த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு
உழவர்களின் சாகுபடி முறைகள்
சின்ன வெங்காயம் அபிவிருத்திக்கான சாகுபடி முறைகள்
களை எடுப்பதற்கு முன் வெங்காய வயலின் தோற்றம்
களை மேலாண்மை & உரப் பயன்பாடு
களைமேலாண்மை :
களைகளைக் கட்டுப்படுத்த இரண்டு கைக்களை வெங்காயம் நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் செய்யப்பட்டது.
பயிர்ப்பாதுகாப்பு :
பூஞ்சாண நோய்களைக் கட்டுப்படுத்த, அவதார் 40 கிராம்/ டேங்க், விசைத்தெளிப்பான் கொண்டு நடவு செய்த 25ம் நாளில் தெளித்தார்.
மேலும் இலைப்பேனைக் கட்டுப்படுத்த, பிப்ரோனில் @ 20 மில்லி/ டேங்க் மற்றும் நிம்பிசிடின் @ 10 மில்லி/டேங்க் நடவு செய்த 45ம் நாட்களில் விசைத்தெளிப்பான் கொண்டு தெளித்தார்.
அறுவடைமற்றும்மகசூல் :
வெங்காயத்தாள் மடங்கி, பச்சையத்துடன் காணப்படும் பொழுது, வெங்காயத்தாளைக் கையால் பிடுங்குவதன் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. இரண்டு ஏக்கரின் மகசூல்: 9240 கிலோ ஆகும்.
குறிப்பு:
1. ஃபோல்ஜெல்: துத்தநாகம், ஜிங்க், போரான், தாமிரம், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.
2. மைக்ரோஜெட் 23: ஃபோல்ஜெல் போன்றே இதிலும் பல நுண்ணூட்ட சத்துகள் உள்ளன.
3. கால்ஜெட்: இது கால்சியம், மெக்னீசியம், சல்ஃபர் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4. ஆர்கானிக்ஸ் புரோ: அமினோ அமிலங்களின் தெளிப்பு. இதில் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட 1 சதவிகிதம் ஹியூமிக் அமிலம் உள்ளது.
5. ஃபோர்டிரஸ்: திரவ சிலிகா சார்ந்த நுண்ணூட்டச்சத்து.
வரவு செலவு விகிதம்:
மொத்த சாகுபடி செலவு (2 ஏக்கர்) : ரூ.78,000/-
மொத்த வருமானம்(2 ஏக்கர்): ரூ.2,77,200/-
நிகர வருமானம்(2 ஏக்கர்): ரூ.1,99,200/-
வரவு-செலவு விகிதம்=மொத்த வருமானம்(எக்டர்-1) / மொத்த சாகுபடி செலவு (எக்டர்-1)
=ரூ.2,77,200/ 78,000
=3.55
Content on this page requires a newer version of Adobe Flash Player.