|
ஸ்கிப்பர் பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள் : |
- இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். சில சமயங்களில் இலையின் நடுநரம்பை மட்டும் விட்டு விட்டு, இலைப்பரப்பு முழுவதையும் சுரண்டி உண்டு விடும்.
- இலையின் நுனியை கீழ்நோக்கி சுருட்டும் அல்லது அதே இலையை இரு பக்கமும் சுருட்டும் அல்லது அடுத்தடுத்த இரு இலைகள் பட்டுப்போன்ற நுால்களால் ஒன்று சேர்க்கப்பட்டு, ஒரு அறை போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.
- நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலும் இதன் பாதிப்பு காணப்படும்.
தாக்குதலின் தன்மை :
- புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் இருந்து கொண்டு இலைகளை உண்ணும்.
- இலையின் திசுப்பகுதியை சுரண்டி உண்டு, நரம்புகள் மட்டும் வெளியே தெரியும்
|
|
|
|
|
இலைகளை கீழ் நோக்கி சுருட்டி, திசுக்களை சுரண்டும் |
இரு இலை ஓரங்களை சேர்த்து மடித்து, உள்ளிருந்து திசக்களை சுரண்டும் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - பெலோபிடாஸ் மேத்தியாஸ்
- முட்டை :
இலைகளின் மேல் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- புழு :
புழுக்கள் நீளமாக, மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், மேல்புறத்தில் 4 வெள்ளை நிறக் கோடுகளுடனும், மென்மையான கழுத்துப் பகுதியுடன், தலையில் தெளிவான ‘V’ வடிவ சிவப்பு நிறக்குறியுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு :
வெளிரிய பச்சை நிறத்துடன், வெள்ளை நிற பக்கவாட்டுக் கோடுகளைக் கொண்டும், இலைத்தாளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.
- முதிர்பூச்சி :
அடர் பழுப்பு நிறத்தில், இறக்கைகளின் மேல் இரண்டு வெள்ளைநிறப் புள்ளிகளுடன் காணப்படும். |
|
|
|
|
புழு |
முதிர்பூச்சி |
|
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
உழவியல் முறைகள்:
- நாற்றங்காலில் வெள்ளப்பாசனம் செய்தால் மறைந்திருக்கும் புழுக்களை மேற்பரப்பிற்கு கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தித் உண்ணும்.
- மண்ணெண்ணெயை பாசனம் செய்யும் நீரில் கலந்து விடும் போது மூச்சுத் திணறல் ஏற்படுத்த செய்யலாம்.
- வயலில் வாத்துக்களை விட்டு புழுக்களை உண்ணச்செய்யலாம்.
|
|
|
வயலில் வாத்துகளை விடவும் |
நாற்றங்காலில் நீரை தேக்கி நிறுத்தவும் |
|
|
இரசாயன முறைகள் :
- வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 80 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
|
|
|
குளோர்பைரிபாஸ் தெளிக்கவும் |
|
|
உயிரியல் முறைகள் :
- சிறு குளவிகள் ஸ்கிப்பர் பூச்சிகளின் முட்டைகளின் மீது ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு உண்டுவிடும். அதன் புழுக்களை பெருங்குளவிகள் மற்றும் குதிரை ஈ வகைகள் உட்கொள்ளும். பின் இதனை கொலை நாவாய்ப்பூச்சிகள் மற்றும் காதிடுக்கிப் பூச்சிகள் இரையாக்கிக் கொள்ளும். முதிர் பூச்சிகள் பறக்கும்போது வலைச் சிலந்திகள் உட்கொள்ளும்.
- டிரைக்கோகிராம்மா ஜபோனிகம் என்ற முட்டை ஒட்டுண்ணியை பயிர் நடவு செய்த 30 மற்றும் 37 வது நாட்களில் இருமுறையும், டிரைக்கோகிராம்மா கிலோனிஸ் ஒட்டுண்ணியை 37,44 மற்றும் 51 வது நாட்களில் மூன்று முறையும் விடுவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மோனோகுரோட்டோபாஸ் (1000 மிலி/எக்டர்) என்ற அளவில் நடவு செய்த 58, 65 மற்றும் 72 வது நாட்களில் மூன்று முறை தெளிப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
- அபன்டீல்ஸ் ரூஃபிரகஸ், மீடியோரஸ் சிற்றினம், சூடோபெரிசேட்டா ஒரியன்டேலிஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளை வயலில் வெளிவிட வேண்டும். ஹெக்ஸாமெர்மிஸ் வகை நுாற்புழுக்கள் புழு ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.
- நெட்டிலியா வகை, அக்டியா வகை கூட்டுப்புழுக்களின் மீது ஒட்டுண்ணியாக வாழ்வதால், இதன் தாக்குதலை கட்டுபடுத்தலாம்.
- கார்வஸ் ஸ்ப்லென்டென்ஸ், பபல்கஸ் கோரோமன்ட்ஸ் போன்ற இரை விழுங்கிகள் புழுக்களை உண்கின்றன.
- நச்சுயிரிகளும் ஸ்கிப்பர் புழுக்களை தாக்குகின்றன.
|
|
|
|
|
உயிர்பூச்சிக்கொல்லி தெளிக்கவும் |
டிரைக்கோகிராம்மா ஜபோனிகம |
|
|
புழுவை தாக்கும் டேக்னிட் ஈ |
|
மேலே செல்க |
|