பாரம்பரிய வேளாண்மை் :: பஞ்சாங்கம்

கிரிஷி பஞ்சாங்கம்

கிரிஷி பஞ்சாங்கம் அல்லது உழவு - பஞ்சாங்கமானது அடிப்படை  சோதிட விவசாய ஆலோசனை புத்தகம் / காலண்டர் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நூலில், விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த செயல்களின் வேறுபட்ட செயல் குறித்து வழங்கும் அட்டவணை தொகுப்பே, இது, மண்டலம் வாரியாகவும், காலநிலை வாரியாகவும், பயிர் வாரியாகவும் தகவல்களை வழங்குகிறது. சோதிட காலநிலையை அறிந்து பயிர்களின் செய்யக்கூடிய முறைகளை அந்த நேரத்தில் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என அறிவிக்கிறது. மேலும் மதம்சார்ந்த நிகழ்ச்சிகளின் விவரங்கள், விழாக்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சில சோதிடம் சாராத நிகழ்வுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் மற்றும் சில சோதிடம் சாராத நிகழ்வுகள் குறித்தும் விவசாயிகளுக்கும் விவசாய மேம்பாட்டாளர்களுக்கும பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
கிரிஷி பஞ்சாங்கமானது, முக்கியமாக விவசாயிகளின் விவசாய உபயோகத்திற்கான தகவல்களை முதன்மையாக வழங்குவதோடு, அடிப்படை தகவல்களான, ஆண்டு தின காலாண்டு, விடுமுறை நாட்கள், முக்கிய நாட்கள் வரும் ஆண்டுகளில் நடக்கும், விவசாயிகளும் உபயோகமான சில நிகழ்வுகள் குறித்தும் அளிக்கிறது. இதில் வழங்கும் நிகழ்வுகளினை இரண்டு வகையாக பிரித்து வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டு மாறும் தகவல்கள்

  • ஆண்டு நாட்கள் மற்றும் விடுமுறை நாள் விவரங்கள்
  • ஒரு ஆண்டு முழுவதற்குமான, மாத வாரியான நாள் குறிப்புகள்
  • மாத வாரியான நட்சத்திர பலாபலன்கள்
  • ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான, தினசரி/மாதாந்தர/ஆண்டு வானிலை முன்னறிவுப்புகள்
  • கோள்களின் நிலைவைத்து அவ்வாண்டிற்றகான பயிர் முறைகள்
  • முன்னறிவிப்பு செய்யப்பட்ட வானிலையை அடிப்படையாக கொண்டு பயிர் பருவ நிலைகள்.

எந்த ஆண்டிலும் மாறாத தகவல்கள்

  • விவசாயம் மற்றும் காலநிலை முன்னறிவுப்புகள் தொடர்பான விதிகள்.
  • விவசாயம் மற்றும அதை சார்ந்த செயல்களின் நடக்கக்கூடிய நிகழ்வுகள்.
  • பொதுவான விவசாய ஆலோசனைகள்.

ராஷ்டீரிய பஞ்சாங்கம்

ராஷ்டீரிய பஞ்சாங்கமானது 1879 சக ஆண்டிலிருந்து (1957 - 58), சோதிட நிலை மையத்திலிருந்து வெளியிடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது, நாட்டின் பல்வேறு பகுதிகளால் வேறுபட்ட செயல்பாடுகள் கொண்ட காலண்டர் முறைகளை ஒழுங்குபடுத்துதலுடன், பஞ்சாங்க கணக்குகளை அறிவியல் ரீதியாக செய்ய ஊக்கப்படுத்துவதும் ஆகும். இது இந்திய மொழிகளான ஹிந்தி மற்றும் ஆங்கிலம் நீங்கலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி,கன்னடம்,மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகள் வெளியிடப்படுகிறது.
இந்தியாவிலுள்ள 24 நிலையத்திலிருந்து சூரிய உதயம், சூரியன் மறைவு, சந்திரன் உதயம் மற்றும் சந்திரன் மறைவு, திதிகள், நட்சத்திரங்கள், யோகங்கள் மற்றும் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கிள்ன சுழற்சிகள் குறித்து, துல்லியமாக கணினி கொண்டும், அடிப்படை அறிவியல் விதிகளைக் கொண்டும் கணக்கிடப்படுகிறது. பயனாளிகளின் நலனுக்காக, முக்கிய தகவல்களின் கணக்கீட்டை விவரித்தும் வழங்குகிறது. ஜ¤லியன் நாள், காளி அகர்கனா, சந்திரனின் வயது, மற்றும் நிலைகள் குறித்து ஒவ்வொரு நாள்களுக்கும் மற்றும் முக்கிய விழாக்கள், ஆண்டுகள் குறித்து தகவல்களை அளிக்கிறது. இது ஒரு தரமான பஞ்சாங்க தகவல்கள் நாட்டிற்கு வழங்குவதோடு, காலண்டர் தகவல்களை வழங்கும் நூலாகும். இதன் வெளியீட்டு புத்தகங்களை, அரசின் பல்வேறு நிலையங்களில் பெறலாம்.

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம் என்பது அறிவியல் ரீதியான இந்து காலண்டர். இது பழைய வேத கால சோதிட கலையாக கணக்கிடப்பட்டு, அது நல்ல நாட்கள், நேரம் அறிய உதவியது. தமிழ் பஞ்சாங்கம் ‘பஞ்ச்’ மற்றும் ‘ஆங்’ என்றவார்த்தைகளிலிருந்து தோன்றியது. கோள்கள் மற்றும் கடவுளை ஏழு நாட்கள் கொண்ட நான்கு வாரங்களாக அறியப்பட்டது. அதனால், இது ஐந்து வகைகளான - வாரம் அல்லது சூரிய நாள், திதி/சந்திர நாள், நட்சத்திரா யோகம் மற்றும் கரண் உள்ளடக்கியது.
இது புதிய முறைகளை விட, மிகவும் துல்லியமாக செயல்முறைக்கு ஏற்ற பயணம், அன்பு/உறவு, விருந்து, இடமாற்றம், நேர்காணல், தொழிலுக்கு செய்யக்கூடிய நல்ல நாட்கள் நேரத்தை அறிய உதவுகிறது. அமிர்தம், சித்தம் மற்றும் சுபம் என்ற அழைக்கப்படும் நேரங்களில் எந்த வேலையை புதியதாகத் தொடங்க வேண்டும். தமிழ் பஞ்சாங்கம் எப்போது, கடவுள் மற்றும் மதம் சார்ந்து வாழ்க்கை கொண்டு செல்வதை விவரிக்கிறது.
இந்திய சோதிடர்கள், ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளை சிறிய கணிதமும் மூலம் கோள்களின் நிலை அறிந்து கணிக்கின்றனர். பொது மனிதன், சோதிடர் அளவில் தமிழ் பஞ்சாங்கத்தை புரிந்துக் கொள்ள தேவையில்லை ஆனால் வாழ்க்கை நல்லபடி நடத்திச் செல்ல, ‘பலிடா’ - வை கணக்கிட அளித்து இருக்க வேண்டும். ‘பலிடா’ வை அறிந்து கொள்ள உதவபவையே ஐந்து உடல்களே இவை.பஞ்சாங்கத்தின் ஐந்து உடல்களான, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் மற்றும் வாரங்கள் ஆகும்.

tamil panchangam

திதி : வெளிச்ச பாதியில் 15 ஆவது நாள்  பூர்ணிமா, பெளர்ணிமா அல்லது பெளர்ணம்சாசி என்றழைக்கப்படுகிறது. இருண்ட பாதியில் 15 ஆவது நாள் அமாவாசை என்றழைக்கப்படுகிறது.‘கோகு’ என்பதில் நிலா இராது ‘சினிவாலி’ என்பதில் நிலா பாதி இராது. இது பொதுவாக தேய்பிறை என்றழைக்கப்படுகிறது. 4,9 மற்றும 14 ஆம் நாள் ‘ரிக்டா’ என்றழைக்கப்படுகிறது. இந்த நாள்களில் எந்த புதிய வேலையும் தொடங்கக்கூடாது.

வாரம்: ஏழு முக்கிய கோள்களை கொண்டு, வாரத்தின் நாட்களாக்கப்பட்டது. அதாவது சூரியன், பூமி, வியாழன், புதன், செவ்வாய், வெள்ளி மற்றும் சனி, என்ற கோள்களின் பெயருடன் விவரிக்கப்படுகிறது. மேலும் பொதுவான, அந்தந்த கோள்களின் தன்மையைப் பொறுத்து அந்த வாரங்கள் அமைவதாக நம்பப்படுகிறது.

ராசி: சூரியனின் வளிமண்டலத்தின் 12 கற்பனை பாதைகளைக் கொண்டு 12 இராசிகளாக அறியப்படுகிறது. அதை மேஷம், சிம்மம் போன்ற 12 சூரியனானது ஒரு இராசியை ஒரு இராசியைக் கடக்க சுமாராக ஒரு மாதத்தை எடுத்துக் கொள்கிறது.

நட்சத்திரம்: கோள்களின் நிலையை வைத்து நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது. சந்திரனின் பாதையில் 27/28  நட்சத்திரங்கள் நிலையான வரிசையில் வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 9 தொடர்ச்சியான நட்சத்திர பாதங்கள் ஒரு இராசியின் கீழ் வருகிறது.
இந்துக்களின் கணக்குப்படி, 365 1/4 நாட்கள் பூமியானது சூரியனை வலம் வர எடுத்துக் கொள்கிறது. மேலும் சூரிய காலண்டரை தொடர்புபடுத்தி பார்க்கும் போது, சந்திரனானது ஒரு ஆண்டில் 7 நாட்கள் பூமியைச் சுற்றிவருகிறது.
தமிழ் பஞ்சாங்கத்தில், சந்திர காலண்டரை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆண்டில் 12 மாதங்கள், ‘ஆயான்’ நிலைக்கு வருகிறது. அல்லது சூரிய கணக்கீட்டின்படி, ஒரு மாதம் மூன்று ஆண்டு ஒரு முறை அதிகமாக வருகிறது. இரண்டு அடுத்தடுத்து, சூரியன் உதிக்கும் நாட்களுக்கு இடைப்பட்ட சூரிய நாள் அல்லது டின் எனப்படுகிறது. மேலும் இரண்டு அடுத்தடுத்து சந்திரன் உதிக்கும் நாட்களுக்கு இடைப்பட்ட நேரத்தை சந்திர நாள் அல்லது திதி எனப்படுகிறது.
‘சுகலாபாக்சா’ - என்றழைக்கப்படும் முதல் பாதி 15 நாட்களான பெளர்ணமியையும், ‘கிருஷ்ணபாக்சா’  என்று முதல் பாதி 15 நாட்களான இருண்ட நாட்களான அமாவாசையையும் கருதப்படுகிறது

tamil panchangam2

.விவசாய பஞ்சாங்கம்:
விவசாய பஞ்சாங்கமானது, ஆசார்யா என்.ஜி.ரங்கா விவசாய பல்கழைக்கழகத்தினால், தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநிலத்தின் முதல்வரால், தெலுங்கு ஆண்டு பிறப்பில் வெளியிடப்படுகிறது.
இதில், விவசாய பயிர்கள், மானாவாரி விவசாயம், நீர், மண், நீர் மற்றும் மண்  ஆய்வு முறைகள், ‘பிளாஷ்டிக்’ விவசாய பயன்பாடுகள், புதிய விவசாய கருவிகள், உலக வணிக அமைப்பின் விவசாய நிலை, உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாடு, பட்டுப்புழு வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மண்புழு உரம், மண் திறம்படுத்துதல், கரையான் மற்றும் அதை கட்டுப்படுத்துதல், காலநிலை கொண்டு விவசாய ஆலோசனை முறை, பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகள் மற்றும் உரங்களின் செயல்பாடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் மற்றும் இறால் வளர்ப்பு, கால்நடை தீவனப்பயிர்கள் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மனையியல் தகவல்கள், குழந்தை கல்வி, குறைந்த விலையான ஆற்றல் சேமிப்பு முறைகள், இயற்கை சாயங்கள், நுண்ணீர்ப் பாசனம், துணிகளில் உள்ள கறைகளை நீக்குதல் போன்றவைகள் குறித்து அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் புதிய மேம்பாட்டுகளினை திருத்தி வெளியிடுகிறது. இதில் முக்கியமாக, விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளின் தொழில்நுட்பங்களை அறிவியல் ரீதியாக முழுவதுமாக வழங்குகிறது.

http://www.angrau.net/vpan2005.htm

Vyavasaya
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014