மூலிகை மருந்துகளின் மரபுவழியில் சொல்லப்பட்ட தனி மருத்துவ குணங்கள்
மஞ்சள் : கிருமி நாசினி, வீக்கம், வண்டுகடி, பெரும்புண், நீரேற்றம், தலைவலி, வாந்தி இவை நீங்கும். பசியுண்டாகும்.
சீரகம் : ஈரல் நோய், வயிற்று வலி, வாய்நோய், கல்லடைப்பு, குருதி கழிச்சல், இரைப்பு, காமாலை இவை நீங்கும்.
இஞ்சி : பித்தம், வாதசூலை, செரியாமை, பசியின்மை, இருமல், ஈளை, மூக்குற்றம் நீங்கும்.
வெந்தயம் : சீதக்கழிச்சல், உடல் எரிச்சல், குருதி அழல், இருமல், வெள்ளைப்படுதல், இளைப்பு நோய், நீங்கும் ஆண்டை உண்டாகும்.
பிரண்டை : குருதி மூலம், ஆசன வாய் கடுப்பு, தினவு, குன்மம், மூலம், குருதிக் கழிச்சல், மந்தம் நீங்கும், பசி உண்டாகும்.
வெற்றிலை : செரியாமை, காணாக்கடி, சிறுநஞ்சு, உணவினால் உண்டான நஞ்சு, தேள்கடி நஞ்சு இவை தீரும்.
மிளகாய் : ஆண்மை பெருகும், சுவையின்மை நீங்கும், வயிற்று நோய், வயிற்றுப்படிப்பு, மந்தம் நீங்கும்.
இலுப்பை எண்ணெய் : இடுப்பு வலி, வாய்புண், வாதவலி நீங்கும்.
பெருங்காயம் : பாம்பு நஞ்சு, தேள் நஞ்சு, வாதம், சூதகவாயு, வாயு, குன்மம், நுண்புழு இவை நீங்கும்.
மிளகு : காமாலை, செரியாமை, ரத்தகுன்மம், குன்மம், மூலம், இருமல், பக்கவாதம், காச நோய் நீங்கும்.
புளி : வாந்தி, வெப்ப நோய், விடக்கடி தீரும்.
கீழாநெல்லி: காமாலை, பித்தம், கண்நோய், குருதிக் கழிச்சல், மேகம் நீங்கும்.
துளசி : பீனிசம், வெப்பம், சளி, இருமல் இவை நீங்கும்.
வேம்பு : வயிற்றுப்புழு, பெருநோய், மாந்தம், நஞ்சுசுரம், அம்மைநோய், சொறி சிரங்கு தீரும்.
வேப்ப எண்ணெய் : கரப்பான், சிரங்கு, முன்இசிவு, பின் இசிவு, பெருவாதம், கழலை நீங்கும்.
கற்றாழை : கிருமி, குத்தல், குடைச்சல், கரும்படை, கருமேகம், மூலம் குன்மம், கருப்பைசுத்தி
பூண்டு : கட்டிகள், சொறி சிரங்கு, இருமல், இரைப்பு, வயிற்றுப்புழு, வாதநோய், சீதக் கழிச்சல் நீங்கும், ஆண்மை உண்டாகும்.
ஆமணக்கு எண்ணெய் : கழிச்சல், வயிற்று வலி, எருக்கட்டி, வாதவலி, இரைப்பு, இருமல், பசியின்மை நீங்கும்.
சுண்ணாம்பு : அழுகிய புண், தீ சுட்ட புண், வாதநீர் கட்டு, செரியாமை, நீர்பேதி, வி-ம், இரத்தப்பெருக்கு, சிரங்கு, நமைச்சல் இவை நீங்கும்.
உப்பு : கல்லீரல் நோய், வாதம், பித்தம், குன்மம் நோய், அடிப்பட்ட வீக்கம், ரத்தக்கட்டு இவை நீங்கும்.
மருத்துவ குண ஆதாரம்
- மூலிகை குணபாடம் – ஆசிரியர் முருகேச முதலியார் (அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை)
- குணபாடம் II பகுதி (தாவர வர்க்கம், ஜீவ வர்க்கம்)
-ஆசரியிர் யூ.தியாகராஜன், L.I.M.,
தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகசா சங்கம், அம்பத்தூர், சென்னை வள்ளலார் ஞான மூலிகைகள் அருகம்புல், வல்லாரை, முசுமுசுக்கை, கையாந்தகரை, சிறுசெருப்படை திருமூலர் ஞான மூலிகைகள் காக்கை கரந்தை கருநீலி பொற்கையான் வாக்கிற்கினிய வல்லாரை இவையைந்தையும் பாக்களவு பாலில் உண்ண ஆக்கைக்கு இல்லை அழிவு ஆயிரத்தெட்டாண்டு கள அளவில் உள்ள நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் கால்நடைகளுக்கு மரபு வழியில் சேவை புரியும் மரபுவழி கால்நடை மருத்துவர்கள் கூட்டம் ஒன்ற தஞ்சையில் நடத்தப்பெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 20 கால்நடை மூலிகை மருத்துவ ஆலோசகர்கள் கலந்து கொண்டு தங்களுடைய மூலிகை மருத்துவ முறை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அது பற்றிய விபரங்கள்
குடற்புழு
- பெரியநங்கை அரைத்து கொடுக்க வேண்டும்.
- குப்பை மேனியுடன் உப்பு சேர்த்து அரைத்து கொடுக்கவும்
- வெற்றிலை சாறுடன் மிதிபாகைச்சாறு சம அளவு சேர்த்து 200 மி.லி சாறு கொடுக்கவும்
- பிரண்டை, மேய்பீர்க்கன், புரசவிதை அரைத்து கொடுக்கவும்.
- சோற்றுக்கற்றாழையும், விளக்கெண்ணையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
குளம்புப் புண்
- வெந்நீரில் கழுவி நீரை ஒற்றி எடுத்தப் பிறகு வேப்ப எண்ணெய் + மஞ்சள் சேர்த்து தடவி வர வேண்டும்.
புழுவைத்த புண்
- குப்பை மேனியுடன் உப்பு அரைத்து கட்ட வேண்டும்.
- நிலக்கடம்புடன் சூடம் அரைத்து வைக்க வேண்டும்.
கிருமிநாசினி
- காட்டு துத்தி இலையை அரைத்து வைக்கவும்.
- அவுரி இலையை கசாயம் வைத்து கழுவவும்.
வயிறு உப்புசம்
- இஞ்சி, சலாசத்து புடம் போட்டு ஒரு கையளவு வைத்து உள்ளே கொடுக்கவும்.
- முருங்கை கீரை அரைத்து உப்பு சேர்த்து உள்ளே கொடுக்கவும்.
கழிச்சல்
வாழைப்பூ (நரம்பு எடுத்தது) + தென்னம்பாளை + மஞ்சள் தூள் மற்றும் கடுக்காய்பூ, இடித்து தேன் கலந்து கொடுக்கவும்.
நாட்டுக்கோழி வெள்ளை கழிச்சல்
சீரகம் இடித்து சுண்டைக்காய் அளவு உள்ளே புகட்ட வேண்டும். அரிசிக் குருணை மட்டும் வைக்கவும் இரண்டு மணிநேரம் குடிநீர் வைக்கக்கூடாது.
வான்கோழி வெள்ளை கழிச்சல்
கீழாநெல்லி இலை 5 கிராம் + சீரகம் 5 கிராம் + 2 சின்ன வெங்காயம் அரைத்து உள்ளே கொடுக்கவும். தீவனம் மட்டும் கொடுக்கவும். இரண்டு மணி நேரம் தண்ணீர் கொடுக்கக்கூடாது.
இரத்த கழிச்சல்
வெங்காயம்+ சீரகம் அரைத்துக் கொடுக்கவும்.
ஆடு கழிச்சல்
மாங்கொட்டை பருப்பு + தேன் அரைத்து உள்ளே கொடுக்கவும்.
அரிசி அல்லது நெல் அதிகமாக உண்டதால் வயிறு உப்புசம்
வசம்பு ஒரு துண்டு இடித்து நீரில் கலந்து கொடுக்கவும். வெல்லம் + வெற்றிலை அரைத்து உள்ளே கொடுக்கவும்.
எண்ணெய் குடித்து விட்டால்
அரிசி களைந்த நீரில் புளி அரைத்து கொடுக்கவும்.
கோமாரி
- வாயை உப்புபோட்டு கழுவ வேண்டும்.
- மொந்தன் வாழைப்பழம், சாப்பாட்டு நெய், நாட்டுச் சர்க்கரை மூன்றையும் 2 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
- வெந்தயம் (50 கிராம்) ஊற வைத்து, தேங்காய் துருவல், மஞ்சள் தூள் அவற்றை ஆட்டுக்கல்லில் அரைத்து உள்ளே கொடுக்கவும்.
- தேங்காய் துருவல், பச்சை மஞ்சள், பிரண்டை சேர்த்து அரைத்து உள்ளே கொடுக்கவும்.
- வாழைப்பழம் + நல்லெண்ணெய் கொடுக்கவும்.
காயத்திற்கு
- சோற்றுக்கற்றாழை, வேப்ப எண்ணெய், மஞ்சள் சேர்த்து போடவும்.
- பச்சை கொத்தமல்லி தழை + வெண்ணெய் அரைத்து போடவும்.
- அகத்தி கீரை அரைத்து போடவும்.
அடிப்பட்ட வீக்கம்
- தவசு முருங்கை இலையை அரைத்து போட்டு தண்ணீர் விட வேண்டும்.
- தேள் கொடுக்கு இலை, உப்பு வைத்து அரைத்து தடவ வேண்டும்.
(புண் உடைந்தால் குப்பைனேமி (அ) வாத மடக்கி வைத்து கட்ட வேண்டும்)
- மஞ்சள், புளி, கரியாபோளம், உப்பு கொதிக்க வைத்து நல்லெண்ணெய் விட்டு பத்து போடவும்.
- விராலி இலை வதக்கி கட்டலாம்.
உண்ணி
- தும்பைச் சாறு மேலே தடவ வேண்டும்.
- கடலெண்ணெய் + கடுகு தேய்த்து 1 மணி நேரத்தில் குளிப்பாட்டவும்.
- தும்பை பூண்டு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
- புகையிலையை தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்
சினைபிடிக்காமை
- வெள்ளை முள்ளங்கி ஒரு வாரத்திற்கு தினம் ஒன்று வீதம் கொடுத்துவிட வேண்டும்.
- மருதாணி (எலுமிச்சை அளவு) அரைத்து 3 நாட்களுக்கு கொடுக்கவும்
வழு அடிக்காத மாடு
- தலைச்சுருளி இலை + கொள்ளு அரைத்து வேப்ப எண்ணெய் கலந்து 1 (அ) 2 நாட்களுக்கு உள்ளே கொடுக்கவும்.
விஷக்கடி
- நீலி வேர், வெற்றிலை, மதிபாகை கொதிக்க வைத்து கசாயம் கொடுக்கவும்
- கருடன் கிழங்கு, தலைசுருளி, மிளகு இடித்து கொடுக்கவும்
- கெரியாநங்கை (சமூலம்), வெற்றிலை, மிளகு உள்ளுக்கு கொடுத்து சாம்பலை மேலே தடவவும்.
- துத்தி விதை 100 கி. ஆடுதின்னா பாலைச் சாறு 20 மிலி (4 இலை) மிளகு 50 கி அரைத்து கொடுக்கவும்.
மூட்டு வீக்கம்
தவசி முருங்கை பத்து போடவும்.
மூலிகை மருத்துவம் குறித்த மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
மரபுசார் மூலிகைவழி கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கூடம்,
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613 006.
தொலைபேசி எண் : 04362-255462
|