முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: நன்னெறி வேளாண் முறைகள்

நன்னெறி வேளாண் முறையில் காய்கறி பயிர் சாகுபடி
உற்பத்தியாளார்கள் போட்டியை எதிர்கொள்ள அதிக தரமுள்ள பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது, எனினும் மண் மற்றும் நீர் ஆதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான தாவரங்களுக்கு சுத்தமான மண் மற்றும் நீர் ஆதாரம் அவசியமாகிறது.

மண் மற்றும் நீர் மேலாண்மை

தீவிர காய்கறி சாகுபடி முறையில், காய்கறிகள் பதப்படுத்தப்படுத்துதல் அல்லது சந்தைப்படுத்தப்படுத்துதலில்  மண்ணின் அங்ககத் தன்மை குறைகிறது. நாற்றங்கால் உற்பத்தி செய்ய மண் பண்படுத்தப்படுவதால்  அங்ககத் தன்மை குறைகிறது. அங்கக நிலையை அதிகரிக்க அல்லது பாதுகாக்க

  • சுழற்சி முறையில் கவசப் பயிர்களை பயிரிட வேண்டும். குறுகிய கால காய்கறிப் பயிர்களைத் தொடர்ந்து, உடனடியாக கவசப் பயிர்களை பயிரிட வேண்டும். இந்த பசுந்தாள் உரம் அங்ககத் தன்மையை பாதுகாப்பதுடன் சில பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியை அழிக்கிறது.
  • நீண்ட காலப் பயிர்களுக்கு, தானியக் கம்பு சிறந்த கவசப் பயிராகும். இது குளிர்ந்த வானிலை அதாவது இலையுதிர் காலத்தில் நன்கு வளரும். இவற்றின் நார் வேர் மண்ணை ஒன்று சேர்த்து மண் அரிப்பை தடுக்கிறது.
  • தானியப் பயிர் வளர்ந்து காய் பிடிக்கும்பொழுது அல்பா அல்பா மற்றும் குளோவர் விதைகளை விதைக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது மண் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் மற்றும் மண் இறுக்கம் குறையும். அவரை இனங்கள் நைட்ரஜனை உற்பத்தி செய்வதால், ஊட்டச்சத்து கிடைக்கிறது.
  • மண்ணை பண்படுத்துவதைக் குறைத்து  காளான் மற்றும் மற்ற தாவர கழிவுகளை உரங்களாக சேர்க்கலாம். (அங்கக கழிவுகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்). மண் கடினமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டு வரும் வருடங்களில் நைட்ரஜன் பயன்பாட்டை சரிசெய்யலாம்.

தானியப் பயிர்களில் கோதுமை பயிர் சுழற்சிக்கு மிகவும் ஏற்றது. இவை மண்ணின் அங்ககத் தன்மை மற்றும் மண் கட்டமைப்பை பாதுகாக்கிறது.

மண் இறுக்கம்
இயந்திரமயமாதல் காரணமாக நடவு மற்றும் அறுவடையின் போது வலுவான இயந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன.
ஈர மண்ணில் நாற்றங்கால் தயாரித்தல் மற்றும் அறுவடை நடவடிக்கைகள்  மண்ணில் கெட்டித்தன்மைக்கு முக்கிய காரணமாகும். அழுகக்ககூடிய மற்றும் முதிர்ச்சி தன்மை கொண்ட காய்கறி பயிர்களுக்கு தரம் முக்கியம்.

பயிர் சுழற்சி

பயிர் சுழற்சி காய்கறி விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மை நடைமுறையாகும். இந்த முறை நோய், பூச்சி தாக்குதல் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துகிறது. மண் ஊட்டச்சத்தை பாதுகாக்கிறது. மண் அரிப்பை தடுக்கிறது. இரண்டு விதிகள்

  • நீண்ட சுழற்சி நல்லது
  • பல்வேறு குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களுக்கிடையே சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.

சுழற்சி மேற்கொள்வதற்கு முன் கீழ்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்

  • சுழற்சி இலாபகரமானதா?
  • விளைச்சல் நிலையானதா?
  • பயிர் வரிசை கவசப் பயிர்கள் உபயோகத்திற்கு உகந்ததாக உள்ளதா?
  • முந்தைய பயிர்கள் உற்பத்தி செய்த நைட்ரஜனை இவை உபயோகிக்குமா?
  • இவை சரியான நேரத்தில் நடவு மற்றும் அறுவடைக்கு அனுமதிக்குமா?
  • விட்டுச் சென்ற தீங்கு விளைவிக்கும் களைக்கொல்லி எச்சங்கள்

சமீபத்திய தக்காளி ஆராய்ச்சி,  நல்ல பயிர் சுழற்சி முறையால் மகசூல் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.. மண் வளத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதின் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம்.

நடவு மற்றும் அறுவடை காலங்களில் இயந்திரங்களை இயக்கும்போது மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும்.
குறுகிய கால பயிர்களான முலாம்பழம் போன்ற பயிர்களை பயிரிடும்போது கவசப் பயிர்கள் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட முடியும். இவை மண்ணில் அங்ககத் தன்மையை பாதுகாக்கின்றன.

காற்று மற்றும் நீர் அரிப்பு

மணற்பாங்கான நில            ங்கள் காற்று அரிப்பிற்கு ஏதுவாக உள்ளது மற்றும் மலைப்பாங்கான நிலங்களில் நீர் அரிப்பு ஏற்படுகிறது. காற்று தடுப்பான்கள், நீர் அரிப்பை தடுக்கும் புல் வகைகள் நீண்ட கால நிவாரணமாகும். கவசப் பயிர்களை உபயோகிப்பது குறுகிய கால பலனைக் கொடுக்கும்.
துல்லிய விதை பயிர்களுக்கு விளைநிலங்களில் காற்று இடர் தடுப்பு அல்லது மர தோப்புகள் அமைக்கலாம். ஒரு பயிருடன் மற்றொரு பயிரை கரை பயிராக பயிரிடும்பொழுது காற்றை தடுக்கலாம். தானிய பயிர்கள் நாற்றுகளை பாதுகாக்கின்றன. சில நடவு முறை காய்கறி உற்பத்தியில்,  படுக்கை மண்ணின் மேற்பரப்பை கரடுமுரடாக மாற்றி காற்று, நீர் வேகத்தைக் குறைக்கிறது. சில விவசாயிகள் காற்றைக் கட்டுப்படுத்த கவசப் பயிர்களை பயிரிடுவதை பின்பற்றி வருகின்றனர். விளைநிலங்களின் குறுக்கே குறுகலாக புற்களை அமைப்பதன் மூலம் காற்று மண்ணை சுமந்து போவதை தடுக்க முடியும்.

நீர் பாசனம்

சராசரி மழைப்பொழிவு சீரற்று உள்ளது. மேலும் சில நேரங்களில் காய்கறி பயிர்களுக்கு இவை போதாது. உயர் மதிப்புள்ள காய்கறி பயிர்களுக்கு நீர்பாசனம் அவசியம். மேனிலை மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. செலவுகள் ஏறக்குறைய ஓரேமாதிரியாக உள்ளன. சொட்டு நீர்ப் பாசனம் இரண்டு நன்மைகளைக் கொண்டுள்ளது. நீர்த் தேவையைக் குறைக்கிறது மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை சமன் செய்கிறது. ஆனால் மேனிலை பாசன முறையை அனைத்து பயிர்களுக்கும் உபயோகிக்கலாம்.
நடவு செய்த மற்றும் காய் பிடிக்கும் காலங்களில் நீர்ப்பாசனம் முக்கியமானதாகும். பெரும்பாலான காய்கறிகளில் தக்க சமயத்தில் பாசனம் செய்யாவிட்டால் தரம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்படும். நீர் பாசன முறை நேரத்தை குறிக்கும் கருவியை உபயோகிக்கலாம். அதாவது, அழுத்தமானி அல்லது ஆவியாதல் முறையை பயன்படுத்தி பாசன நேரத்தை அறியலாம்.

நெகிழி

இந்த முறை பிலாஸ்டிக் ஈரக்காப்புகளுடன் சொட்டுநீர் பாசனம் அமைத்தலாகும். இந்த முறையில் செலவு அதிகம். ஆனால் இந்த முறையால் மட்டுமே புத்தம்புதிய சந்தை காய்கறிகளை பெற முடியும்.

நன்மைகள் : முன்கூட்டியே அறுவடை, ஆரம்ப கால மகசூலை அதிகரிக்கிறது, தரத்தை அதிகரிக்கிறது. மண் அரிப்பினால் ஏற்படும் மண் இடமாற்றத்தை தடுக்கிறது.

அறுவடைக்குப் பின்னர் விளைநிலங்களில் நிரம்பிக் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவது கடினம். இதுவே இதன் குறைபாடாகும்.


மேலே செல்க

Updated on : Aug 2014

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு