தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: இந்திய சமுதாய ஆணை

இந்திய சமுதாய ஆணை :

இந்திய சங்கத் திட்டம் மே மாதம் 21, 1860 ஆம் ஆண்டு சட்ட எண் 21ன் கீழ் துவங்கப்பட்டதாகும். இச்சட்டம் கலை, அறிவியல் மற்றும் நற்பணி சங்கங்களை பதிவு செய்யும் சட்டமாகும். சங்கப் பதிவுச் சட்டம் என்பது மையச் சட்டமாகும்.
பின்வரும் சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளலாம்.

நற்பணிச் சங்கம்

  • இராணுவ அனாதைக்கான நிதி மற்றும் சங்கங்கள்
  • அறிவியல், கலை, இலக்கியம் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதற்கான சட்டங்கள்
  • புலமை அறிவு அல்லது அரசியல் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சங்கங்கள்.
  • பொது மக்களுக்காக படிக்கும் துறை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள்.
  • வரலாற்றுச் சேகரிப்பு இயந்திர மற்றும் மெய்யியல் கண்டுபிடிப்புகள் பொது அருங்காட்சியகம் மற்றும் கலை சம்மந்தப்பட்ட காட்சியாக மேம்பாட்டிற்கான உருவாக்கப்பட்ட சங்கங்கள்

பதிவு

சுமார் ஏழு நபர்கள் அல்லது ஏழுக்கு மேல் இலக்கிய, அறிவியல் மற்றும் நற்பணிச் சார்ந்த ஏழு நபர்கள் தங்களது பெயர்களை ஒப்பந்த சங்கத்தில் சந்தா செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

வருடாந்திர கோப்பு மேற்கொள்ளும் நிர்வாகச் சபையின் பட்டியல்

வருடாந்திர பொதுக் கூட்டம் முடிந்த 14 நாட்களுக்குள் வருடாந்திர நிர்வாகச் சபையை கோப்பில் இணைக்கவேண்டும். வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறவில்லை என்றால், ஆண்டு தோறும் சனவரி மாதம் கோப்பு மேற்கொள்ளவேண்டும். ஆளுநர், மன்றம், இயக்குநர், குழுக்கள், அறங்காவலர்கள் ஆகியோர் நிர்வாகச் சபையில் அடங்குவர்.

சங்க உறுப்பினர்கள்

எவர் ஒருவர் சங்க விதிமுறைகளை ஏற்று, சந்தா செலுத்துகிறாரோ அவரே சங்க உறுப்பினர் ஆவர்.

விரிவாக்கம், மாற்றம், ஒற்றுமை மற்றும் கலைப்பு

வருடாந்திர பொதுக்கூட்டம் உறுப்பினர் அங்கீகரித்த பிறகு சங்கத்தில் மாற்றம், விரிவாக்கம் மற்றும் சங்கத்துடன் இணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

மூலதனம் : http://datevys.com/gener13.htm

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015