முதல் பக்கம் தொடர்புக்கு  

எறும்புகள்

தாக்குதலின் அறிகுறிகள் :
  • பெரும்பாலும் மேட்டுப்பாங்கான நெல் வயலில் அதிகம் காணப்படும்.
  • நெல் மணிகளின்றி காணப்படும்.
  • பயிர்கள் இல்லாமலும் அல்லது சில பயிர்கள் இல்லாமலும் இருக்கும்.
  • நெற்பயிரின் எண்ணிக்கையில் இழப்பு ஏற்படும்.
  • வயலில் பூச்சிகளால் ஏற்பட்ட சேதம் ஆங்காங்கே பரவியிருக்கும்.
எறும்புகளின் தாக்குதல்

மேலே செல்க

பூச்சிகளை கண்டறிதல் :  
             அறிவியல் பெயர் - சொலெனோப்சிஸ் ஜெமினேடா

  • முட்டைகள்:
    ராணி எறும்புகள் பொதுவாக 75-125 முட்டைகளை கூட்டமாக இடும்.


  • கூட்டுப்புழு :
    கூட்டுப்புழு வெள்ளை நிறத்தில் காணப்படும். இவை கூடுகளுக்குள்ளே வளர்ச்சி பெறும்.


  • முதிர்பூச்சி :
    வளர்ச்சியடைந்த எறும்புகள் சிவப்பு கலந்த பழுப்பு நிற உடலுடன் பழுப்பு நிற தலையைக் கொண்டு காணப்படும். இவை வலுவான கீழ்தாடைகள் மற்றும் கீழ்தாடைப் பற்களைக் கொண்டது.
எறும்புகள்

மேலே செல்க

மேலாண்மை :  


  • விதை அளவை அதிகப்படுத்துவதால் எறும்புகளால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யலாம்.

  • விதைகளை துகள் வடிவப் பூச்சிக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் எறும்புகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும்.
அதிகளவு விதை பயன்படுத்தவும் பூச்சிக்கொல்லிகளுடன் விதைகளை நேர்த்தி செய்யவும்
 
மேலே செல்க