முதல் பக்கம் தொடர்புக்கு  

மஞ்சள் கரிப்பூட்டை நோய்
(உஸ்டிலாஜினோய்டியா வைரன்ஸ்) (பூசண நோய்)

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • ஒவ்வொரு தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட தானிய நெல்லில் மென்பட்டுத் துணி போன்ற தோற்றத்துடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ உருண்டைகள் காணப்படும்.
  • முதலில் இந்த உருண்டைகள் மிகவும் சிறியதாகவும் பின் வளர்ச்சியடைந்து 1 செ.மீ அளவு வரை பெரிதாகிறது.
  • இவை நெல் உமிக்களுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளை சுற்றியும் காணப்படும். கதிரிலிருக்கும் சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும் மற்ற அனைத்தும் நல்ல மணிகளாகவே இருக்கும்.
  • பூசண வளர்ச்சி தீவிரமாகும்போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான பச்சை அல்லது கருப்பச்சை நிறத்திலும் மாறிவிடுகிறது.
  • பொதுவாக இனபெருக்க நிலை மற்றும் பயிர் முதிர்ச்சி நிலைகளில் இந்நோய், தாக்கப்பட்டு கதிரிலுள்ள சில தானியங்களை மட்டும் தாக்கி மற்ற தானியங்களை நல்ல தானியங்களாகவே விட்டுவிடுகின்றன.
1-Discolouration of grains 2-grains transformed into a mass of yellow fruiting bodies
நிறமாற்றமாகிய தானிய மணிகள் தானிய மணிகள் மஞ்சள் நிற பூசணக் கலவையாக மாறிவிடும்
3-greenish black  smut balls with a velvetty appearance 4-Smut balls bursts and becomes black in color
மிருதுவான கரும் பச்சை நிற கரிப்பூட்டை உருண்டைகள் மிருதுவான கரும் பச்சை நிற கரிப்பூட்டை உருண்டைகள்

மேலே செல்க

  நோய் காரணி - உஸ்டிலாஜினோயிடியா வைரன்ஸ் (பூசண நோய்)
false smut spores
கரிப்பூட்டை பூசணவித்துகள்
microscopic view of sporesநுண்நோக்கியின் பார்வையில் பூசண வித்துகள்

  • பூசணவித்து உருண்டைகளில் பூசண இழை வித்துக்கள் உருவாகும். சிறிய பூசண வித்துக்காம்புகளின் மேல் பக்கவாட்டில் உருவாகிறது. பூசண இழைவித்துக்கள் உருளை வடிவத்திலிருந்து நீள் உருளைவடிவமாகவும், பரு போன்றும் 3-5 x 4-6 மீட்டர் அளவிலும் காணப்படும். இளம் பூசண வித்துக்கள் சிறியதாகவும், நிறம் வெளுத்தும் மென்மையாகவும் இருக்கும்.
  • சில பச்சை பூசண வித்து உருண்டைகள் ஒன்று முதல் நான்கு இழைமுடிச்சுக்களை உருவாக்குகிறது. இவ்விழை முடிச்சுக்கள் வயலில் குளிர்காலத்தில் நன்கு உயிர்பிடித்து தொடரும் கோடைக்காலத்தில் அல்லது இலையுதிர்க்காலத்தில் காம்புடைய பாய் பூசனத்தை உருவாக்குகிறது.
  • பூசண இழைமுடிச்சுகளில் இருந்து உருவாகும் இழைவித்துகள்தான் முதன்மை நிலை தாக்குதலை உருவாக்குகிறது எனக் கண்டறியப்படுகிறது.
  • இரண்டாம் நிலை நோய் தாக்குதலில் உறக்கநிலை பூசண இழை வித்துக்கள் நோய்ச் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நோய் வளர்ச்சிக்கு சாதகமான நிலைகள்:

  • மழை மற்றும் அதிக ஈரப்பதம்
  • அதிக தழைச்சத்துத் தன்மை கொண்ட மண்.
  • அதிக காற்று இருப்பதினால், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பூசண வித்துக்கள் எளிதில் பரவுகின்றன.
  • இழைமுடிச்சுக்கள் மற்றும் இழைவித்துக்களைப் போல் பூசணங்கள் குளிர்காலத்தில் உயிர்பிடித்திருத்தல்.
  • நெற்பயிர் பூத்தல் பருவம்.
Ustilaginoidea virens spores from infected rice grain
உஸ்டிலாகினாய்டியா வைரன்ஸ் பூசண வித்துகள்
 

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
தடுப்பு முறை:
  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் என்ற அளவில் கார்பன்டசிம் உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
  • பூச்சிக்களைக் கட்டுப்படுத்துதல்.
  • தழைச்சத்து உரத்தை பிரித்து அளிக்கவேண்டும்.
  • நோய் தாக்கப்பட்ட பயிர் துார்களை அகற்றி அழிக்கவேண்டும்.
Use Dieases Free Seeds Seed treatment with Carbendazim
நோயற்ற விதைகளை பயன்படுத்தவும் கார்பெண்டசிமுடன் விதை நேர்த்தி


உழவியல் முறை:
  • நோய் தாக்கப்பட்ட பயிர்களின் வைக்கோல் மற்றும் துார்களை அழிக்கவேண்டும்.
  • நோயைத் தாங்கக் கூடிய அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • நெற்பயிர்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் உழவியல் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தாமதமாகப் நடப்பட்ட பயிர்களைக் காட்டிலும் முன் நட்ட பயிர்களில் குறைந்த நெற்பழ உருண்டைகளே காணப்படுகின்றன.
  • அறுவடையின்போது நோய் தாக்கப்பட்டச் செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
  • மாற்று பயிர்களை அழிப்பதற்கு, வயல் வரப்புகள் மற்றும் பாசன வாய்க்கால்களை சுத்தமாக வைத்தல் வேண்டும்.
  • மிகுதியான தழைச்சத்து உரம் அளித்தலை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்ப்பருவத்தில் நோய்த் தாக்கத்தை முறையாகக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.
  • வைக்கோல் மற்றும் பயிர்த்துார்களை அகற்றி அழித்தல் வேண்டும்.
destruction of straw and stubbles keep irrigation channel clean
வைக்கோல் மற்றும் தூரக்கட்டைகளை அழிக்கவும் பாசன வாய்க்காலை சுத்தமாக வைக்கவும்
keep the bunds clean use LCC to avoid excess application of nitrogen
வரப்புகளை சுத்தமாக வைக்கவும் இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்தை அளவாக இடவும்


இரசாயன முறை:
  • கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு “காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்” அல்லது “ப்ரோபிகோனசோல்” 10 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • கார்பென்டசிம் (2.0 கிராம்/கிலோ விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • துார்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களிலும் கார்பென்டசிம் மற்றும் தாமிரம் சார்ந்த பூசணக் கொல்லிகளை தெளிக்கவேண்டும்.
spray Copper oxychloride spray Hexaconazole
காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளிக்கவும் ஹெக்ஸகோனோசோல் தெளிக்கவும்
மேலே செல்க