தமிழ்நாடு திட்டக்குழுவானது 1971 – ம் ஆண்டு 25ம் தேதி மேமாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார். மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
திட்டக்குழு உறுப்பினர்கள்:
திட்டக்குழுவின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பொதுமக்களில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இத்திட்டக்குழுவில் நிதித்துறை, திட்டக்குழு மற்றும் முன்னேற்றத் துறையில் முன்னால் செயலர்களும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் உறுப்பினர்களின் செயலாளர் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளை வழிநடத்துகிறார்.
திட்டக்குழு மையப்படுத்தும் துறைகள்
- வேளாண் துறை கொள்கை மற்றும் திட்டங்கள்
- தொழிற்சாலைகள் – மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை
- நில உபயோகம்
- ஊரக மேம்பாட்டுத்துறை
- ஆரோக்கியம் மற்றும் சமூக நலத்துறை
- கல்வித்துறை
- மாவட்டத்திட்டக்குழு
- திட்டங்கள் ஒருங்கிணைத்தல்
இத்திட்டக்குழு தன் பொறுப்புகளை தொழில்நுட்ப பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் மூலம் மாநிலத்தின் அந்தந்த முன்னேற்றத்துறைகளுக்குக் கொண்டு சேர்க்கிறது. இதன் தலைமைப் பிரிவிற்கு, திட்ட அதிகாரி தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் திட்ட உதவியாளர்களைக் கொண்ட சிறு குழு ஆதரவு கொடுக்கிறது. இச்சிறு குழுவில் உள்ளவர்கள் பொருளாதாரம், கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளை சார்ந்தவர்களாவார்கள். இந்தப்பிரிவு திட்டக்குழு உறுப்பினர்களோடு இணைக்கப்பட்டு திட்டக்குழு செயல்படுவதற்கு உதவுகிறது.
இக்குழுவின் செயல்பாடுகள்
இக்குழு தொழில்நுட்ப அறிவுரைகளை அரசுக்கு வழங்குகிறது. இதன் செயல்பாடுகள் பின்வருமாறு:
- தொழில்நுட்பத் துறைகளின் செயல்பாடுகளை ஆராய்கிறது
- ஆண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கிறது
- புதிய திட்டங்களை ஆராய்கிறது
- மாநில நில உபயோக வாரியத்திற்கு தொழில்நுட்ப உள்ளீடுகளுக்கு ஆதரவு அளிக்கிறது
- மனித மேம்பாட்டிற்கு திட்டங்கள் வகுக்கிறது
- கல்வி, ஆராய்ச்சி மாநாடு மற்றும் தொழிற்சாலை மூலம் அறிவுச்சேவை செய்கிறது
ஆண்டு திட்டம் மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை கீழ்வரும் இணையதளம் மூலம் அறியலாம்.http://www.tn.gov.in/spc/ |