சுய தொழில்முனைவோர் – அம்மன் நாற்றங்கால்
பெயர் |
: |
திரு.என்.சிவக்குமார் |
|
முகவரி |
: |
அம்மன் நாற்றங்கால்,
கடலூர் மெயின் ரோடு,
புதுக்கூரைப்பேட்டை,
விருத்தாசலம் தாலுக்கா
கடலூர் மாவட்டம் – 606 001 அலைபேசி எண் : 9715547407, 9865245007 |
|
குறு /சிறு/ பெரு விவசாயிகள் |
: |
சிறு தொழில் முனைவோர் |
|
வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு
நாற்று உற்பத்தி மேலாண்மை உத்திகள்
- திரு.என்.சிவக்குமார் ஆரம்பக் கட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் நாற்றங்கால் வைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து விற்றதில் எதிர்பார்த்த லாபம் அடையாமல் இருந்து வந்தார்.
- அவர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நாடி தனக்கு நாற்றங்காலில் அதிக வருவாயை ஈட்ட பயிற்சி தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அது குறித்த பயிற்சி, நாற்று உற்பத்தியில் உயர் தொழில்நுட்பங்கள், பனி குடில் அமைப்பில் நாற்று உற்பத்தி, ஒட்டு முறையில் நாற்று உற்பத்தி, நாற்று உற்பத்திக்குத் தேவையான மண் கலவை தயாரிப்பு ஆகிய தலைப்புகளில் விரிவாக நடத்தப்பட்டது. அவருடன் 25 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பயிற்சிக்கு பின் அவர் நாற்று உற்பத்தியின் பரப்பளவை 12 ஏக்கருக்கு அபிவிருத்தி செய்து அதில் 2.5 ஏக்கர் தாய் செடி உற்பத்திக்கும் 0.5 ஏக்கர் நெல்லி பயிருக்கும், 0.5 ஏக்கர் பலா நாற்று செடி உற்பத்திக்கும் பயன்படுத்தி வருகிறார்.
நிலைய பயிற்சிகள் /செயல்விளக்கத் திடல்களின் பங்கு
- நாற்றுகள் உற்பத்தியில் உயர் தொழில்நுட்பங்கள் பற்றியும் அதில் ஒட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி மற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு, குடில் அமைப்பு ஆகியன பற்றி விரிவாக செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
சந்தையைப் பற்றி நுண் அறிவு
- தரமான நாற்றுகளுக்கு உள்ள எதிர்கால தேவை நாற்றகளுக்கு உள்ள நிரந்தர சந்தை வாய்ப்புகள், லாபகரமான வணிக உத்திகள் ஆகியவை இவருக்கு நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் கற்றுத் தரப்பட்டன.
வேளாண் விஞ்ஞானிகளின் பங்கு
- நாற்றங்கால் தொழிலை லாபகரமாக நடத்தி பயன் பெற வேளாண் விஞ்ஞானிகள் பயிற்சி அளித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
- அவ்வப்போது இவரது நாற்றுப் பண்ணைக்கும் சென்று ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.
விளைச்சல் /ஏக்கர்/ உற்பத்தி
ஆண்டுக்கு 1 லட்சம் எண்ணிக்கையிலான முந்திரி நாற்றுகளை உற்பத்தி செய்கிறார்.
வேலை வாய்ப்புகள்
நாற்றங்கால் உற்பத்தியில் சுமார் 10 பேர் வேலை செய்து வருகின்றனர்.
தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்
ஆண்டுக்கு ரூபாய் 4 இலட்சம்
பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்
- உயர் விளைச்சல் நாற்றுகளை உற்பத்தி செய்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனை செய்வது.
- நாற்றுகள் உற்பத்தியை காய்கறி பயிர்களான தக்காளி, கத்திரி மற்றும் வெண்டையிலும் விரிவு செய்தல்
பிறருக்கு எடுத்துக் கூறும் உண்மை
- விவசாய நிலங்களில் சிறிய இடத்தை ஒதுக்கி நாற்றுகளை உற்பத்தி செய்து விற்கலாம்.
- ஆண்டு முழுவதும் வருமானம் தரும் தொழில்
தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்
|
|
அம்மன் நாற்றங்கால் – நுழைவு வாயில் |
நுகர்வோரிடம் உரையாடும் திரு.சிவக்குமார் |
|