-
நான் எப்பொழுதும் தொழில்நுட்ப பணியாளர்கள் கொடுக்கும் அறிவுரைகளையும், வழிகாட்டுகளையும் பின்பற்றுவேன்.
-
பதிவு புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளின் படி எனது தரக் கட்டுப்பாட்டு அளவீடுகளை அமைத்துக் கொள்வேன்.
-
புகை சேகரிப்பான், ஆய்வக இடம், கண்ணாடிக் கருவிகள் மற்றும் கருவியை ஆய்வக வகுப்பு முடியும் போதும் சுத்தம் செய்துவிடுவேன்.
-
நிறைய வகையான கழிவுகளை சரியாக எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதை அறிந்து, அந்தக் கழிவுகளுக்கு முறையாக குறியிடுவேன்.
-
ஆய்வுக்கூட பழக்கங்களை நான் செய்முறைப்படுத்துவேன். இதில் திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருட்களை சரியான இடத்தில் வைப்பது, முறையான பாதுகாப்பு மற்றும் கருவியைக் கையாளுதல்களை முறையாக செயல் படுத்துவேன்.
-
ஆய்வுக்கூடத்தில் நுழையும் முன் நான் ஆய்வக மேற்சட்டையை அணிந்து கொண்டு தான் செல்வேன்.
-
அமிலங்கள், காரங்கள், அரிக்கும் தன்மையுள்ள இரசாயணங்களை பயன்படுத்தும் பொழுது நான் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து கொண்டுதான் பயன்படுத்துவேன்.
-
நான் ஆய்வகத்தில் செய்முறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திட்டமிட்டு செயல்படுவேன். ஆய்வக நேரம் 9.00 – 17.30(திங்கள் – வெள்ளி) வரை. குறிப்பிட்ட நேரத்தை தாண்டினால் என்னிடம் மேற்பார்வையாளர் மற்றும் ஆய்வக பணியாளர் போட்ட கையெப்பம் உள்ள அனுமதித் தாள் உள்ளது. அதில் உள்ள ஆணையின் படி நடந்து கொள்வேன்.
-
ஆய்வுக்கூடத்தில் ஏதேனும் காயம் பட்டாலோ, அல்லது விபத்து நேர்ந்தாலோ உடனடியாக ஆய்வக பணியாளரிடம் அந்த பாதிப்பு ஏற்பட்ட நபரைப் பற்றி தெரிவித்துவிடுவேன்.
-
என்னுடைய வேலை முடிந்தவுடன் தண்ணீர் குழாயையும், மின்சாரத்தையும் அனைத்துவிட்டு தான் வெளியே செல்வேன்.