நன்னெறி ஆய்வக முறைகள் ::ஆய்வகம் தயார்படுத்துதல்


 

  • இரசாயனக் கலவைகள் கையாளும் முறைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆய்வகம் ஒரு கருவியாக திகழ்கிறது. இந்த இரசாயனங்களை சிறப்பான முறையில் கையாளுவதற்கு சில வழிமுறைகள்

  • ஆய்வுக்கூடத்தினுள் நுழையும் முன் ஆய்வுக்கூட சோதனை மற்றும் பல பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையையும் தெரிந்து கொண்டு ஆய்வுக் கூடத்தினுள் நுழையவும்

  • ஆய்வுக்கூட செயல்முறைகளை திட்டமிட்டப்படி முன்கூட்டியே செய்ய வேண்டும் (ஏதாவது இருந்தால்). இவ்வாறு செய்தால் தேவையான கணக்கினையும், முக்கியமான குறிப்பையும் அறிய உதவும்

  • செயல்முறையைப் பற்றி கேள்விகளை பட்டியலிட்டு வைத்து அதனை தெளிவுபடுத்திக் கொள்ளவும். இது ஆய்வுக்கூடத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும்

  • அனைத்து குறிப்புகளையும் அட்டைப்போட்ட பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும். தனித்தாளிளோ அல்லது வளைய சேர்ப்பிலோ பதிவு செய்யக் கூடாது ஏன் என்றால் சில சமங்களில் அந்த நாள்களில் துளைந்து போகக்கூடும்.

  • குறிப்புகள், நிறம் மாறுதல், வெப்பம் ஏற்கும் அல்லது வெப்பம் விடும் மாறுதல்கள், இயல்நிலை மாறுதல்கள், கொதிக்கும் நிலை, உருகு நிலை, உறையும் நிலை ஆகியவற்றை பதிவு செய்வது மிகவும் சிக்கலான ஒன்று

  • விவரக் குறிப்புகளை பார்த்து அந்த செய்முறையையும், எதிர்பார்த்தபடி முடிவுகளையும் எதிர்பார்க்கிறார்களா சந்தேகங்கள் இருந்தால் எந்த இடத்தில் சந்தேகம் இருக்கிறதோ அதனை மீண்டும் செய்து பார்க்க வேண்டும். சொந்த தவறுகளை அறிந்து கொள்வதை விட வேறு நல்ல பாடம் கிடையாது. தவறுகளை கண்டறிந்த பின்னரும் தெளிவில்லாமல் இருந்தால் ஆய்வக பயிற்றுனரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

  • ஆய்வக பயிற்றுனர்கள் செய்முறைகளை சில சமயங்களில் மாணவர்களிடம் தனியாகவோ அல்லது சிறு குழுவாகவோ சேர்த்து சில முக்கியமான ஆய்வக விபரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பார்.

  • கடைசியாக, ஆய்வுக்கூடத்தினுள்  செய்யத்தக்கவையும், செய்யத்தகாதவையையும் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். இது சொந்த பாதுகாப்பு மட்டுமல்லாமல் கூடப்படிக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக அமையும். மாணவர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்பட்டாலோ அல்லது நமக்கு ஏற்பட்டாலோ உடனடியாக ஆய்வகப் பணியாளர்களிடம் சாற வேண்டும். அவ்வாறு செய்தால் அது மிகப் பெரிய உதவியாகக் கருதப்படும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013