|
தானியம் நிறமாற்றம் ஏற்படுதல்
|
நோய்க்காரணி: |
|
|
|
|
பலவகை பூஞ்சாண்கள்
- டிரெச்ஸ்லிரோ ஒரைசே, டிரெச்ஸிலிரா ரோஸ்ட்ரேட்டம், டிரெச்ஸிரா டெட்ராமீரா, கர்வுலேரியா லுனேடா, டிரைகோகோனஸ் படவிக்கீ, சேரோகிலேடியம் ஒரைசே, ஆல்டர்னேரியா டென்னுாயிஸ், ஃபுசேரியம் மொனிலிஃபார்ம், கிலேடோஸ்போரியம் ஹெர்பேரியம், எபிகாக்கம் கர்பூராசென்ஸ், செபலோஸ்போரியம், சிற்றினம், போமா சிற்றினம், நைக்ரோஸ்போரா சிற்றினம்.
சாதகமான நிலைகள்:
- பூட்டைப் பருவத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் முகில் மூடிய வானிலை
|
கர்வேலேரியாவின் பூசண வுித்துகள் |
இழைவடிவ பூசண வித்துக்கள் |
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
தடுப்பு முறை:
- நோயற்ற விதைகளைப் பயன்படுத்துதல்.
- ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் கார்பென்டசிம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்தல் வேண்டும்.
- பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்.
- நோய் தாக்கப்பட்ட பயிர்த் துார்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.
|
|
|
நோயற்ற விதைகளை பயன்படுத்தவும் |
கார்பெண்டசிமுடன் விதை நேர்த்தி |
|
இராசயன முறை:
- கேப்டன், கேப்டஃபால், ஃபென்டின் ஹைடுராக்சைடு, மற்றும் மேன்கோசெப் அளிக்கவேண்டும்.
- துார்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களில் கார்பெடன்சிம் மற்றும் தாமிரம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்.
- அறுவடைக்கு முன் மற்றும் அறுவடைக்குப் பின்னர் பின்பற்றப்படும் செயல்முறைகளை மேற்கொள்ளுவதால், தானியம் நிறமாற்றம் அடைவதைத் தடுக்க முடிகிறது.
- நெற்பயிரின் கதிர் இலைப்பருவத்தில் மேன்கோசெப் 1 கிலோ (அல்லது) இப்ரோபென்பாஸ் 500 மிலி (அல்லது) கார்பென்டசீம் 250 கிராம்/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
- தானியங்களை 13.5-14% ஈரத்தன்மையில் சேமிப்புக் கூடத்தில் பாதுகாக்க வேண்டும்.
|
|
|
கேப்டான் |
கண்ணாடி இலைபருவத்தில் மேங்கோசெப் தெளிக்கவும் |
|
மேலே செல்க |
|