வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
மூங்கில்

23. பி.பல்குவாவின் சத்துப் பொருட்களின் நிலை என்ன ?

வ.எண் சத்துப்பொருட்கள்  
1. நீர் 91.65
2. கனிமம் 0.99
3. மணிச்சத்து 30.99
4. சும்மாம்புச்சத்து 24.01
5. இரும்புச்சத்து 1.02
6. புரதச்சத்து 2.74
7. சர்க்கரைச்சத்து 3.90

24. மூங்கில் விதை நேர்த்தியில் உபயோகிக்கப்படும் வேதிபொருட்கள் எவை ?
ஜிப்பெரால்லிக் அமிலம் – 100ppm
ஆசோஸ்பைரில்லம் – 50 gm/kg
டிரைக்கோடெர்மா விரிடி - gm/kg
சூடோமொனாஸ் – 10gm/ha

25. ஒரு கிலோ மூங்கில் விதையில் எவ்வளவு விதை இருக்கும் ?
13000 – 15000 விதைகள்

26. மூங்கில் விதைகளின் முளைப்புத் விகிதம் எவ்வளவு ?
60 – 80 %

27. மூங்கில் சாகுபடிக்கு எந்த மண் உவந்த மண் ?
மணல் (கார அமில நிலை: 5.5 – 6.5).

28. மூங்கில் நாற்றுப்பண்ணையில் காணப்படும் முக்கியமான பயிர் எதிரிகள் எவை ?
கரையான், உளு, வெட்டுக்கிளி

29. நடவு வயலில் காணப்படும் மூங்கிலின் பயிர் எதிரிகள் எவை ?
இலை மடிப்புப்புழு, அசுவிணி, கூன் வண்டு, துளைப்பான்.

30.  மூங்கில் விதைகள் காணப்படும் முக்கியமான பயிர் எதிரிகள் எவை ?
விதை நாவாய் பூச்சி

31. மூங்கில் நாற்றுப் பண்ணையின் பயிர் எதிரிகளைக் கட்டுப்படுத்தும் முறை என்ன ?
திமட் (10 சதுர மீட்டருக்கு  200 கிராம்)

32. இலை மடிப்புப்புழுவைக் கட்டுப்பப்டுத்தும் முறை என்ன ?
குளோரோபைரிபாஸ் (2 மில்லி லிட்டர்)

33. கூன்வண்டையும் துளைப்பானையும் கட்டுப்பப்டுத்தும் முறை என்ன ?
0.1% லின்டேன் அல்லது 3% போரிக் ஆசிட்( அறுவடை செய்யப்பட்ட மூங்கில் துண்டுகளை இதில் முக்கவும்)
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016