வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
மூங்கில்

13. மூங்கில் பணித்திட்டமின் அமைப்பு என்ன ?

  • தேசியளவிலான நிறுவனம்
  • தேசிய செயற்குழு
  • தேசிய  மூங்கில் நிலையம்

14. தேசிய மூங்கில் பணித்திட்டத்தின் முக்கியமான குறிக்கோள் என்ன?
ஐந்து ஆண்டுகளுக்குள் மூங்கிலின் நிலப்பரப்பளவை அதிகரித்தல் (1.76 லட்சம்/ ஹெக்டர்).

15. மர வேலைகளுக்காக எவ்வளவு வனபகுதி ஒரு வருடத்திற்கு அழிந்து போயிருக்கிறது?
1.5 மில்லியன் ஹெக்டர்.

16. மூங்கில் மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?
30 வருடங்கள்.

17. தமிழகத்தில் மூங்கில் சாகுபடி நிலங்கள் எங்கு உள்ளது?
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி.

18. மூங்கிலின் சாகுபடி செய்யப்படும் சிற்றினங்கள் எவை ?
வறட்சியான நிலத்திற்கு – கடினமான மூங்கில்
பாசன நிலத்திற்கு – வெற்று மூங்கில்

19. மூங்கில் சாகுபடிக்குரிய பயிர் இடைவெளி என்ன ?
5 * 5 – 6 * 6 மீட்டர்

20. வெயில் காலங்களில் மூங்கிலின் நீர் தேவை என்ன ?
25 – 30 லிட்டர்

21. மூங்கிலின் விளைசச்சல் எவ்வளவு ?
டி. ஸ்ட்ரிக்டஸ் -2400 கொத்துகள்/ஹெக்டர்
பி. மூங்கில் – 1662 கொத்துகள்/ஹெக்டர்

22. உணவிற்காக எந்த மூங்கில் வகை உபயோகிக்கப்படுகிறது ?
பி. மூங்கில்
பி. பல்குரா
தொடர்ச்சி......
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016