ஜெயம் உணவு நிறுவனம்
பெயர் |
: |
திருமதி.சுகந்தி |
|
முகவரி |
: |
ஜெயம் உணவுப் பொருட்கள்,
101, தங்கம் நகர், காந்தி நகர் (அஞ்சல்),
வடக்குத்து, நெய்வெலி, கடலூர் மாவட்டம்
அலைபேசி எண் :94860 89781 |
|
குறு /சிறு/ பெரு விவசாயிகள் |
: |
சிறு தொழில் முனைவோர் |
|
வெற்றி கதையின் காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு கடலூர் மாவட்டத்தில் பண்ணை மகளிர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாற்று வருமான திட்டங்களோ அதற்கான வழிமுறைகளோ பெரிய அளவில் இல்லை
- ஆனால் வேளாண் விளை பொருட்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பானது இவர்களுக்கு லாபம் தரககூடிய நல்ல தொழிலாக அமையும் என்று எமது நிலைய தொழில்நுட்பவல்லுநர்கள் உணர்ந்திருந்தனர்.
- திருமதி.சுகந்தி மற்றும் அவரோடிருந்த குழுவினருக்கு காய்கறி மற்றும் சிறுதானியப் பொருட்களிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் 21 நாட்கள் தொடர்பயிற்சி இந்நிலைய வளாகத்தில் 2009ம் வருட இறுதியில் வழங்கப்பட்டது.
- பயிற்சியில் ஊறுகாய் ஜாம் வகைகள் மசாலா வகைகள் போன்றவற்றை வணிக ரீதியில் தயாரித்து விற்பனை செய்வதற்கு திறம்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
- தரமான உணவுவகைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கண்டுனர் சுற்றுலக்களுக்க திருமதி.சுகந்தி மற்றும் அவர் சார்ந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டனர்.
- முதலில் ஒரு நாளைக்கு 10-20 கிலோ என்ற அளவிற்கு ஊறுகாய் மற்றும் மசாலாப் பொருட்களை தயாரித்து அக்கம்பக்கத்தில் விற்று மாதம் ரூ.1500 என்று அளவில் லாபம் ஈட்டி வந்தார்.
- நிலைய தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர்பயிற்சி மற்றும் விளக்கம் ஆகியவற்றின் காரணமாக, இதனை சிறுதொழிலாக நெய்வேலியில் தொடங்கினர்.
- தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் “ஜெயம் ஊறுகாய்” “ஜெயம் மசாலா வகைகள்” என்ற பெயரில் தமது உணவுகளை அனுப்பி பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகின்றார்.
வருமானம் /மாதத்திற்கு: மாதத்திற்கு தோரயமாக ரூ.20,000/- வேலை வாய்ப்புகள்: இவருடைய நிறுவனத்தில் மொத்தம் 8 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்று தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட வருமானம்: தோரயமாக மாதத்திற்கு ரூ.20,000/- பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்:
- தற்போது மா, எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, நார்த்தங்காய் வகைகளில் ஊறுகாய் தயாரித்து வரும் இவர் எதிர்காலத்தில் பல்வேறு வகைகளிலும் ஊறுகாய் தயாரிப்பினை விஸ்தரிக்க திட்டமிட்டு வருகின்றார்.
- காய்கறி தவிர சிறுதானிய வகைகளிலும் மதிப்பூட்டம் செய்யப்பட்ட உணவு வகைகளை தயாரிக்கவும் திட்டமிட்டு வருகின்றார்.
- தொழிலாளர் வேலைவாய்ப்பினை 10-20 என்று எண்ணிக்கையில் உயர்த்தியும் அதற்கேற்ப தமது மாத வருமானத்தை தற்போதைய ரூ.20,000 த்திலிருந்து ரூ.50,000 வரையிலும் அதிகரித்திடும் வகையிலும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்.
பிற உழவர்களுக்கு எடுத்துக் கூறும் எண்ணம்
- ஒரு சாதாரண ஒரு இல்லத்தரசி மாதம் ரூ.20,000 வரை லாபம் ஈட்டும் போது அனைவரும் இத்தொழில் மூலம் சிறந்த வருவாய் பெற இயலும்.
- மதிப்பூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்களின் தேவையானது தற்போதைய கால கட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எனவே அனைவரும் இத்தொழில் மூலம் சிறந்த வருவாய் பெற இயலும்.
- மதிப்பூட்டப்பட்ட உணவுவகைகள் மூலம் விவசாயம் செய்யாதவர்களும், சிறந்த பயிற்சியின் மூலம் சிறந்த தொழிலதிபராக முடியும்.
|
|
மாண்புமிகு துணைவேந்தர், த.வே.ப.க அவர்கள் ஜெயம் உணவு நிறுவனத்தின் உணவு வகைளைப் பார்வையிடுகிறார் |
திருமதி.என்.சுகந்தி வேளாண்மை செம்மல் விருதை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து 11.01. 15 அன்று பெறுகிறார். |
|