-
குளிர்ந்த நீர் எப்பொழுதுமே குளிர்வியில் அடியில் புகுந்து குளிர்வியின் மேலே வெளியே வந்து விடும். நீரை ஊதவோ அல்லது முக்கவோ அவசியம் இல்லை. சூடாகும் முன் தண்ணீர் ஒடுகிறதா என்பதை மட்டும் தெளிவு படுத்திக் கொள்ளவும்
-
காய்ச்சி வடிப்பதற்கு முன் மற்றும் சாதனங்கள் பின் வாங்கும் முன் கண்ணாடியின் மேலே வெப்பநிலையை கண்டறியவும்
-
நிறைய அங்ககங்கள் தண்ணீரில் கலக்காமலும், கரையாமலும் இருக்கும். அதற்காக உபயோகமற்ற கொள்கலம் தேவைப்படுகின்றது. அங்ககத்தை கண்ணாடியினுள் ஊற்றக் கூடாது
-
அங்ககப் பொருள் மற்றும் நீரைப் பிரித்தெடுக்கும் போது ஆய்வின் கருப்பொருள் எதில் உள்ளது என்று உறுதிபடத் தெரியும். வரை அதை வீணாக்கிவிடாமல் சேமித்து வைக்க வேண்டும்
-
கொதிக்கும் குவளை உலர்வதற்கு முன் வடித்து விடுதல் வேண்டும்.
-
போதுமான அளவு மசகையை கண்ணாடி ஒட்டுகளில் போடவும். எதற்காக என்றால் உரைவைக் கட்டுப்படுத்த (அதிகமாக மசகையை போடக்கூடாது ஏன்னென்றால் ஒட்டுகளில் சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்துவிடும்) மற்றும் டெஃளான் நெகிழ்வுக்குழாயை தவிர அனைத்து ஒட்டுகளிலும் போடவும். கண்ணாடி ஒட்டுகள் “திடமான காரம்” (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியன) இவைகளுக்கு மசகையை ஒட்டுதல் மிகவும் அவசியம். செய்முறை முடித்த பிறகு சுத்தம் செய்யத் தவறினால் கண்ணாடியின் மேற்புறத்தில் என்றும் நிரந்தரமான முத்திரை படிந்துவிடும்.
-
எப்பொழுதும் எதிர்விளைவை பாதியிலே விட்டுவிட்டு செல்லக்கூடாது. தற்பொழுது ஆய்வுக்கூடத்தை விட்டு சிறிது நிமிடம் வெளியே செல்ல வேண்டும் என்றால் (ஓய்வு அறை இடைவெளியில்) உங்களில் ஒருவரை அல்லது பயிற்றுனரிடம் எதிர்விளைவையைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்ல வேண்டும்.