கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
பொறி முறை:
-
விளக்குப்பொறிகளை வயலில் வைக்கவேண்டும்
- அதிகாலை வேளையில் விளக்குப்பொறியின் அருகில் மின்னிப் பறந்து கொண்டிருக்கும் தத்துப்பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தோ/துாவியோ கொல்லலாம். இம்முறையை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
|
|
|
த.வே.ப.க. - விளக்குப்பொறி |
விளக்குப்பொறி அருகில் பென்தியான் அடிக்கவும் |
|
உழவியல் முறை:
- நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரங்களான ஐஆர் 36, ஐஆர் 50, ஏடீடி 37, பொன்மணி, கோ 45, கோ 48, சுரேகா, விக்ரமார்யா, பரணி, ஐஆர் 36, மற்றும் வெள்ளைப் பொன்னி ஆகியவற்றை பயிரிடலாம்.
- நாற்று நடவு செய்யும் தேதி மாற்றியமைக்கவேண்டும்
- தரிசு நிலமாக குறைந்தது ஒரு மாத காலமாவது விடுவது அவசியம். இதனால் நச்சுயிரிகள் மற்றும் நோய் பரப்பும் உயிரிகள் ஆகியவற்றை அழிக்க முடிகிறது.
- நோய்அதிக் தாக்கும் பகுதிகளில் பயறுவகை அல்லது எண்ணெய் வித்துப் பயிர்களுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ளவேண்டும்.
- 20 சென்ட் நாற்றங்காலில் வேப்பம்புண்ணாக்கு 12.5 கிலோவை அடியுரமாக அளிக்கவேண்டும்.
- அறுவடைக்குப் பின் வயலை உழுதல் மற்றும் பரம்படிக்கவேண்டும். வரப்புகள் மற்றும் பாத்திகளிலிருக்கும் களைகளை அழித்தல் வேண்டும்.
|
|
|
நாற்றங்காலில் வேப்பம்புண்ணாக்கு இடவும் |
தூர்கட்டைகளை உழுதுவிடவும் |
|
|
|
|
ஏடிடீ 37- எதிர்ப்புத்திறன் கொண்ட ரகம் |
கோ 48 - எதிர்ப்புத்திறன் கொண்ட ரகம் |
|
இரசாயன கட்டுப்பாட்டு முறைகள்:
- 2% யூரியாவை 2.5 கிராம்/லிட்டர் மேன்கோசெப்புடன் கலந்து தெளிக்கவேண்டும்.
- யூரியா இலைவழி உரமான பலவகை சாம்பல் சத்துக்கு பதிலாக உரத்தை 1% என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
- தகுந்த நேரத்தில் இராசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பச்சைத் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
- நாற்று நடவிற்கு பின் 15 மற்றும் 30 வது நாட்களிலும், வயல் வரப்பிலும் மோனோக்ரோட்டோபாஸ் 36 WSC (40 மிலி/எக்டர்) (அ) ஃபென்தியான் 100 EC (திரவமாற்று திரட்டு) (40 மிலி/எக்டர்) பூச்சிக்கொல்லிகளை இருமுறை தெளிக்க வேண்டும்.
- நாற்றங்காலில் 2.5செ.மீ நீர் இருக்குமாறு வைக்கவேண்டும். கார்போஃபூரான் 3 ஜி 3.5 கிலோ (அ) ஃபோரேட் 10 ஜி 1.0 கிலோ (அ) குயினால்பாஸ் 5 ஜி 2.0 கிலோ 20 சென்ட் நாற்றங்காலில் வீசித் துாவிவிட வேண்டும்.
- நாற்றங்காலில் நச்சுயிரி தாக்குதல் குறைவாக இருப்பின் கார்போஃபூரான் @ 1 கிலோ/எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.
- முன் துார் விடும் பருவத்திலிருந்து மத்திய துார் விடும் பருவம்வரை தாக்கப்பட்ட குத்து 1 மீட்டர் காணப்பட்டாலும், கார்போஃபூரான் குருணைகள் @ 3.5 கிலோ/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் @ 1.6-2.2 மிலி/லிட்டர் தெளிக்கவேண்டும்.
|
|
|
கார்போபியூரான் இடவும் |
போரேட் இடவும் |
|
|
மல்டி-K நீரில் கரையும் சாம்பல்சத்து இலைவழி தெளிக்கவும் |
யூரியா + மேன்கோசெப் தெளிக்கவும் |
மேலே செல்க |