சரக்குகளை இறக்குமதி செய்ய கட்டணங்களின் பட்டியல்:
முனையம், தேக்கம் மற்றும் செயலலகக் கட்டிணங்கள்:
சரக்கு வகை |
கட்டணம் |
பொதுவான சரக்கு |
ரூபாய். 3.50 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.100 / ஒரு பொருளுக்கு |
சிறப்பான மற்றும் விலை மதிப்புள்ள சரக்கு |
ரூபாய். 7.00 / கி.கராம் குறைந்தபட்சம் ரூ.200 / ஒரு பொருளுக்கு |
அபராத வாடகைக் கட்டணம்:
கப்பல் (அ) விமானத்திலிருந்து வந்த பொருட்கள் அனைத்துக்கும் 5 நாட்கள் மட்டும் கட்டணம் கிடையாது. பிறகு வரும் முதல் 2 நாட்கள் 1கி.கிராமிற்கு ரூபாய் 1 எனவும், மற்றும் பொதுவான சரக்கிற்கு ரூ.2 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். சிறப்பு மற்றும் விலை மதிப்புள்ள சரக்கிற்கு ரூ.4 / 1கி.கிராமிற்கு வசூளிக்கப்படும். குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.250, மூ.500 மற்றும் ரூ.1000 முறையே பொது, சிறப்பு மற்றும் விலை உயர்ந்த சரக்கு கட்டணங்கள் அபராதக் கட்டணமாக வசூளிக்கப்படும்.
அபராதத் தொகை கீழ்கண்ட அட்டவணையின் மூலம் வசூளிக்கப்படும்:
வ . எண் |
சரக்கு வகை |
காலஅளவு |
கட்டணம் |
குறைந்தபட்ச கட்டணம் |
1. |
பொது வகை சரக்குகள் |
சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
30 நாட்களுக்கு மேல் |
ரூபாய்.2 / 1கி.கி 1 நாளுக்கு
ரூ.3 / 1கி.கி 1 நாளுக்கு |
ரூ.250 |
2. |
சிறப்பு வகை சரக்குகள் |
சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
30 நாட்களுக்கு மேல் |
ரூ.4 / 1கி.கி 1 நாளுக்கு
ரூ.6 / 1கி.கி 1 நாளுக்கு |
ரூ.500 |
3. |
விலை மதிப்பு மிக்க சரக்குகள் |
சரக்கு வந்த 7ம் நாளில் இருந்து 30ம் நாள் வரை
30 நாட்களுக்கு மேல் |
ரூ.8 / 1கி.கி 1 நாளுக்கு
ரூ.12 / 1கி.கி 1 நாளுக்கு |
ரூ.1000 |
குறிப்பு:
- குறிப்பிட்ட கால அளவில் சரக்குகள் இருக்கும்வரை கட்டணம் வசூளிக்கப்படமாட்டாது. ஆனால் மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டப்பட்ட கால அளவு மிகும்போது அதற்கேற்ற கட்டணங்கள் வசூளிக்கப்படும்.
- சரக்குகளைப் பிரிப்பதற்கு கட்டணங்கள் வசூளிக்கப்படுவதில்லை.
- உண்மை எடை (அ) மொத்த எடை இவற்றில் எவை அதிகமோ அவ்வெடைக்கு கட்டணம் வசூளிக்கப்படும்.
- சிறப்பு சரக்கு பெட்டகத்தில் குளிர்பதன கிடங்கு, உயிருள்ள விலங்குகள் மற்றும் அபாயகரமான பொருட்களுக்கான வசதிகள் அடங்கும்.
- சுங்கத்துறையில் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும்.
பொதிகட்டுவதற்கான கட்டணம்:
பொதியைப் பிரித்து, எடையைச் சரிபார்த்து கண்காணித்து, மறுபடி தைக்கக் கட்டணம் ரூ.3 / ஒரு பொதிக்கு விதிக்கப்படுகிறது.
இதர கட்டணங்கள்:
நிறுத்துவதற்கான கட்டணங்கள்:
இரு சக்கர மோட்டார் வாகனங்கள் - ரூ.2
கார் - ரூ.5
டெம்போ / வேன் - ரூ.10
லாரி / டிரக் - ரூ.15
அனுமதிப்பதற்கான கட்டணம்:
தினமும் வருவதற்கான அனுமதி |
கட்டணம் இல்லை |
புகைப்பட அடையாள அனுமதி |
பச்சை மற்றும் சிவப்பு நிற அனுமதி அட்டைக்கு அதிகபட்சமாக ஆறு மாதமும் மற்றும் ஒரு வருடமும் அனுமதி அளிக்கப்படுகிறது. |
|