தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: முல்லை |
||||||||||||||||||||||||||||||||
இரகங்கள் |
தேசிய தோட்டக்கலை இயக்கம் |
|||||||||||||||||||||||||||||||
இரகங்கள் : கோ 1 மற்றும் கோ 2
மண்வகை : நன்கு வடிகால் வசதியுள்ள செம்மண் பூமி ஏற்றது. பருவம் : ஜ¤ன் - டிசம்பர் விதையும் விதைப்பும் இனப்பெருக்கம் : பதியன்பள் வேர்பிடித்து குச்சிகள் நடும் முறை : நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை எடுத்து, குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவேண்டும். பின்பு பதியன்களை குழிகளின் மத்தியில் நடவேண்டும். இடைவெளி : வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் : செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய இராசயன உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும். டிசம்பர் - ஜனவரி ஒர முறையும், ஜ¤ன் - ஜ¤லையிலும் கொடுக்கவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி கவாத்து செய்தல் : ஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் வெட்டிவிடவேண்டும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும். செடி நட்ட இரண்டாம் ஆண்டில் முதல் முறையாக வெட்டிவிடவேண்டும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு பூ மொட்டு புழு : மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி / ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். சிவப்பு சிலந்திப்பூச்சி : நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இலை தின்னும் புழு : இவை இலைகளைக் கண்டபடி கடித்துச் சேதப்படுத்தும். கட்டுப்படுத்த எண்டோசல்பான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அறுவடை மகசூல் : ஒரு எக்டருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் கிடைக்கும்.
|
||||||||||||||||||||||||||||||||
மேலோட்டம் வழங்கல்கனை மேலாண்மை |
||||||||||||||||||||||||||||||||
துல்லிய பண்ணைய விவசாயிகள் பயிர் சாகுபடியாளர்கள் |
||||||||||||||||||||||||||||||||
தேசிய இணையதளங்கள் |
||||||||||||||||||||||||||||||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும் |
||||||||||||||||||||||||||||||||
பழப்பயிர்கள் |
||||||||||||||||||||||||||||||||
| முதல் பக்கம் | நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் | நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் குறைபாடுகள் | உர அட்டவணை | © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 |