித்தெடுக்கலாம். குறைந்த பராமரிப்பு செலவே. 

  • பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

  • இவ்வமைப்பு முழுவதும் அரை (0.5) குதிரைத் திறன் மோட்டாரினால் இயங்குகிறது. எனவே மின்சார (ஆற்றல்) தேவை குறைவு.

  • இயந்திரத்தின் மொத்த எடை 80 கிலோ.

மேலே செல்க

வாழைப்பழங்களை உரிக்கும் இயந்திரம்


செயல்பாடு:
  • வாழைப்பழங்களை உரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

  • வாழைப்பழங்களை உரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெட்டும் மற்றும் பிரிக்கும் மூன்று சுற்றும் சக்கரங்கள் கொண்ட புறப்பரப்பின் மீது வாழைப் பழங்களின் காம்புப்பகுதியை வைத்து, வாழைப்பழத் தோலை அதனுடைய சதைபகுதியிலிருந்து உரித்து எடுக்கலாம்.

  • வாழைப்பழங்களை உரிக்கும் இயந்திரம்

     

விவரம்:

தேவைப்படும் விசையாற்றல்      : 1 எச்.பி மின் மோட்டார்
உரிக்கும் இயந்திரத்தின் அளவு : 450 மி.மீ (நீளம்) x 400 மி.மீ (அகலம்) x 875 மி.மீ (உயரம்)
உற்பத்தி கொள்திறன்               : ஒரு மணிநேரத்திற்கு 250 – 350 கிலோ
எடை                                       : 88 கிலோ

சிறப்பியல்புகள்:
  • தனிப்பட்ட , உறுதியான அமைப்பு

  • அனைத்து இணைப்புப் பகுதிகளும் துருப்பிடிக்காத இரும்பு கொண்டு செய்வதால் எந்த விதமான அரிப்பும் ஏற்படாது

  • அதிகமாக தோல் உரிக்கும் திறன் கொண்டது

  • நல்ல செயல்பாடுகள், குறைவான அதிர்வுகளுக்காக அனைத்து சுற்றும் பகுதிகளும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

  • குறைவான வெப்பநிலையில் உரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் பழத்தில் எந்த வித சுவையும் மாறாது.

மேலே செல்க

வாழைப்பழ நறுக்கும்  இயந்திரம்


 

செயல்பாடு

வாழைப்பழங்களை  அப்படியே நறுக்குவதற்கும், சில்லுகள் (சிப்ஸ்) செய்யவும் பயன்படுகிறது.

  • உரிக்கப்பட்ட வாழைக்காய்களை நறுக்கும் இயந்திரத்தில் மனிதனால் போடப்படுகிறது. இது ஒரு வழிகாட்டி மூலம் உள்ளே அனுப்பப்படுகிறது.

  • பொரிக்கும் சட்டிக்கு மேலே அமைக்கப்பட்ட கையால் அழுத்தக்கூடிய இயந்திரமாகும்.

  • துண்டாக்கிய சில்லுகளின் வடிவம் வட்டமாக 2-3 மி.மீ. அளவுடன் இருக்கும்.

  • இயக்குவதற்கு எளிது. குறைவான பராமரிப்பு.

  • இந்த இயந்திரத்துடன் ஒரு வெட்டும் தட்டு, சரிசெய்யக்கூடிய  தகட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

  • இந்த இயந்திரம் துருப்பிடிக்காத இரும்பு கொண்டு செய்யப்பட்டது.

விவரம்:

வெட்டும் கொள்திறன்         : ஒரு மணி நேரத்திற்கு 150 கிலோ வாழைப்பழ சில்லுகள

மோட்டார்                          : மூன்று இணைப்பு கொண்ட 1 எச்.பி

அளவு                                 : 24”x18”x16”

அலுமினிய பூச்சுடைய வெட்டும் தட்டு, அதிக திறனுடன் இயங்கும் தகடு கொண்டது.

எடை                                  : 80 கிலோ

சிறப்பியல்புகள்:
  • ஒரே மாதிரியான, சிறந்த பொருள் தரமுடையது.

  • குறைவான பராமரிப்பு, மின் சக்தி குறைவாகப் பயன்படுகிறது.

  • சுத்தம் செய்வது எளிது.

  • அதிக திறன் கொண்டது.

  • எளிதான செயல்பாடு, சுகாதாரமான வடிவமைப்பு.

மேலே செல்க

வாழைப்பழ சில்லுகள் செய்யும் இயந்திரம்


செயல்பாடு
  • வாழைப்பழ சில்லுகள் (சிப்ஸ்) செய்யப் பயன்படுகிறது.

சிறப்பியல்புகள்:
  • குறைவான சக்தி பயன்பாடு.

  • அரிப்பு ஏற்படுவதற்கு எதிர்ப்புச் சக்தி கொண்டது.

  • அதிக செயல்பாட்டுத் திறன் கொண்டது.

  • நீடித்து உழைக்கக் கூடியது மற்றும் பயன்திறன் கொண்டது.

மேலே செல்க

வாழை அடுக்கு வறுகலம்


சிறப்பியல்புகள்:
  • உற்பத்தி கொள்திறன் : மணிக்கு 25-30 கிலோ வாழை சில்லுகளை வறுக்கிறது.

  • துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்ட  வட்ட அடுக்கு வறுகலன் கொண்டது.

  • திரை அளவு 45”x45” சட்டியுடன் உயரம்40”.

  • மோட்டாரால் இயங்கும் காற்றோட்ட பொறி : ½ எச்.பி. மோட்டார் 2800 ஆர்.பி.எம், 3 மின் இணைப்பு.

  • டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு கொண்டு இயக்கப்படும்.

  • துருப்பிடிக்காத இரும்பு வட்ட வறுகலன், 14” பர்னர் கொண்ட வடிவமைப்பு (பகுதி தானியங்கி).

மேலே செல்க

அலுமினிய வறுக்கும் சட்டி


சிறப்பியல்புகள் :
  • அடக்கமான அமைப்பு, பயன்படுத்துவது எளிது, பாதுகாப்பான பயன்பாடு

வாழை மர உரிக்கும் இயந்திரம்


  • சிறப்பியல்புகள் :
    • வாழை மரத்தை 3 அடுக்குப் பகுதியாக  உரிக்கலாம்.

    • மேல் உள்ள அடுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

    • நடுப்புற அடுக்கு ஜவுளித் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், பைகள் மற்றும் பலவிதமான பயன்பாடுகளுக்கும் உதவுகிறது.

    • உட்புற அடுக்கு பேப்பர் தயாரிக்கப் பயன்படுகிறது.

    • மணிவகை : விசையாற்றலால் செயல்படக் கூடியது.

    • தேவைப்படும் ஆற்றல் : ½ எச்.பி. பவர் மோட்டார், 950 ஆர்.பி.எம்.

    • கொள்திறன் : ஒரு மணி நேரத்தில் 15 கிலோ மூலப்பொருட்கள்

    • விலை : ரூ.30,000/-

    மேலே செல்க

  •