மீன் வளம் :: பலவகை மீன் உயிரினங்கள்

பலவகை மீன் உயிரினங்கள்

பல்லுயிர்ப் பெருக்கம் என்பது மீன்வளர்ப்புச் சூழ்நிலையில் ஒரு சிறந்த அறிவியல் பூர்வமான அடித்தளமாக விளங்குகிறது. மனித தேவைகளுக்காகப் பிற வளங்களைப் பயன்படுத்தும்போது, அப்பகுதியிலுள்ள மீன்வளங்களுக்குப் பாதிப்புகள் ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். மீன் பிடிப்பாளர்கள், மீன் வளர்ப்போர் போன்ற மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு வளங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இதற்கு ‘மீனியல்’ பெரிதும் துணை புரிகிறது. இதில் நீர் சூழ்நிலை அமைப்பில் காணப்படும் வேறுபட்ட பல மீன் இனங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பகுதியின் சூழ்நிலையமைவையும், அளவையும்பொறுத்து ஒரு குறிப்பிட்ட மீன் எண்ணிக்கையில் பல்வேறு வகை அல்லீல்கள், ஜீனோமிகள் மீன்களும்,ஒரு மீன் சமூகத்தில் பல இனங்கள் கலந்தும் காணப்படும் (பர்ட்டான குழவினர் 1992). மேலும் பல்லுயிர்ப் பெருக்கம் என்பது சூழ்நிலை அமைப்பின் நிலைத்தன்மைக்கும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தரத்தினைப் பாதுகாக்கவும் மற்றும் பூமியில் இயற்கையாகத் தோன்றியுள்ள பல உயிரினங்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் மிகவும் அவசியம் ஆகும்.

இதற்கு முந்தைய ஆய்வில் உயிரினத்திறன் உற்பத்திக்கும், ஏராளமான இனங்களுக்கும் நிலையான சம்பந்தம் உள்ளது என்று பதிவேடுகளில் உள்ளன. சூழ்நிலை மண்டலத்தில் இனப்பெருக்கத்திற்கும், உயிருள்ள மற்றும் உயிரில்லாத கரிமப்பொருளுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒரு இனப்பெருக்கம் ஒரு சூழ்நிலை மட்டும் சார்ந்து வாழாது அது பல சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி வாழும். மிருகங்கள் ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதிக்கு நீர் நிலையங்கள் மூலம் கடந்து செல்லும். இப்படி இடம்மாற்றதினால் பேரினப்பெருக்கம் அதிகரிக்கும். இதுபோன்று மீன்களும் நன்னீர் நிலைகளில் தன்னுடைய இனபெருக்கத்தை பெருக்கி கொள்ளும்.

முந்தய வரலாற்றிலும் சரி, தற்போதுள்ள நவீன காலத்திலும் மீன் பிடிப்பு எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. 18ம் நூற்றாண்டிலிருந்துதான் வகைகளின் அடிப்படையில் மீன் பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. (விம்பர்,1883).இதன் பிறகுதான் மீன்பிடிப்புப் பகுதியிலுள்ள மீன் வகைகள், எண்ணிக்கை போன்றவை அறியப்பட்டு, மீன்களை தரம் பிரித்தளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டன. (லெடிக் 1986).

ஏறி, நீர்தேக்கம், ஓடை, ஆறு, மற்றும் கடல் ஆகிய இடங்களில் மீன் பிடிக்கலாம். உலகில் குத்துமதிப்பாக 500 மில்லன் ஹெக்டர் உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளன. இதிலிருந்து வருடத்திற்கு மொத்த மீன் உற்பத்தியில் 40-70% உள்நாட்டு மீன்பிடிப்பாகும். மீன்வளத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கு முன்னர் நீர் உயிர்களுக்கும் மீன் உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்பைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும். வெப்பநிலை, கலங்கியநிலை, நீர் அமில காரத் தன்மை, நீரில் கரையும் ஆக்ஸிஜன், தனித்துல்ல கரிம நில வாயு, மொத்த அமிலத்தன்மை, மண் வெப்பநிலை, மண் அமில காரத்தன்மை, மன் அங்கக கரி. மண் பாஸ்வரம், உப்பின் கார சத்து மற்றும் கடலில் பெரியதாவர திறன் இவை அனைத்தும் அடங்கியது தான் நன்னீரியல் மற்றும் நதி நீர் பிடிப்பு பகுதியின் வழியலகுகளாகும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024