நிலம் தயாரித்தல் :
முதலில் நடவு வயலை ஆழமான தலைகீழ் கலப்பை கொண்டு உழ வேண்டும். பின்னர் வளைந்த கலப்பை அல்லது 5 கொத்து கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடையும் வரை நன்கு தூளாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் பொழுது டை –அம்மோனியம் பாஸ்பேட் -150 கிலோ, ம்யூரேட் ஆப் பொட்டாஷ் -150 கிலோ, மெக்னீசியம் சல்பேட் -100 கிலோ, டெராபேஸ் -10 கிலோ, ரூட் ஸ்டிம் -1 கிலோ மற்றும் ஜிப்சம் 2 டன் இட்டு வயலை நன்கு உழவு செய்ய வேண்டும். சீரான வயல் மேற்பரப்பைப் பெற ஒரு சுழல் உழவு கடைசியாக செய்ய வேண்டும்.
நீர்ப்பாசனம்:
விதைக்கும் சமயத்தில் வயல் நனையுமாறு நுண்துளி தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மூடு பனியைக் குறைக்க காலை அரை மணி நேரம், தாவர மற்றும் மண் வெப்பநிலையைக் குறைக்க மாலை அரை மணி நேரம் நுண்துளி தெளிப்பு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
|