முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: கேள்வி - பதில்

அரசு சாரா நிறுவனம் என்றால் என்ன?

அரசு சாரா நிறுவனங்கள் என்பது அரசு ஒத்துழைப்பின்றி, தனி நபர் அல்லது நிறுவனங்களால் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்கள் அரசு நிதி மொத்தமாகவோ அல்லது ஓர் பங்கு ஒதுக்கீடு மூலம் இயக்கப்படுகிறது.

பதிவுச் சட்டத்தின் பெயர் யாது?

சங்கம் - சங்க பதிவுச் சட்டம்
அறக்கட்டளை - இந்திய அறக்கட்டளை சட்டம்

எங்கு பதிவு செய்வது?

தலைமை அலுவலகம்
பதிவு தலைமை அலுவலர்
எண் 100, சாந்தோம் நெடுஞ்சாலை
சென்னை 600 028
தொலைபேசி 91-44-24640160
தொலைநகல்:91-44-24942774
மின்னஞ்சல் : igregn@tnreginet.net

சங்கத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் ?

7 முதல் 9 உறுப்பினர்கள் ஆவர். 9 உறுப்பினர்களுக்கு மேல் கிடையாது.

கோயம்புத்தூரில் பதிவு அலுவலகம் எங்கு அமைந்துள்ளது ?

மாவட்ட பதிவு அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோயம்புத்தூர்

அரசு சாரா நிறுவனங்கள் லாபத்திற்காக அல்ல? அவற்றில் லாபத்தைக் காண முடியுமா ?

ஆமாம். மிகை அல்லது லாபமற்றது என்று கூறலாம். நிறுவனங்களின் லாபங்களை ஈவுத் தொகையாக வழங்குவது போல, அரசு சாரா நிறுவனங்கள் மிகையான தொகையை விநியோகிக்காது.

ஒருவர் அல்லது குறைந்த பணியாளர்களுடன் பணி செய்ய இயலுமா ?

ஆம். பல நிறுவனங்கள் தொண்டூழியருடன் உதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மூலதனம் என்றால் என்ன?
வெளிநாட்டு மூலதனம் என்பது வெளிநாட்டு எல்லைப்பகுதி அல்லது முகாம் சர்வதேச முகாம், வெளிநாட்டு நிறுவனம் அல்லது வெளிநாட்டின் குடிமகன் ஆகும். மேலும் விரிவான விவரங்களுக்கு, பிரிவு 2(1) (இ) வெளிநாட்டு பங்களிப்பு சட்டம், 1976.

வெளிநாட்டு பங்களிப்பு யாருக்கு கிடைக்காது ?

வெளிநாட்டு பங்களிப்பு தேர்தல் வேட்பாளர்கள், தாளாளர், பத்தியாளர், காட்டுனிஸ்ட், பதிப்பாளர், உரிமையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் நீதிபதி அரசு அலுவலர் அல்லது மாநகராட்சி பணியாளர்கள் சட்டசபை உறுப்பினர் அரசுக் கட்சி அலுவலர்கள் ஆகியோருக்கு கிடைக்காது.

வெளிநாட்டு பங்களிப்பு யாருக்கு கிடைக்கும்?

வெளிநாட்டு பங்களிப்பு எந்த ஒரு சங்கம் பண்பாடு, பொருளாதாரக் கல்வி, மதம் மற்றும் சமூகத் திட்டத்துடன் செயல்பட்டு மற்றும் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற்றதோ அவற்றிற்கு வழங்கப்படும்.

அனைத்து அரசுச் சாரா நிறுவனங்களும் நம்பகமானதா ?

அரசு சாரா நிறுவனங்கள் மக்களால் உருவாக்கப்பட்டதாகும். அனைத்து நிறுவனங்களைப் போல இவற்றிலும் நன்மை தீமை இருக்கும். அரசு சாரா நிறுவனங்களுக்கு நம்பகத்தன்மை இழந்து கொண்டு வருகிறது. ஏனெனில், சுய வருமானம் இல்லாமல் மற்றவர்களின் நன்கொடை நம்பியே இயக்கப்படுகிறது.

அரசு சாரா நிறுவனங்களின் அளவுகோல் யாது ?

அரசு சாரா நிறுவனங்களின் அளவு நிதி மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.

கிரை என்பது அதிக நிதி வழங்கும் நிறுவனமாகும். பல நாடுகளான 171 கூட்டு நிறுவனத்துடன் பணியாற்றுகிறது. இந்நிறுவனம் 150 நபர்களைப் பணியில் அமர்த்தி உள்ளது.

அரசு சாரா அமைப்புகளின் உதாரணமான அளவுகள்:
அரசு சாரா அமைப்புகளின் அளவு அதன் நடவடிக்கை மற்றும் நிதி அறிக்கையைச் சார்ந்தது. உதாரணமாக சி.ஆர்.ஒய் (CRY) ஆனது அதிக நிதிகளை மற்றும் செயல்படும் ஒரு அமைப்பாகும். இது நாட்டில் உள்ள 171 கூட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகுிறது. சி.ஆர்.ஒய் யில் 150 பணியாளர்கள் உள்ளார்கள். இந்த அமைப்பு செயல்படுத்தும் திட்டங்களை பொறுத்து பணியாளர்களின் எண்ணிக்கை மாறும்.
பொதுவாக நாட்டிலுள்ள அரசு சாரா அமைப்புகளில் பக்கத்திற்கு குறைவான நபர்களே பணிபுரிகிறார்கள்.

சமூக மாற்றத்தை உருவாக்கும் பணி அரசு சாரா அமைப்புகளுக்கு முக்கியமாக உள்ளதன் காரணம்?
தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசின் நிதி உதவிகள் அரசு சாரா அமைப்புகளின் மூலமே சமுதாயத்திற்கு சென்றடைகிறது. இதனாலேயே அரசு சாரா அமைப்புகளின் பணி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015