முதல் பக்கம் தொடர்புக்கு  

கொம்புப்புழு

தாக்குதலின் அறிகுறிகள் :


  • இலைத் தாள்களை புழுக்கள் உண்ணும்.
  • இலைகளின் ஓரங்கள் அல்லது நுனியிலிருந்தோ ஒழுங்கற்றவாறு உண்டு, இலைகள் உதிர்ந்துவிடும்.

புழுக்கள் இலைகளை உண்ணும் கொம்பு புழுக்கள் வயலில் காணப்படும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

        அறிவியல் பெயர் - மெலானிடிஸ் லிடா இஸ்மெனே

  • முட்டை :
    வெள்ளை நிறத்தில், முட்டை வடிவமாக நெற்பயிர் இலைகளின் மேல் தனித்தனியாக இடப்படும்.

  • புழு :
    பச்சை நிறத்தில் சொரசொரப்பான தோலுடன், மேல்புறம் தட்டையாகவும் காணப்படும். கரும்பழுப்பு நிற தலையுடன், சிகப்பு நிறத்தில் இரண்டு கொம்பும், பின்புறத்தில் மஞ்சள் நிற கொடுக்கும் காணப்படும். இப்புழுக்கள் இலைகளை உண்கின்றன.

  • கூட்டுப்புழு :
    கரும்பச்சை நிற கூட்டுப்புழு இலைப்பரப்புடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

  • முதிர்பூச்சி :
    அடர்பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன், ஒவ்வொரு முன் இறக்கைகயிலும் சில கருப்பு மற்றும் மஞ்சள் நிறக் கண் போன்ற குறிகளுடனும், பின் இறக்கைகளில் ஆறு கண் போன்றப் புள்ளிகளையும் கொண்டிருக்கும்.
   
கொம்புப்புழு கொம்புப்புழு
 
முதிர்ப்பூச்சி  

மேலே செல்க

மேலாண்மை :

  • வரப்புகளை சீர் செய்து, உழவு செய்வதால் பூச்சிகளின் முட்டைகளை மண்ணிற்கு வெளியே கொண்டு வரமுடியும். இதனை பறவைகள் இரையாக்கிக்கொள்கின்றன.
  • 5-10% பியூட்டா ஹெக்ஸா குளோரைடு (அ) மிதைல் பாரத்தியான் 2 % @ 25- 30 கிலோ/எக்டர் (அ) ஃபெனிட்ரோதியான் (அ) மேலத்தியான் 5% @ 20 கிலோ/எக்டர் என்ற அளவில் துாவிவிட வேண்டும்.
  • நுவான் 100 இ.சி.@ 200 மிலி/எக்டர் (அ) மாலத்தியான் 50 இ.சி @ 2.5 லிட்டர்/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • என்டோசல்பான் 35 இ.சி. 1000 மிலி/எக்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500 மிலி/எக்டர் என்ற அளவில் தெளித்தல் வேண்டும்.
  • உயிரி கட்டுப்பாட்டு காரணிகளான கக்காலஸ் சிற்றினம், பேரிகோமஸ் சிற்றினம், சீலியோ சிற்றினம் ஆகிய முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • டிரைக்கோகிரேம்மா ஜப்போனிகம் என்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 30 மற்றும் 37 வது நாட்களிலும் (இருமுறை) டிரைக்கோகிரேம்மா சிலோனிஸை நடவு செய்த 37, 44 மற்றும் 51 நாட்களிலும் (மூன்று முறைகள்) வயலில் வெளிவிட வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 1000 மிலி/எக்டர் என்ற அளவில் நடவு செய்த 58, 65 மற்றும் 72 வது நாட்களில் மொத்தம் மூன்று முறைகள் தெளிப்பதால் பூச்சியின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
  • குளவிகள் முட்டை ஒட்டுண்ணியாக செயல்படுகிறது.
  • சல்சிட் குளவி மற்றும் டேகினிட் குளவிகளின் இரு சிற்றினங்கள் புழு ஒட்டுண்ணியாகவும், வெஸ்பிட் குளவி புழுவை இரையாகவும் உண்கின்றன.
   
மோனோகுரோட்டோபாஸ்
தெளிக்கவும்
டிரைக்கோகிரேம்மா ஜப்போனிகம
 
நாற்றங்காலில் நீரை தேக்குவதால் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம்  
மேலே செல்க