அரசு திட்டங்கள் & சேவைகள் :: மாவட்ட அளவிலான வேளாண் திட்டம்

நம் நாட்டின் மாநிலங்களிடையே தமிழ்நாடு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமடைய அதிக அளவில் முயற்சித்து கொண்டிருக்கும் மாநிலமாகும். பொருளாதார அளவில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், பரப்பளவு மற்றும் சில துறைகளில் பின்தங்கியே உள்ளது. நாம் விரும்பும் அளவில் வளர்ச்சி விகிதம் வேளாண் துறையில் கிடைக்க வேண்டும் எனில் வேளாண் துறையின் யுக்திகளை மாற்றியமைப்பதோடு விவசாயிகளை சந்தித்து விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமே வேளாண் துறையின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

வேளாண் துறையை மேம்படுத்துவதற்காக தேசிய வேளாண்மை மேம்பாட்டுத்திட்டம் (NADP) என்ற பெயரில் மத்திய உதவித்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் வேளாண் காரணிகளை அதிக அளவில் நற்பயன் அளிக்க தக்க முறையில் பயன்படுத்துதல், வேளாண் காரணிகளான வேளாண் வானிலை மற்றும் இயற்கை காரணிகள் அடிப்படையில் வேளாண்மை செய்யும் தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லுதல் மற்றும் வேளாண்மை உபதொழில்களான கோழி வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு துறையை வளப்படுத்துதல்.

முன்னேற்றத்திற்கான வழிகள் :

பல்வேறு முன்னேற்ற வழிமுறைகள் மற்றும் அனுகு முறைகளை கையாண்டு பல்வேறு துறைகளின் பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை

  • பயிரிடப்படாத, பயிரிடப்பட்டு உபயோகப்படுத்தப்படாத நிலம் மற்றும் மண் பிரச்சனைகள் உள்ள நிலங்கள் எல்லா மாவட்டங்களிலும் கண்டறியப்படுகின்றன. சிறு விவசாயிகள் அதிக நிலம் கொண்ட விவசாயிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கீழ்வரும் அணுகு முறைகள், முன்னேற்ற வழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
  1. உபயோகிக்காத நிலங்களை குறைத்தல்
  2. உபயோகிக்காமல் வீணாகும் நிலங்களில் செடிகள் அல்லது மரங்களை நடுதல்
  3. விவசாயிகளின் தரத்தை உயர்த்தி அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் பயிர்களை பயிரிடச் செய்தல் அல்லது வேளாண் சார்ந்த உபதொழில்களை மேற்கொள்ள ஊக்குவித்தல்
  4. குறைந்த உற்பத்தி மற்றும் பிரச்சனை உள்ள மணல் பரப்பை மேம்படுத்துதல்

மண்

  1. வளமான மண் பல மாவட்டங்களில் இருப்பதில்லை. மண் வள மேம்பாடு முக்கியமான தேவை. ஏனெனில் உற்பத்தியை உயர்த்த மண் வளம் மிகவும் முக்கியமானதாகும்.
  2. பால் பண்ணை மற்றும் மாடுகள், மீன் வளத்துறை மற்றும் சுகாதாரத்துறையை வேளாண் துறையுடன் ஒருங்கிணைத்தல்.
  3. பயிர் வகைகளை வகைப்படுத்தும்போது உணவு தானிய பாதுகாப்பிற்காக  பணப்பயிர், தோட்டப் பயிர்களாகிய பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களோடு உணவு தானியங்களையும் பயிரிட வேண்டும்..
  4. பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்தல், தழை மற்றும் பசுந்தழை உரங்களை பயன்படுத்துதல் மண்புழு உரம் தயாரிக்க உயிரியல் முறைகளை பயன்படுத்துதல் மற்றும் பயிர் பாதுகாப்பு போன்றவை அங்கக வேளாண்மையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
  5. வேளாண் வனத்துறை, பயிர்கள், தீவனப்பயிர்களை பயிரிட நிலங்களை மாத்தி உபயோகிக்க முயற்சித்தல்
  6. வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் உள்ளோர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
  7. வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான மதிப்பை உயர்த்தி முக்கியத்துவம் அளித்தல்
  8. வானிலையறிந்து பயிரிடுவதற்கு அறிவுரை வழங்குதல்
  9. பயிர்களுக்கு காப்பீடுகளை அறிமுகம் செய்தல் மற்றும் பருவகால பயிர்களுக்கும் காப்பீடுகள் வழங்குதல்

தோட்டக்கலை

  • தோட்டப்பயிர்கள் பயிரிடப்படும் நிலங்களை விரிவுபடுத்துதல்
  • தரிசு நிலங்களை மேம்படுத்தி வறட்சியைத் தாங்கக்கூடிய பழமரங்களை நடுதல்
  • நல்ல தரமான விதைகளை அறிமுகப்படுத்துதல்
  • துல்லிய பண்ணையம் மற்றும்
  • அறுவடைக்குப்பின் நஷ்டத்தைக் குறைத்தல் முக்கியமாக எளிதில் அழுகும் பயிர்களினால் ஏற்படும் நஷ்டத்தைக் குறைத்தல்

வேளாண் தொழில்நுட்பம்

  • இயந்திரங்களை  அதிகம் ஊக்கப்படுத்தி வேலையாட்கள் தட்டுப்பாட்டை குறைத்தல்
  • தண்ணீர் சிக்கனம், நுண் நீர்பாசனம் மற்றும் உரத் தொழில்நுட்பங்களை கையாண்டு தண்ணீர் தட்டுப்பாட்டை வேளாண் துறையில் குறைத்தல் மற்றும் வளங்களை முழுமையாக உபயோகித்தல்
  • நிலங்களை உழுவதற்கு இருக்கும் இயந்திரங்களை சிறு விவசாயிகளும் உபயோகிக்கும் வகையில் வாடகைக்குக் கிடைக்க வழிசெய்தல்.

கால்நடைத் துறை

  • தீவனங்களின் பற்றாக்குறை முக்கியமாக மேய்ப்பு நிலங்கள் குறைதல்
  • ஆடு, மாடுகளை நோய்கள் தாக்குதல்
  • பால் மற்றும் பால் பண்ணைகளின் மதிப்பு பற்றிய அறிவின்மை
  • பால் விநியோகிக்கும் முறையில்லாமை
  • நவீன வளர்ப்பு முறைகள் மற்றும் இயந்திர பால் உற்பத்தி முறைகளை அறியாமை

மீன் வளம்

  • மீன்பிடிக்கும் முறைகளை பிரித்தல்
  • புதிய மீன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய போதிய அறிவின்மை
  • மாங்குரூவ் காடுகள் அழிப்பு
  • குறைந்த செலவில் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி செய்தல்

வேளாண் சந்தையிடுதல்

  • வேளாண் சந்தையிடுதலை மேம்படுத்துதல் மற்றும் சேமிப்புக்கிடங்கு மற்றும் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துதல்
  • சந்தையை ஒழுங்கு படுத்துதல் மற்றும்
  • விவசாயிகள் அமைப்பை அமைக்க விவசாயிகளை ஊக்குவித்தல்

நிவர்த்தி செய்தல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சரிசெய்ய மாவட்ட வேளாண்மை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண்மை

  • அரிசி உற்பத்தி மேம்பாட்டுத்திட்டம்
  • நிலவள மேம்பாடு
  • உர மேலாண்மை – உயிரியல் முறைகளை பயன்படுத்தி பாதுகாத்தல்
  • கலப்பு விதைகளை விநியோகித்தல், போஷாக்குள்ள கலவையை உபயோகித்தல் பசுமையான உர விதைகள் மற்றும் உயிரியல் உரங்களை உபயோகித்தல்
  • வேளாண் மருத்துவ நிலையம் மற்றும் சிறிய மண் பரிசோதனை கூடம் அமைத்தல்
  • நாகரீக பண்ணையம் அமைத்து தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல்
  • மாநில விதைப் பண்ணைகளை பயன்படுத்துதல்
  • பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தல்
  • திருந்திய நெல் சாகுபடி  யை ஊக்குவிக்க குறியீட்டு இயந்திரம் நடுதல் இயந்திரங்களின் பயன்பாடு பரவலாக்கப்பட்ட வேண்டும்
  • தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரிவாக்க நடவடிக்கைகளை தெரிவித்தல்
  • பருப்பு வகைகளுக்காக – DAP
  • விவசாயிகளின் துல்லிய பண்ணையத்தை ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடுதல்
  • பண்ணைய திட்டத்தை குறிப்பிடுதல்

தோட்டக்கலை

  • பயிர்பாதுகாப்பிற்காக சேமிப்பு கிடங்கு வசதிகளை செய்தல்
  • காய்கறிகள் பாதுகாப்பிற்கு சமுதாய நாற்றங்கால் அமைத்தல்
  • குழாய் வசதியுடன் கிணறுகள் அமைத்தல்
  • வாழைக்கும், வெற்றிலைக்குமான திட்டங்கள் தயாரித்தல்
  • மாநிலங்களுக்குள்ளேயே நிலங்களை பார்வையிடுவதற்கு ஆராய்ச்சியாளர்களையும் விவசாயிகளையும் ஊக்குவித்தல்
  • 10 ஹெக்டர் அளவில் மாதிரி பண்ணையம் மாவட்ட அளவில் அமைத்தல்
  • மாவட்ட அளவில் விவசாயிகள் தொழிற்சாலை அமைத்தல்

வேளாண் சந்தையிடுதல் மற்றும் வேளாண் தொழில்

  • சந்தையிடுதலுக்கு பொருட்களை வகைப்படுத்துதல்
  • ஒப்பந்த பண்ணையை எளிதாக்குதல்
  • சந்தை அறிவை வளர்த்தல்
  • சந்தை விரிவாக்க மையங்களை பயன்படுத்துதல்
  • மாநிலங்களுக்குள் அல்லது பிற மாநிலங்களுக்குள் இருக்கும் முக்கிய சந்தைகள் மற்றும் தொழிற்சாலைகளை ஆராய்ச்சியாளர்களை பார்வையிடச் செய்தல்
  • விற்பணையாளர் மற்றும் நுகர்வோர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தல்
  • விவசாயிகளுக்கும் இடை தரகர்களுக்கும் அறுவடைக்குப்பின் பயிர் பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளித்தல்.

வேளாண் தொழில் நுட்பம்

  • வேளாண் இயந்திரங்களை அதிகமாக உற்பத்தி செய்தல்
  • மண் வளத்தை மேம்படுத்துதல்
  • நீர்வள மேலாண்மை மற்றும் நீர் வளத்தை பாதுகாத்தல்
  • நதிநீர் கட்டுப்பாடு
  • கிராமப்புற மேம்பாடு

கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை

    • உணவு மற்றும் தீவனங்களை மேம்படுத்துதல்
    • கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
    • மரபு உயிரினங்களை தரப்படுத்துதல்
    • கால்நடை ஸ்தாபனங்களை விரிவு படுத்துதல்
    • சாதக சூழ்நிலை கணிப்பு
    • விவசாயிகளின் தரத்தை உயர்த்துதல்
    • கால்நடைத் துறையை மேம்படுத்துதல்
    • மீன் விதைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்குதல்
    • உள்கட்டமைப்பு முன்னேற்றம்
    • அலுவலர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்த்தல்

     


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013