தீவுகளின் மீன்வளம்
இந்தியாவில் இலட்சத்தீவுகள் மற்றும் அந்தமான நிக்கோபர் ஆகிய இரு முக்கியத் தீவுகள் உள்ளன. இரண்டும் தட்பவெப்பநிலை, நில அமைப்பு, தாவர, விலங்கு உயிரினங்கள், பண்புகளில் இவ்விரு தீவுகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றது.
இலட்சத்தீவுகளின் மீன்வளம்
அரபிக் கடலின் பூமத்தியரேகை 30’ பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு தெற்கே உள்ள தூரம் 080 00 என்றவாறு கேரள கடற்கரையிலிருந்து 200 – 400 கி.மீ தொலைவில் இந்த யூனியன் பிரதேசமான இலட்சத்தீவு அமைந்துள்ளது. இந்த இலட்சத்தீவுகளில் 11 உயிரினங்கள் வாழக்கூடிய தீவுகளும் பல உயிர்கள் வாழ இயலாத தீவுகளும் அடங்கி உள்ளன. பல தீவுகளை உள்ளடக்கிய இப்பெருங்கடலில் 12 பவழத் தீவுகளும் 3 பவழப் பாறைகளும் 5 பகுதியளவு நீரில் மூழ்கியுள்ள பாறைகளும் உள்ளன. மொத்தம் 36 தீவுகள் உள்ளன. 32 கி. மீ2 பரப்பளவு கொண்டுள்ளது. உயிர்கள் வாழ இயலாத தீவுகளான ஆன்ட்ரூத், அமினி, கல்பெனி, அகத்தி, பித்ரா, செட்லேட், கடமாட், கைலேனி, காவரட்டி, கிடான், மினிகாய், பெங்காரம் போன்றவைகள் உள்ளன. இதில் ‘சுகேலி’ என்ற மனிதர்கள் வாழ இயலாத தீவில் தென்னை பயிரிடப்படுகிறது. ‘பிட்டி’ என்ற சிறு பவழப்பாறை அடங்கிய 1.2 ஹெக்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட தீவில் ஆயிரக்கனக்கான பறவைகள் வசிக்கின்றன. ஆன்ரூத் தவிர அனைத்து தீவுகளிலும் கடலுடன் தொடர்புடைய ஆழமில்லாத ஏரி உள்ளது. பித்ராவில் ஒரு அபாரமான ஏரி உள்ளது. கண்டங்களில் கடல் தீவுகள் 4336 கி. மீ2 பரப்பளவுடையது. இதில் இவ்வேரிகள் மட்டும் 4,200 கி. மீ2 பரப்பளவிற்குப் பரந்து கிடக்கின்றன. இதுவே மிகப்பெரும் நீராதாரத்திற்கும் மீன் வளத்திற்கும் காரணமாகும்.
இலட்சத்தீவுகள் பண்டைக் காலந்தொட்டே மீன்பிடி தொழிலாளர்களுக்கும் மீன் வியாபாரிகளுக்கும் கப்பலோட்டிகளுக்கும், வாழ்வாதாரமாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்துள்ளது. இம்மக்களின் முக்கியத் தொழில் தென்னை பயிரிடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகும்.
மீன் வளங்கள்
முக்கிய மீன் வகைகளான சூரைமீன், பில் மீன், மிதவை சுறாக்கள், மயில் மீன்கள் போன்றவையும் பிற உணவு வகை மீன்களான கோலா, பறவைக் கோலா, ஊழி, கார்மீன்கள், பேய்க்கணவாய், மீன்துடுப்புக் கதிர்கள், பிரீம்ஸ், ட்ரிக்கர் மீன் காரங்கிட்ஸ், குளூப்பெய்ட்ஸ், விளமீன் போன்றவை காணப்படுகின்றன. தூண்டில் முள்ளில் கோர்க்கப்படும் மீன்கள், வண்ண மீன்கள் போன்றவை இத்தீவுகளின் முக்கிய மீன் வகைகள் ஆகும்.
சூரைமீன் மற்றும் வண்ண மீன்களைப் பிடிக்க இத்தூண்டில் மீன்கள் உதவுகின்றன. வண்ண மீன்கள் அலங்கார மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படுவதால் அதிக ஏற்றுமதி மதிப்பு மிக்கவை. மத்திய கடல் வள ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி 601 மீன் இனங்கள் இலட்சத்தீவில் இருக்கின்றது. இங்கு மீன் உற்பத்தி வருடத்திற்கு 50000 டன்கள் சூரை மீன்களும் 50000 டன்கள் பிற மீன்களும் உற்பத்தியாகின்றன. இதில் 10 விழுக்காடு மட்டுமே அறுவடை செய்யக்கூடியவை.
மீன் பிடிப்பு முறைகள்
கரையோர மீன் பிடிப்பு மற்றும் துருவ மீன் பிடிப்பில் முக்கியக் காரணியாககச் செயல்படுவது தூண்டில் முள் மீன் எண்ணிக்கை ஆகும். ஏனெனில் இந்த மீன்களைத் தான் சூரை மீன் திரளைக் கவர்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இத்தூண்டில் மீன்கள் பவழப் பாறை ஓரங்களிலும் ஏரிகளிலிருந்தும் பிடிக்கப்பட்டு படகினுள் உயிருடன் பராமரிக்கப்படுகிறது. பின்பு மீன் பிடிக்கும் தருணத்தில் தேவைக்கேற்ப எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இலட்சத்தீவுப் பகுதியில் மட்டும் 21 வகை தூண்டில் மீன்கள் காணப்படுகின்றன. இதில் 12 இனங்கள் மீன் பிடிப்பிற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. ஸ்பெரெட்டெல்லாய்டஸ், அப்போகான், குரோமிஸ் போன்றவை இதில் முக்கிய இனங்கள்.
அதிக மீன் கூட்டங்கள் வாழும் தீவுகள் அகத்தி, சுகேலி, மினிகாய், பித்ரா மற்றும் ஆன்ரோத். தற்போது இயந்திரமுறை பயன்படுத்தத் தொடங்கியபின் ஆண்டிற்கு 10000 டன்கள் வரை மீன் உற்பத்தி பெற முடிகிறது. அகத்தி தீவில்தான் மிக அதிகமான அதாவது 31% உற்பத்தி கிடைக்கிறது.
பழங்கால கரையோரத் தூண்டில் மீன்பிடிப்பு 97 சதவீதம் தூண்டில் மீன்களைப் பயன்படுத்தியே பிடிக்கப்படுகிறது. கடந்த 15 வருடங்களாக 300 படகுகள் இவ்வாறு மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீன் சேர்ப்புக் கருவி, ஜி. பி. எஸ் எனப்படும் கருவிகள் மீன் பிடிப்பில் பயன்படுத்தப் படுவதால் தற்போது மீன்பிடிப்பு அறுவடை எளிதாகியுள்ளது.
அந்த மான் நிக்கோபர் தீவுகளின் மீன்வளம்
இவையும் கடலால் சூழப்பட்ட வங்காள மற்றும் 130 41’ வடக்கிலும் 920 12’ மற்றும் 930 57’ கிழக்கு நோக்கிலும் அமைந்துள்ளது. இக்கூட்டத்தில் 550 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இது 0.6 மில்லியன் கி. மீ2 தொலைவை ஆக்கிரமித்துள்ளது. 35000 கி. மீ2 பரப்பளவுள்ள தீவுப்பகுதியும் மற்ற பகுதிகள் நீராலும் சூழப்பட்டுள்ளது. இத்தீவுகளில் எப்போதும் பசுமை நிறைந்த காடுகள், மணல் கடற்கரை, மாங்குரூவ் காடுகள் பவழப் பாறைகள் போன்ற வளங்கள் நிறைந்துள்ளன. ஊசியிலைக் காடுகள் 115 கி. மீ2 பரப்பிலும் பவழப் பாறைகள் 2000 கி. மீ2 பரப்பளவிற்கு அதிகமாகவும் பரந்து விரிந்து கிடக்கின்றன. கிழக்குக் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இத்தீவுகளில் பல விரிகுடாக்கள் திறப்புகள் நீர்புக ஏதுவாக அமைந்துள்ளன.
சில தீவுகளில் அம்புகள் அம்பாறத் தூணி போன்றவற்றைப் பயன்படுத்தி பழங்கால முறைகளில் மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்து வந்தனர். இப்பகுதிகளில் பழங்கால முறையே தொடர்ந்து கொண்டிருந்த படியால் விரைவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மீன் பிடிப்பாளர்கள் பயன்படுத்தி வந்த உபகரணங்களில் குறைந்தளவே மீன்களைப் பிடிக்க இயலும். மேலும் சிறிதுதூரம் வரை மட்டுமே கடலில் அவர்களால் மீன் பிடிக்க இயன்றது. அவர்களின் மீன் பிடி வலை மற்றும் கலம் கொண்டு குறைந்தளவே வருமானம் பெற்று வந்தனர். அதோடு சரியான போக்குவரத்து வசதியின்மை, தகவல் தொடர்பின்மை, மீன்களைப் பதப்படுத்துதல், சேமித்து வைக்க இயலாமை, விற்குமிடத்திற்கு தொலைவு அதிகம் போன்ற பல காரணங்களால் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மீன் பிடிப்பு மேம்பாடு அடையாமல் உள்ளது.
கடல் வளம் மற்றும் மீன்பிடிப்பு மேம்பாடு
கடல்தீவுகளின் மீன்வளம் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தி அளவு பற்றிய சரியான தகவல்கள் நம்மிடம் இல்லை. அதோடு கிடைத்துள்ள தகவல்களும் ஒவ்வொரு முறையில் வெவ்வேறு அளவுகளைக் குறிக்கின்றன. பிடிப்பு முறை, அங்கக உற்பத்தி முறை, ஓரலகுப் பரப்பில் உற்பத்தி போன்ற பல முறைகளில் அளவிடப்பட்டுள்ளன. இம்முறைகளில் ஒப்பிடுவது மிகவும் சிரமமானதாக இருக்கும். 1973 ஆம் ஆண்டு 4000 டன்கள் அடிமட்ட வாழ்விகளும் 8000 டன்கள் மிதவை உயிரிகளும் 1990 ல் 690,000 டன்கள் இருந்ததாக இந்தகவல்கள் கூறுகின்றன. மறுமதிப்பீட்டில் 22,5000 டன்கள் அடிமட்ட வாழ்விகள் 139,000 டன்கள் மிதவை உயிரிகள் மற்றும் 82000 டன்கள் கடல் வாழ் உயிரிகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதோடு பிற உயிரினங்களான ஆழ்கடல் மீன்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், கடல் அட்டைகள், மென் பாறைகள், கடல் தாவரங்கள் போன்றவை அளவிடப்படாமலே உள்ளன.
அந்தமான நிக்கோபர் தீவுகளின் முன்னேற்றம் அதன் சூரை மீன்களின் உற்பத்திப் பெருக்கத்தைப் பொறுத்தே அமையும். தனியார் துறையினரும் மீன் பிடிப்பில் தங்கள் பங்கினைச் செலுத்தினால் நல்ல உற்பத்தியைப் பெற முடியும். சூரை மீன்களுக்கு பல நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பதும் எளிதாகிறது. மீன் வளர்ப்பும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியக் காரணி ஆகும். பல்வகை மீன்களுக்கு அந்தமான் – நிக்கோபர் தீவுகள் உறைவிடமாகத் திகழ்கின்றன. இங்கு விளையாட்டு மீன் வளர்ப்பிற்கான மீன்கள், வண்ண மீன்கள், போன்றவையும் அதிகளவு காணப்படுவதால் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகப் பயன்படுகிறது.
உவர்நீர் மீன் வளர்ப்பு
இங்கு உவர்நீர் மீன்வளர்ப்பிற்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. சுனாமிக்கு முன்பு 680 எக்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட உவர்நீர் வளம் தற்போது 110000 எக்டர் அளவிற்கு விரிச்துள்ளது. சுனாமியினால் கடல் நீர் பெருமளவு உட்புகுந்ததே இதற்குக் காரணம். 1000 எக்டர் பரப்பளவு உவர்நீர் மீன் வளர்ப்பிற்கு ஏற்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.
திறந்த குகைகளில் மீன் வளர்ப்பு
தீவுகளின் விரிகுடா ஏரிகளில் உள்ள திறந்த குகைகளில் மீன் பிடி வசதிகளை ஏற்படுத்தினால் நல்ல மீனு் வளங்களைப் பெறலாம். இந்தியாவில் இது புதிய தொழில்நுட்பம் ஆகையால் இதை விரிவுபடுத்த மிகுந்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இலட்சத்தீவு மற்றும் இந்தமான் நிக்கோபர் தீவுகளில் தற்போதைய முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. சரியான முறையில் திட்டமிட்டு மேம்படுத்துவது அவசியமாகிறது. இவ்விரண்டுமே யூனியன் பிரதேசங்களாக இருப்பதால் அந்தந்த அரசுகள் சிரமேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். மக்கள் பழமைவாதிகளாக இருப்பதால் அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை ஏற்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் கடல் வளங்களை ஆதாரமாகக் கொண்டு வாழும் இம்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். |