முன்னுரை :
மீன்கள் பெரும்பாலும் இனங்களாகவும் மற்றும் தனித்தும் இருந்தாலும், அவை அனைத்தும் முதுகெலும்புள்ள உயிரின வகையை சார்ந்தவை . இவை அளவு, உருவம், அமைப்பு, உயிரியல் பண்புகள் மற்றும் வாழ்விடங்களில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. நெல்சன்(1981)ல், இந்த உலகத்தில் 21,723 மீன் இனங்கள், இதில் 4,044 பேரினங்கள், 445 குடும்பங்கள் மற்றும் 50 வகை மீன்கள் என குறிப்பிட்டார். மற்ற ஆராய்ச்சியாளர்கள், கொடுத்தது வேறுப்பட்ட மதிப்பீடுகள், அவைகள் அனைத்தும் அதிகபட்சமாக 17,000 முதல் 30,000 வரை மீன் இனங்கள் என தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக மீன் இனங்கள் இந்த உலகில் அதிகபட்டசமாக 28,000 இனங்கள் காணப்படுகின்றன. , பிரிடிஸ் இந்தியாவிலிருந்து 1418 இனங்களும், இதன் கீழ் 342 பேரினங்களும் உள்ளதாக டே என்ற அறிஞர் (1989) விவரித்து உள்ளார். இந்திய வட்டாரத்தில் 742 நன்னீர் மீன் இனங்களும், இதன் கீழ் 233 பேரினங்களும், 64 குடும்பங்களும் மற்றும் 16 வகைகளும் உள்ளன என்று ஜெயராம் (1981) பட்டியலிட்டார். தல்வாரின் (1991) மதிப்பீட்டின்படி 969 பேரினங்களும், 254 குடும்பங்களும் மற்றும் 40 வகைகளும் இவை அனைத்தும் 2546 இனங்களுக்கு சொந்தாமானவை என்று கண்டறியப் பட்டுள்ளது. உலகிள் காணப்படும் மீன் வகைகளில் 80 சதவீதம் இந்தியாவில் காணப்படுகிறது. அவற்றில் இனங்கள் 11.72%, பேரினங்கள் 23.96% மற்றும் 51% குடும்பங்கள் நம் நாட்டில் காணப்படுகின்றன.
தெற்கு ஆசிய, ஆப்ரிக்கா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா போன்ற வெப்ப மண்டலங்களில் காணப்படும் மீன்களின் பேரினங்கள் வேறுபடுகின்றன. ஆனால், சில குடும்பங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கண்டங்களிலும் காணப்படுகின்றன. தென் ஆசியாவில் கெண்டை மீன்கள் (சைப்ரின்டயே) மற்றம் கெளுத்தி மீன்கள் (சில்ராய்டயே), இவை இரண்டும் மேம்பட்ட மீன் வகைகளாகும் (பெர்ரா, 1981).
இந்தியாவில் உணவு தானியம், பால், முட்டை மற்றும் உணவு சாமான்களை ஒப்பிடும் போது மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்தியா மீன் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆண்டிற்கு 6.9 மில்லியன் மெட்ரிக் டன் மின் உற்பத்தியாகிறது. மீன் வளத்துறையில் 2005 - 2006ல் ரூ.34,755 கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இதில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2% மற்றும் வேளாண்மையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3% எனினும் தமிழ்நாட்டில் 2005-2006ல் மீன்வளத்துறையின் பங்கு நாட்டு உற்பத்தியில் 4.44% மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாக கடல் மீன் வளர்ப்பு உற்பத்தியிலிருந்து உள்நாட்டு மீன்வள உற்பத்தி படிப்படியாக முன்னேறி வருகிறது.
|