தவேப வேளாண் இணைய தளம் :: பாரம்பரிய வேளாண்மை

கோழியினங்களில் முதல் உதவி மூலிகை மருத்துவம்

கோழி அம்மை நோய் (Fowl pox)
கோழி அம்மை நோய், கோழியினங்களை தாக்கும் ஒரு நச்சுயிரி நோயாகும். இந்நோயை தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் பயன்படுத்த வேண்டும். நோய் கண்ட நிலையில் மூலிகை முதல் உதவி மருத்துவம் நல்ல பலன் தரும்.
10 கோழிகள் அல்லது 5 வான்கோழிகளுக்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள்
வெளிப்பூச்சுக்கான மருந்து

பூண்டு  -   10 பல்
துளசி இலை -   50 கிராம்
வேம்பு இலை -   50 கிராம்
மஞ்சள் தூள்  -   10 கிராம்
சூடம்   -   50 கிராம்
சின்ன சீரகம் (இடித்து சலித்தது) -   20 கிராம்

சிகிச்சை முறை :
மேற்கண்ட பொருட்களை நன்கு அரைத்து அக்கலவையுடன் விளக்கெண்ணெய் – 100 மி.லி மற்றும் வேப்பஎண்ணெய் – 100 மி.லி. சம அளவில் கலந்து சிறிது சூடு காட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும்.
உட் செலுத்துதல் (வாய் வழியாக)

சின்ன சீரகம்  -   10 கிராம்
மஞ்சள்  -   5 கிராம்
மிளகு  -   5 எண்ணிக்கை
பூண்டு -   5 பல்
வேப்பிலை -   10 இலைகள்
துளசி -   10 இலைகள்

சிகிச்சை முறை :
மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உள்ளே செலுத்த வேண்டும்.

வெள்ளைக் கழிச்சல்  நோய் (Ranikhet Disease)
வெள்ளைக் கழிச்சல் நோய், கோழியினங்களை தாக்கி மிகவும் பாதிப்பு எற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும். முதல் வாரத்திலும் அதை தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு செய்ய வேண்டும். நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம்.
10 கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்குத் தேவைப்படும் மூலிகை மற்றும் பொருட்கள்:

சின்ன சீரகம்  -   10 கிராம்
மிளகு  -   5 கிராம்
மஞ்சள் தூள் -   50 கிராம்
கீழாநெல்லி இலை  -   50 கிராம்
வெங்காயம் -   5 பல்
பூண்டு  -   5 பல்

சிகிச்சை முறை : வாய் வழியாக
சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்க சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்த வேண்டும்.

கழிச்சல் (Enteritis)
10  கோழிகள் அல்லது 5 வான் கோழிகளுக்கு ( வாய் வழியாக)

சின்ன சீரகம்  -   10 கிராம்
கசகசா  -   5 கிராம்
வெந்தயம் -   5 கிராம்
மிளகு -   5 எண்ணிக்கை
மஞ்சள் தூள் -   5 கிராம்
பெருங்காயம் -   5 கிராம்

மேற்கண்ட பொருட்களை கருக வறுத்து இடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் – 5 பல் பூண்டு – 5 பல் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
நன்கு அரைத்த பொருட்களை இடித்த பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும்.

Updated on Dec, 2014
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014