தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

சின்ன வெங்காயம் அபிவிருத்திக்கான சாகுபடி முறைகள்


உரப்பாசனம்:
            திரு.விஸ்வநாதன் அவர்கள் தினமும் ஏதாவது ஒரு திரவ உரத்துடன், வயலை நீர்ப்பாசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
உரப்பாசன விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வெங்காயம் நடவு செய்த 20ம் நாளில், 20 லிட்டர் பஞ்சகவ்யா, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, நுண்துளி தெளிப்பு நீர் கருவியின் வழியே உரப்பாசனம் செய்தார்.
  • ஆர்கானிக்ஸ் புரோ @ 1 லிட்டர், கால்சியம் மற்றும் போரான் 1 லிட்டர், 23ம் நாள், 2 ஏக்கர் வெங்காய வயலில் தெளிக்கப்பட்டது.
  • நட்ட 24ம் நாள், ஆர்கானிக்ஸ் ஸ்பெஷல் புரோ @ 200 மில்லி/ வால்வு மற்றும் யூரியா @ 1 கிலோ/ வால்வு தனித்தனியே நுண்துளி தெளிப்பு நீர் கருவியின் வழியே செலுத்தப்பட்டது.
  • தழைப்பருவத்தின் போது (25ம் நாள்), 10 கிலோ மோனோ பொட்டாசியம் பாஸ்பேட் 0:52:34 (மல்டி எம்.கே.பி.), 500 கிராம் கால்ஜட் மற்றும் 500கி மைக்ரோஜெட் எப் 23, உரப்பாசனமாகக் கொடுக்கப்பட்டது.
  • மோனோ பொட்டாசியம்  பாஸ்பேட் 0:52:34 (மல்டி எம்.கே.பி.) மற்றும் 300 கிராம் ஃபோல்ஜெல் உரப்பாசனம் 26ம் நாள் அளிக்கப்பட்டது.
  • ஆர்கானிக்ஸ் புரோ @ 1 லிட்டர்/ 2 ஏக்கர், 27ம் நாள் நுண்துளி தெளிப்பு நீர் கருவி வழியே உரப்பாசனம் செய்யப்பட்டது.
  • தழை:மணி: சாம்பல் சத்து (19:19:19) 10 கிலோ 29ம் நாளில் நுண்தெளிப்பு நீர் கருவி வழியே தெளிக்கப்பட்டது.
  • மோனோ பொட்டாசியம் பாஸ்பேட் (0:52:34) 10 கிலோ (மல்டி எம்.கே.பி) நீர் வழியே உரமாக இடப்பட்டது.
  • நட்ட 32ம் நாளில், தழை:மணி: சாம்பல் சத்து (19:19:19) 5 கிலோ, 1 லிட்டர் கால்சியம் மற்றும் போரான் 2 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்தப்பட்டது.
  • தழை:மணி: சாம்பல் சத்து (19:19:19) 15 கிலோ அதனுடன் மைக்ரோஜெட் @ 500 கிராம் மற்றும் கால்ஜட் @ 500 கிராம் 37ம் நாளில் இடப்பட்டது.
  • ஃபோர்ட்ரெஸ் @ 1 லிட்டர், 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, நட்ட 39ம் நாளில் இரண்டு ஏக்கர் வெங்காய வயலில் தெளிக்கப்பட்டது.
  • பஞ்சகவ்யா @ 20 லிட்டர் மற்றும் போல்ஜெல் @ 300 கிராம் நீர்ப்பாசனம் வழியே, 45ம்நாளில் தெளிக்கப்பட்டது.
  • நட்ட 50ம் நாளில், 13:0:45 உரம்- 6 கிலோ/ஏக்கர்+ மைக்ரோஜெட்/ ஏக்கர் - 1கிலோ + கால்ஜட்/ ஏக்கர் - 1கிலோ உரங்கள், நுண்துளி தெளிப்பு நீர் கருவி வழியே தெளிக்கப்பட்டது.
  • நட்ட 53ம் நாட்களுக்குப்பிறகு, பொட்டாசியம் நைட்ரேட் (13:0:45)  @ 6 கிலோ இரண்டு நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • பொட்டாசியம் சல்பேட்  (0:0:50)  @ 6 கிலோ நட்ட 61ம் நாள், 2 ஏக்கர் வெங்காய நிலத்தில் தெளிக்க வேண்டும்.
  • லிக்கோசின்@ 500 மில்லியை, 35 டேங்க் தண்ணீரில் கலந்து இரண்டு ஏக்கருக்கு, 65ம் நாள் தெளிக்க வேண்டும்.

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


தாவர வளர்ச்சி ஊக்கிகள் இலை வழித் தெளிப்பு

Updated on : Aug 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15

Agritech Portal - Tamil Agritech Portal- English