அரசு திட்டங்கள் & சேவைகள் :: எல்.ஐ.சி - சிறப்புத் திட்டங்கள்

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா
6.7.2009 அன்று தன் 2009-10 ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் 'பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா' என்ற புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இத்திட்டம் முதற்கட்டமாக 50 சதவீததிற்கும் மேல் தாழ்த்தப்பட்ட பிரிவினரைக் கொண்ட 1000 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.

மக்கள் தொகையில் 50 சதவீததிற்கும் மேல் தாழ்த்தப்பட்ட பிரிவினரைக் கொண்ட கிராமங்கள் சுமார் 44,000 உள்ளன. இத்தகைய 1000 கிராமங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற 'பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா' (PMAGY) என்ற முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் பெறும் நிதியுடன் மேலும் ரூபாய் 10 இலட்சம் இக்கிராமங்கள் நிதியுதவி பெறும்.  இத்திட்டத்தின் முதல் கட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியபின் வரும் ஆண்டுகளில் இது மேலும் விரிவுபடுத்தப்படும்.

மேற்கண்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முன்னோடித் திட்டம் அமைச்சகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சர் திரு. நெப்போலியன் அவர்கள் 2009 நவம்பர் 23 அன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013